பரதநாட்டியம் தமிழரின் கலையே! – மயிலை சீனி.வேங்கடசாமி   பாரத நாட்டிலே பல நாட்டியக் கலைகள் உள்ளன. அவற்றில் பரதநாட்டியம், கதக், கதகளி, மணிபுரி நாட்டியங்கள் பேர் போனவை.   இவற்றில் தலைசிறந்த உயர்ந்த கலையாக விளங்குவது பரதநாட்டியம். இதைத் தமிழனின் தற்புகழ்ச்சி என்றோ, முகமன் உரை என்றோ யாரும் கருதக்கூடாது. உவத்தல் வெறுத்தல் இல்லாத மேல்நாட்டு ஆசிரியர் கூறும் கருத்தையே கூறுகிறேன். “இந்திய நடனங்களிலே பெருமிதம் உடையது (தலைசிறந்தது) பரத நாட்டியம்” என்று இந்திய நடனக் கலைகளைப் பற்றி ஆராய்ந்து எழுதிய ஓர்…