படைப்பாளர்களுக்குப் பாடமாகும் செயகாந்தனின் மறைவும் பிரிவும் – இலக்குவனார் திருவள்ளுவன்   30 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள். தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த சப்பானிய நண்பர் இரோசி யமசித்தா தமிழ்ச்சிறுகதை, புதின ஆசிரியர்கள் குறித்துக் கேட்டார். மு.வ., மணிவண்ணன்(தீபம் நா.பார்த்தசாரதி) முதலானவர்பற்றிக் கூறினேன். கல்லூரி மாணவனாக இருந்தபொழுது நூலகத்தில் இருந்த அனைத்து மு.வ. நூல்களையும் தமிழ்வாணன் நூல்களையும் படித்ததையும் அறிஞர் அண்ணா முதலான திராவிடப் படைப்பாளர்கள் இளந்தலைமுறையினரின் வரவேற்பைப் பெற்றுள்ளன என்பதையும் குறிப்பிட்டேன். இக்கால எழுத்தாளர்கள் பற்றிக் கேட்டார். முதுகலையில் செயகாந்தன் படைப்புகள் சிலவற்றையும் கி.இராசநாராயணன்…