(இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  29 –  தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  30 16. புலவர்கள்  புலவர்களே நமது மொழியின், பண்பாட்டின், நாகரிகத்தின் புரவலர்கள் ஆவார்கள்.  புலவர் எனும் தமிழ்ச் சொல் மிகவும் பொருள் பொதிந்த ஒன்றாகும்.  வெறும் மொழிப் புலமை மட்டும் உடையோர் புலவர் ஆகார்.  மொழிப் புலமையுடன் பண்புநலன் சான்று, ஏதேனும் ஒரு துறையில் வல்லுநராகவும், பிறர்க்கென வாழும் பெற்றியராகவும் இருப்போரே புலவர் எனும் பெயர்க்கு உரியவராவார்.  சங்ககாலப் புலவர்கள் அனைவரும் இவ்…