வெளியே சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் முத்தம்மா. நாலு வீட்டுக்குத் துணி துவைத்துப் பிழைக்கும் பிழைப்பும் போய் விடுமோ என்று அவளுக்குக் கவலையாக இருந்தது.   பத்து மணிக்கு வழக்கறிஞர் வீட்டுக்குத் துணி துவைக்கப் போயிருந்தாள். அதன் பிறகு பயிற்றுநர் வீடு, வைப்பக அலுவலர் வீடு என்று பல வீடுகளுக்கும் துணி துவைத்துவிட்டு ஒரு மணிக்குத்தான் திரும்பினாள்.   மற்றவர்கள் வீட்டுத் துணியைத் துவைத்தது எதுவும் அவளுக்கு நினைவில் இல்லை. வழக்கறிஞர் வீட்டுத் துணியைத் துவைத்தது மட்டும்தான் நினைவு வந்தது.   வழக்கறிஞர்…