(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 79 – தொடர்ச்சி) பூங்கொடி 17. எழிலிபாற் பயின்ற காதை பூங்கொடி எழிலியின் இல்லம் அடைதல்           ஆங்ஙனம் புகன்ற அடிகள்தம் வாய்மொழி பூங்கொடி ஏற்றுளத் திருத்தினள் போந்து கொடிமுடி நல்லாள் குலவிய தமிழிசை நெடுமனை குறுகி நின்றன ளாக         பூங்கொடி அறிமுகம்           `வல்லான் கைபுனை ஓவியம் போலும்         5           நல்லாய்! என்மனை நண்ணிய தென்னை? இளங்கொடி யார்நீ?’ என்றனள் எழிலி; உளங்கொள அறிமுகம் உரைத்தனள் தன்னை அடிகள்தம் ஆணையும் அறைந்தனள் பூங்கொடி;         எழிலி பாடம்…