யாழ் பல்கலைக்கழக மாணவர் இருவரை சிங்களப் பேரினவாதக் காவல்துறை சுட்டுக்கொலை செய்திருக்கிறது. ஈழ மாணவர் எழுச்சியே 2009 இனப்படுகொலைக்குப் பின்பான அரசியலில் முதன்மை வாய்ந்ததாக இருக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன் மாணவர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டார்கள், மாவீரர்  விளக்குகள் விடுதலைக் கனலாய் பல்கலைக்கழக வளாகத்தில் முளைத்திருந்தன. தொடர்ந்து சிங்களப் பேரினவாதத்தின் முயற்சிகளுக்கு எதிராய்ப் போராட்டங்களும், மோதல்களும், முழக்கங்களும் யாழ் பல்கலைக்கழகத்திலேயே பிறந்தன. இந்தப் பின்புலத்திலிருந்தே இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. யாழ் மருத்துவமனையில் இந்திய அமைதிப்படை நடத்திய கோரமான படுகொலையின் 29ஆவது நினைவு நாள் இன்று. இந்த நிலையில் இந்தப்படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. பன்னாடுகளின் தோல்வியும், அமெரிக்கத் தீர்மானத்தின்…