பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 28 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(அகரமுதல 82, வைகாசி 24, 2046 / சூன் 07, 2015 தொடர்ச்சி) காட்சி – 28 அங்கம்    :     அன்பரசன், கவிஞர் இடம்      :     குடிலின் முன்வாசல் நிலைமை  :     (ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு நினைவாய்க் கவிஞரின் உள்ளத்தைக் கக்கவே வைக்க இவ்வொரு காட்சியோ! இன்னும் தூண்ட அவிழ்த்தே விரித்தார்! பட்டப்பகலாய்) கவி  :     பார்த்தாயா தம்பி! பணம் பேசும் பேச்சை! சொல்லால் சொல்ல வழியும் உண்டா? அன் :     பரம்பரையாகக் கொள்ளயடித்தே வருவோரை நாம் தான் செய்வது என்ன? கவி  :    …

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 26 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(வைகாசி 10, 2046, மே 24, 2015 தொடர்ச்சி) காட்சி – 26   அங்கம்    :     கவிஞர், அன்பரசன் இடம்      :     குடிலின் முன்வாசல் நிலைமை  :     (நகையைக் கண்டு நகைத்த கவிஞர் நகைக்கோர் வழியை உரைக்கின்றார்) கவி  :     தாலிக்குத் தவியாய் தவித்தே ஒருவன் பாவியாய் இங்கே வாழ்ந்திடும் போது! பல வேலிக்கு சொந்தக்காரனின் வீட்டில் குவிந்தே கிடக்கும் கொடுமையைப் பாரேன் அன் :     இந்நிலை எதனால் புலவீர்? விந்தையுமன்றோ? கேட்க! கவி  :     போர்முனை அறியா ஒருவர்! இங்கே! இராணுவ…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 23 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(சித்திரை 20, 2046 / மே 03, 2015 தொடர்ச்சி) காட்சி – 23 அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :     மரக்கிளை நிலைமை  :     (பள்ளி செல்லும் பிள்ளைகள் பற்றி செல்லப்பேடு வினவுது இங்கே) ஆண்   :  என்னப்பேடே! பார்க்கின்றாய்? என்னவோ நாட்டில் நடந்ததுபோல்! பெண்   :  பெற்றோர் தவிக்கும் திங்களென கற்றோர் பலரோ சொல்கின்றார்! ஆண்   :  எங்கும் பள்ளி தொடங்குகின்ற திங்களன்றோ? இத்திங்கள்! பெண் :   வித்தகனாக்கத் தன் பிள்ளையை! அத்தனை துன்பமா? பெற்றோர்க்கு! ஆண்  …

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 20– ஆ.வெ.முல்லை நிலவழகன்

(பங்குனி 29, 2046 / ஏப்பிரல் 12, 2015 தொடர்ச்சி)   காட்சி – 20 அங்கம்    :     அன்பரசன், கவிஞர் இடம்      :     குடிலின் முன்வாசல் நிலைமை  :(நாடகக் காட்சி முடிவுபெற “காணோமே எனது பெண்ணைத்தான்” கேட்டது மகளிர் பகுதியிலே அழுகுரல் புலம்பலுமாகவே) காவலர் நிலைமையை சீர்செய்ய அமைதி அமைந்தது ஆங்கே பாவலர்சிறிதும் இவற்றையயெல்லாம் பார்க்காது! ஏதோ! நினைத்திருந்தார் அன்ப   :  மொழிவீர்! என்ன சிந்தனை? மொழியாதிருத்தல் நன்றில்லையே? கவி     :  விழி நீர் சொட்டக் கண்டதனை விளக்கமாய் எடுத்தே உரைக்கின்றேன்!…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 13– ஆ.வெ.முல்லை நிலவழகன்

