1   சங்க இலக்கியங்களை முன்வைத்து இன்று தமிழ்மொழியின் தொன்மை உலக அரங்கில் நிறுவப்பட்டுள்ளது. தொகுப்பு நூல்களான அவ்விலக்கியங்கள் காலந்தோறும் பல்வேறு வகையான வாசிப்புகளை வேண்டி நிற்கின்றன. பெரும்பாலான வாசிப்புகள் அவற்றின் தனித்தன்மையை உணர்த்துவனவாகவும் நிலைபேற்றை மதிப்பிடுவனவாகவும் அமைந்துள்ளன. அவற்றுள்ளும் புறநானூற்றின் வாசிப்பும் அதன் மீதான ஆய்வுகளும் தனித்த கவனத்தைப் பெறுகின்றன. மு. இராகவையங்காரின் ‘வீரத்தாய்மார்’ தொடங்கி க.கைலாசபதியின் ‘தமிழ் வீரநிலைக்கவிதை’ வரை புறநானூறு தமிழ்பேசும் மக்கள் கூட்டத்தின் வீர வாழ்வை, உணர்வை வெளிப்படுத்தும் இலக்கியமாக மதிக்கப்பட்டுப் போற்றப்பட்டு வந்துள்ளது. உண்மையில் அக இலக்கியங்களைவிட…