அறவோர் உள்ளனரா? குற்றமற்றவர்களைத் தண்டிப்பது குறித்துக் கவலைப்படவில்லையா?   தன்நாட்டுக்குடிமகள் ஒருத்தியின் கற்பிற்குக் களங்கம் வரக்கூடாது என்பதற்காக அனைவர் வீட்டுக் கதவுகளையும் தட்டியதாக விளக்கம் அளிக்காமல் மன்னனாயிருந்தும் தன் கையை வெட்டிக் கொண்ட பொற்கைப்பாண்டியன் என்னும் மன்னன்ஆட்சி செய்த தமிழ்நாடு இது. ஆடுமழைத் தடக்கை அறுத்துமுறை செய்த பொற்கை நறுந்தார்ப் புனைதேர் பாண்டியன்  எனக் ‘குணநாற்பது’ என்னும் இலக்கியத்தில் நமக்குக் கிடைத்த ஒரே பாடலில் இடம்பெற்ற இவ்வடிகள் இவ்வரலாற்றை நமக்குத் தெரிவிக்கின்றன. வச்சிரத் தடக் கை அமரர் கோமான் உச்சிப் பொன் முடி ஒளி…