ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3   Department – துறை என்கிறோம். அரசு பல்வேறு துறைகளாகச் செயல்படுகின்றது. இவற்றை மேலாண்மைப்படுத்தும் செயலகத்திலும் பல்வேறு துறைகள் உள்ளன. ஆனால், இரண்டிற்கும் வேறுபாடு தேவை. ஏனெனில், செயலகத்தில் உள்ள ஒவ்வொரு துறையும் தன்னுள் பல துறைகளை அடக்கியது. எடுத்துக்காட்டாகச் செயலகத்தில் உள்ள உள்துறையில் காவல்துறை, சிறைத்துறை, நீதித்துறை போன்ற பல துறைகள் அடங்கும். ஆங்கிலத்தில் உள்ளதுபோல் தமிழிலும் இரண்டிற்கும் துறை என்ற ஒரே சொல்லையே பயன்படுத்துவது குழப்பத்தைத்தான் தருகின்றது. இரண்டிற்கும்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙை] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை -தொடர்ச்சி – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ங‌ே] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை-தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙை] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை -தொடர்ச்சி  இவ்வரிகள் இலக்குவனாரின் தொலைநோக்கைக் காட்டுவதாக இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் சி.இலக்குவனார் குறித்து எழுதியுள்ள நூலில்(பக்கம் 50) பேராசிரியர் முனைவர் இ.மறைமலை பின்வருமாறு கூறுகிறார்: “வறியோர்க்கு உணவு, முதியோர்க்கு உணவு, கோயிலில் உணவு என்று பல்வேறு இலவச உணவுத் திட்டங்கள் இன்று நடைமுறைப்படுத்தப் படுகின்றன. இவை யனைத்தும் பெரும் நிதியையும் கரைக்கும் செலவினங்களாகவே அமைந்துள்ளன. ஆனால், இலக்குவனார் கனவு காணும்…

தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார் நினைவுக் கருத்தரங்க ஒளிப்படங்கள்

மாசி   26, 2047 / மார்ச்சு 09, 2016  அன்று சென்னை இராணிமேரிக்கல்லூரி(தன்னாட்சி) தமிழ்த்துறை நடத்திய தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார் நினைவுக் கருத்தரங்கத்தின்பொழுது எடுக்கப்பெற்ற ஒளிப்படங்கள் சிறப்புப் பொழிவுகள்: பேராசிரியர் முனைவர் இ.மறைமலை தமிழியல் ஆய்வாளர் ஒரிசா பாலு கருத்தரங்கத்தலைவர் : முனைவர் ந.கலைவாணி கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் : முனைவர் சி.கலைமகள் தலைமையுரை : முனைவர்  இர.அத்தர்பேகம் புரவலர் : முனைவர் இ.மதியழகி   [படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க!]    

இலக்குவனார் நினைவுக் கருத்தரங்கம்,சென்னை

  மாசி 26, 2047 / மார்ச்சு 09, 2016 : காலை 10.00 இராணிமேரிக்கல்லூரி(தன்னாட்சி) சென்னை 600 004 தமிழ்த்துறை தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார் நினைவுக் கருத்தரங்கம் சிறப்புப் பொழிவுகள்: பேராசிரியர் முனைவர் இ.மறைமலை தமிழியல் ஆய்வாளர் ஒரிசா பாலு கருத்தரங்கத்தலைவர் : முனைவர் ந.கலைவாணி கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் : முனைவர் சி.கலைமகள் தலைமையுரை : முனைவர்  இர.அத்தர்பேகம் புரவலர் : முனைவர் இ.மதியழகி