கைலாசத்தின் சிந்து இளவரசி – முன்னுரை    முனைவர் கைலாசம் ‘சிந்து இளவரசி’ என்ற அதிஅற்புதமான சிறிய  வரலாற்றுப் புதினத்தில் பாண்டிய நாட்டையும். சிந்துப் பேரரசையும் இணைத்துஅவற்றிலிருக்கும் ஒற்றுமைகளை அருமையாக குறிப்பிட்டுள்ளார்.   இந்தப் புதினத்தில் குறிப்பிட்டவை ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு எழுதப்பட்டிருக்கிறது என்பதிலும், அவை தொல்பொருள் ஆராய்ச்சிக்கு உதவும்என்பதிலும் எந்த  ஐயமும் இல்லை.  ‘திராவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே’ என்ற கருத்தினைத் தெரிவித்தவர்கள் தேவநேயப் பாவாணரும் மற்ற மதிப்புக்குரிய தமிழறிஞர்களும். அவர்கள் சொன்னது உண்மையாகவே இருக்க வேண்டும். இந்தக் கருத்தினை மனத்தில்…