(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 40(2.10)  தொடர்ச்சி)  மெய்யறம் இல்வாழ்வியல்  41(2.11) பேதைமை யொழித்தல் 401.பேதைமை யேதங்கொண் டூதியம் விடுதல்; பேதைமை என்பது ஒருவன் தனக்குக் கேடு தரும் பண்புகளைப் பின்பற்றி நன்மை தரும் பண்புகளை விட்டுவிடுதல்; கடிந்தவை தம்பால் காதன்மை செய்தல்; மேலும் பெரியோரால் விலக்கப்பட்ட செயல்களை விரும்பி செய்தல்; நாணன் பருள்புகழ் பேணுத லின்மை; மேலும் பழிச் சொல்லுக்கு வெட்கப்படாமை, அன்பு இல்லாமை, அருள் இல்லாமை, புகழ் தரக்கூடிய நல்ல செயல்களைச் செய்யாமை; அறிந்துணர்ந் துரைத்து மடங்கா தொழுகல்; அரிய நூல்களைக் கற்று உணர்ந்து…