(மாசி 10, 2046 / பிப்பிரவரி 22, 2045 தொடர்ச்சி) காட்சி – 13 அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :     மரக்கிளை நிலைமை  :     (நாடகக் கூட்டத்தின் சலசலப்பைப் பேடுக்குவிளக்குது ஆண்சிட்டு!) ஆண் :     அழகிய பேடே! பார்த்தாயா? அன்பு மனைவியின் பணிவிடையை! பெண் :     விழிகளைத் திறந்தே பார்த்திட்டேன்! பார்க்க அழகே! எனச்சொல்வேன்! (என்றே மேடையை நோக்கிய பின்) அதோ! அதென்ன ஒரு கும்பல்! நின்றே கூட்டத்தின் நடுவினிலே உரக்கக் கத்திப் பேசுவதேன்? ஆண் :     பேடை…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 12– ஆ.வெ.முல்லை நிலவழகன்

  காட்சி – 12 அங்கம்    :     பூங்குயில்,  அருண் மொழி  இடம்      :     அருண்மொழி இல்லம்  நிலைமை  :     (துயிலும் கணவனின் பாதங்களைத் தொட்டுவணங்கி எழுப்பிய பின்) உயிரே! அவனென அவள் எண்ணி உணர்வுப் பொங்க அழைக்கின்றாள் பூங்:            காலைக் கதிரவனே! சோலைக் குழல் வண்டே! நாளை முடிப்பதென வேளை வோட்டாமல் தூயவண்ணனென நீயே எழுந்துவிடு! அருண்:    காலை அலர் மலரே சோலை மலர்த்தேனே! காலைநான் எழவோ காலைத் தட்டுகின்றாய்? கனியின் சுவையாகக் கனிந்தே அழைக்கின்றாய்! மணியின் ஒலியாக இனிதே மொழிகின்றாய்! கட்டாய்…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 11– ஆ.வெ.முல்லை நிலவழகன்

காட்சி – 11 அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :     மரக்கிளை நிலைமை  : (நாடகம் பார்க்கும் ஆவலிலே நவின்றிடும் பேடை எண்ணாது கூடாக் கோபத்தை துணைக்கொண்டு கொட்டுது சொற்களை ஆண்சிட்டு) பெண் :     அப்பப்பா! இவர்கள் என்னதான் பேசுகிறார்களோ புரியவில்லை! எப்பவும் இவர்கள் இப்படித்தான் பேசிக் கொண்டிருப்பரோத் தெரியலையே! ஆண் :     அவர்கள் ஏதோ! பேசட்டுமே! அதனால் நமக்கு வருவதென்ன? செவனே என்று சில நாழி பேசாதிருவேன் நீ கொஞ்சம்! பெண் :     விசிலும் ஊதித் திரை நீக்கி…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 9 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(தை 11, 2046 / சனவரி 25, 2045 தொடர்ச்சி) காட்சி – 9 அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்     :       மரக்கிளை நிலைமை :     (சிட்டே தனது எண்ணத்தைச் சிறிதே விளக்கிடப் பெண் சிட்டோ                      பட்டென இருளைக் கிழித்தாற்போல்                              பகன்றிடச் சிட்டோ திகைக்கின்றது) ஆண் :     அன்புப் பேடே! அறுசுவை உணவை கணவனுக்குத் திருமகள் வடிவாய் வந்திங்கு நன்றே படைத்தைப் பார்த்தாயா? என்றே ஒருவர் கேட்பதைப்பார்! பெண்     :     உணவேயின்றி…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! – காட்சி 2

[கார்த்திகை 21, 2045 / திசம்பர் 7, 2014 இதழின் தொடர்ச்சி]   காட்சி – 2 அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :     குருவிக் கூடு நிலைமை  :     (சிட்டுக்கள் இரண்டும் மெட்டுரையாடல்) ஆண்   :  என்ன பேடே! சிரிப்பென்ன? எனக்கும் சொல்லேன்! சிரிக்கின்றேன்! பெண் :   என்னவோ! வாழ்வை நினைத்திட்டேன்! இனிமையில் என்னையே மறந்திட்டேன்! வண்ண எண்ணங்கள் விரிந்ததனால் என்னையே மறந்து சிரித்திட்டேன்!   ஆண் :   அதுவா! உண்மை! உண்மைதான்! இதயம் குளிர்ந்த சிரிப்புத்தான்! இனிய…