வளரியம் – cambium காம்பியம்(cambium) என்பதற்கு வேளாணியலிலும் கானியலிலும் வளர்படை என்றும் பயிரியலிலும் மனையியலிலும் வளர்திசு என்றும் பயன்படுத்துகின்றனர். திசு ஒலிபெயர்ப்பு அடிப்படையில் உருவான சொல். வளர்படை என்றால் போர்ப்படை பொருள் வருகின்றது. cambium – அடுக்கியம் என அறிவியல் அகராதி(பேராசிரியர்அ.கி.மூர்த்தி)யில் குறிக்கப் பெற்றுள்ளது, தன்மையின் அடிப்படையில் சரிதான். ஆனால், இச்சொல் தனிச்சொல்லாக இல்லாமல் பிற சொற்களுடன் சேர்கையில் மூலப்பொருள் மாறும் வாய்ப்பு உள்ளது. சான்றாக அடுக்கிய தக்கை என்னும் பொழுது தக்கை அடுக்கடுக்காக வைக்கப்பட்டதாகவே கருதுவர். அடுக்கியம் என்னும் கலைச்சொல்லாகத் தோன்றாது. எனவே,…