தமிழ்நாட்டின் கடவுட் கொள்கை, தொன்மையானது. இக்கடவுட் கொள்கை, தமிழரிடம்தானாகப் பூத்ததேயன்றிப் பிறரிடமிருந்து வந்ததன்று. இயற்கைப் பொருள்களைப் பிறழ்ச்சியின்றி இயங்கச் செய்யம் பேராற்றலுடைய ஒரு பொருள் கண்ணுக்கும் கருத்துக்கும் எட்டாததாய், இத்தகையது என்று சொல்ல மாட்டாததாய் நிற்பதென்ற உண்மையைத் தமிழர் தாமாகப் பண்டே உணர்ந்தனர்; மனமொழி மெய்களைக் கடந்து நிற்கும் அதனைக் கடவுள் என்ற சொல்லால் குறித்தனர்; அஃது யாண்டும் நீக்கமற நிறைந்து நிற்பதென்பதை இறை என்ற சொல்லால் குறித்தனர்; அதுவே, ஒவ்வோர் உயிரிலும் உள் நின்று இயக்குவது என்பதை இயவுள் என்ற சொல்லால்…