மெய்யெழுத் தறிவாய் ! – மு.பொன்னவைக்கோ

    மெய்யெழுத் தறிவாய் !   க்ங்ச் ஞ் என்று கொஞ்சு ட்ண்த் ந் என்று முந்து ப்ம்ய் ர் என்று வென்று ல்வ்ழ் ள் என்று துள்ளு ற்ன் ற்ன் என்று சொல்லு மொத்தம் பதி னெட்டு மெய்க ளென்று கொள்ளு முனைவர் மு.பொன்னவைக்கோ    

புதியதோர் தமிழுலகம் புவியில் தோன்றும்! – மு.பொன்னவைக்கோ

புதியதோர் தமிழுலகம் புவியில் தோன்றும்!    கி.மு.வில் ஆயிரத்து ஐந்நூறாம் ஆண்டதனில் சேமம் நாடியிங்கு நாடோடிக் கூட்டமொன்று மலைமொழிப் பேச்சுடனே நிலைதேடி வந்தார்கள் ஆரியராய் இம்மண்ணில் அடிவைத்த அந்நியர்கள். செந்தமிழ்ச் சீருடைய  சிறப்புமிகுப் பைந்தமிழன் இந்தியத் திருமண்ணில்  எங்கும் குடியிருந்தான் வந்தாரை வரவேற்கும் வாசமிகு  தமிழனவன் தந்தான் தனதுரிமை தடம்தேடி வந்தோர்க்கு. அந்நியனாய் வந்தவனும் ஆளத்தொடங்கி இங்கு அழித்திட்டான் தமிழ்ப்பண்பை அவன்வகுத்த குலப்பிரிவால். ஆரியரும்  தமிழருடன்  அருகிப் பழகியதால் அன்றாட வாழ்விலவர் ஆதிக்கம் பெருகிற்று. ஆரியரின்  ஆட்சிக்கு ஆட்பட்டான்  தமிழ்மகனும். ஆரியர்க்கோ தேவையவர் ஆட்சிக்கு…

முத்திரை பதிக்கும் வித்தகர் மு.பொன்னவைக்கோ – இலக்குவனார் திருவள்ளுவன்

  முத்திரை பதிக்கும் வித்தகர் மு.பொன்னவைக்கோ   பிற துறைகளில் உள்ள தமிழ்ப்பற்றாளர்களால்தான் அறிவியல் தமிழ் வளர்ந்து கொண்டுள்ளது. அத்தகையவர்களுள் ஒருவராகவும் இலக்கியத் தமிழ் ஈடுபாட்டாளராகவும் திகழ்பவரே முனைவர் பொறிஞர் மு.பொன்னவைக்கோ.   முந்தைய தென்னார்க்காடு மாவட்டத்தில் (இப்போதைய விழுப்புரம் மாவட்டம்) வானூர் வட்டத்தில் உள்ள செங்கமேடு என்னும் சிற்றூருக்குப் பெருமை சேர்க்கும் வகையில்,  மன்னர் பாரி வள்ளல் பரம்பரையைச் சார்ந்த தெய்வத்திரு. சு.முருகேசர், தெய்வத்திருவாட்டி மு.பொன்னிக்கண்ணு அம்மையார் வாழ்ந்தனர். இவ்விணையரின் மக்கள் எழுவருள் இளையமகனாகத் தை 17, 1975/30.01.1944 அன்று பிறந்தவர் இரத்தினசபாபதி….