27. முகிலம் – nebula குறுங்கோள் வகைகளையும் நம்மிடம் பழங்காலந்தொட்டு நிலவும் சொற்களின் அடிப்படையில் பின்வருமாறு மீட்டுருவாக்கம் செய்வதே எளிமையாக உள்ளது. கார்பன் என்றால் கரியம், கரி, (வேளா.) கரிமம்( பொறி., சுற்., மீனி., மனை.) கார்பன் (சுற்.) எனக் கூறுகின்றனர். கரி(23) என்பதன் அடிப்படையில் கரியம் மிகுதியாக உள்ளது கரிமி எனலாம். இரும்பு(29) என்பதன்அடிப்படையில்இரும்பு மிகுதியாக உள்ளது இரும்பி எனலாம். மாழை மிகுதியாக உள்ளது மாழையம் வெண் (254), செம்(359), வெள்ளிடை(1) என்னும் சொற்களின் அடிப்படையில் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். வெண்மை நிறமானது வெண்மி…