தோழர் தியாகு எழுதுகிறார் 74: நமக்கொரு 47 (!?)

(தோழர் தியாகு எழுதுகிறார் 73 தொடர்ச்சி) இனிய அன்பர்களே! இது 47ஆம் தாழி மடல். 47! பெயர் போலவே எண்ணும் ஓர் அருவக் குறியீடு. பருப்பொருளின் இருத்தல் வடிவங்களில் ஒன்று. பொருண்மைக்கு அப்பால் அதற்கொரு பொருள் இல்லை. இது இராசி எண், இது இராசியில்லாத எண் என்பதெல்லாம் மூடத்தனம். 100 என்ற எண் அகவையைக் குறிக்கும் போது  முதுமையைக் குறிப்பதால் மருளச் செய்கிறது. மதிப்பெண்ணைக் குறிக்கும் போது வெற்றியைக் குறிப்பதால் மகிழச் செய்கிறது. 47 என்ற எண் ஆண்டைக் குறிக்கும் போது 1947! வரலாற்றில் முக்கிய ஆண்டுகளில் ஒன்று! இரவில் வாங்கினோம் விடியவே இல்லை என்ற நறுக்குக்கு இலக்கான இந்திய விடுமையைக்…

பழனி- குடமுழுக்கைத் தமிழில் நடத்த அரசு மறுப்பதேன்?

பழனி முருகன் கோயில் குடமுழுக்கைத் தமிழில் நடத்த தமிழ்நாடு அரசு மறுப்பதேன்? சனவரி 20இல் பழனியில் மாபெரும் உண்ணாப் போராட்டம்! இந்து சமய அறநிலையத்துறை ஆணையரை சந்தித்தப் பிறகு தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிவிப்பு! பழனி முருகன் திருக்கோயில் குடமுழுக்கு வரும் தி.பி. 2054 தை 13 (27.01.2023) வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. தமிழ்க் குமரன் திருக்கோயில் பழனி குடமுழுக்கை கருவறை – வேள்விச்சாலை – கலசம் வரை திருநெறிய தமிழ் மந்திரங்களை அருச்சித்துச் சிறப்பாக நடத்திடக் கோரிக்கை வைத்து,…

ஏமாற்றுக்கார காவிரி ஆணையத்தைக் கலை! – பெ. மணியரசன்

ஏமாற்றுக்கார காவிரி ஆணையத்தைக் கலை! தன்னாட்சியுள்ள புதிய ஆணையம் அமை! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!   காவிரி மேலாண்மை ஆணையம் என்பது தமிழ்நாட்டை ஏமாற்றும் ஒரு போலி நிறுவனம் என்பதைப் பதினான்காவது தடவையாக 27.09.2021 அன்றும் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது. இந்திய அரசு நீராற்றல் துறையின் முழுநேரத் தலைவராகவும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் பணித் தலைவராகவும் உள்ள எசு.கே. அலுதார் தலைமையில் 27.09.2021 அன்று புதுதில்லியில் நடந்த காவிரி ஆணையக் கூட்டம் வழக்கம்போல், தமிழ்நாட்டுக்குக் கொஞ்சம் தண்ணீர் திறந்துவிடுங்கள்…