தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு நீர் வளமும் நிலவளமும் மிகுந்த பகுதி.   அண்டை மாநிலமான கேராளவில் மழை பொழிந்து இருப்பதால் எப்பொழுதும் சாரல் மழை பொழிந்து கொண்டே இருக்கும். இதன் அண்மையில் வருடம் முழுவதும் மழை பொழிவதால் வருசநாடு என்ற பெயரும் உண்டு. இவை தவிர முல்லைப்பெரியாறு அணை, மஞ்சளாறு – வைகை அணை பாய்கின்ற பகுதியாகும். இதனால் இப்பகுதியில் கடந்த காலங்களில் மும்மாரி மழை பொழிந்தும் ஆற்றுப்பாசனங்களில் நெல் விளைச்சல் எப்போதும் இருக்கும். எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேல் என்று நெல்…