பேசு தலைவா பேசு!   நீ என்றன் பள்ளிக்கூடம் – சிந்தை தெளியாப் பருவத்துச் சிறுவனாய்ப் படித்தேன் உன்னை உயர்கல்வித் தளத்தில் கூட உன்னைத்தான் படித்தேன் அப்போதே எனது திசைகளைத் தீர்மானித்த தொலைதூர வெளிச்சம் நீ தொடமுடியா விண்மீன் நீ!   நீ என்றன் பள்ளிக்கூடம் இலக்கியம் எப்படி எழுதுவதென்றும் மேடையில் எப்படிப் பேசுவதென்றும் வாதம் புரியும் வகைஎது என்றும் வடிவாய் உன்னிடம் பாடம் கற்றேன்   நீ என்றன் பள்ளிக்கூடம் – பத்து ஆண்டுகள் உன் பக்கம் இருந்தேன் பார்த்துக் கொண்டிருந்ததாய்ப் பலரும்…