பேசின.. பேசின.. அச்சமும் கவலையும் நோய்களும் பேசின அடிதடி கலகமும் வறுமையும்  பேசின மக்களும் பேசினர் மனத்தோடு அழுகையும் மறதியில் மறந்துமாய்ப் போக்குகளுமாய்.. வந்தவர் பேசினர் வாழ்க்கையின் நெருக்கமாய்   வாய்மட்டும் பேச்சுமாய் வறட்டுகள் புரட்டுமாய் கற்றவர் பேசினர் கலைகளும் இழப்புமாய் காலமும் பேசிட வம்புமாய் வழக்குமாய் எல்லாமும் பொதுவென்னும் ஏக்கமும் கலக்கமும் இன்னலே செய்கின்ற வழக்கமே வரவுமாய் நேர்மைகள் பேசின யாரோடும் கூட்டுமாய் நெகிழ்ச்சியில் ஆடின போதனையும் வழக்கமாய் அன்புமே பேசிட மொழியின்றித் தயக்கமாய் அறிவுமே ஆடுது தள்ளாட்ட முழக்கமாய் கொடுமைகள் கொடியேந்தி…