தமிழைத் துரத்தும் பள்ளிக்கல்வித்துறை மாணாக்கர்களின் தமிழ் அறிவிற்கு வேராகவும் விழுதாகவும் இருக்க வேண்டிய பள்ளிக்கல்வித்துறை, மாணாக்கர்களிடம் இருந்து தமிழை விலக்கிக் கொண்டுள்ளது. ஆண்டுதோறும் புதிய திட்டம் என்ற பெயரில் தமிழை அப்புறப்படுத்துவதையே பள்ளிக்கல்வித்துறை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. ‘மொழி வாழ்த்து’ என்ற தலைப்பில் மாணாக்கர்களுக்குத் தமிழ் மொழி வாழ்த்துப் பாடல் இடம் பெறும். இப்பாடலால் தமிழ் உணர்வு பெற்றோர் மிகுதி. இப்பகுதியை நீக்குவதாகக் கூறிய பொழுது எதிர்த்ததற்கு மறுத்தார்கள். ஆனால், இறைவாழ்த்து, மொழி வாழ்த்து, நாட்டு வாழ்த்து என்று இருந்த பகுதிகளைப் பொதுவாக வாழ்த்து…