பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி -4 அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :     குருவிக் கூடு நிலைமை  :     (நாடகம் காண வந்தோரைப் பேடது கண்டு திகைக்கின்றது) பெண்   :           இன்றென்ன! வருவோர்! போவோருமாக                    நன்றே! தெருவினில் மக்கள் கூட்டம்? ஆண்     :        பொங்கல் திருநாள் நாடகமன்றோ? எங்கும் அதுதான்; இத்தனைக் கூட்டம்!                 “தமிழ்த்தாய்’ என்பது நாடகப் பெயராம்?                         அமிழ்தாய் இங்கு உரைத்தார்!…