தேனிப் பகுதியில் பருவமழை பொய்த்துப் போனதால் வாழை மரங்கள் கருகத்துவங்கியுள்ளன.   தேனி அருகே உள்ள குள்ளப்புரம், மருகால்பட்டி, கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி, செயமங்கலம் முதலான பகுதிகளில் நுhற்றுக்கணக்கான காணி(ஏக்கர்) பரப்பளவில் நெல்லுக்கு அடுத்தபடியாக வாழை, சாகுபடி செய்யப்படுகிறது. பச்சை வாழை, மொந்தை, செவ்வாழை, கற்பூரவல்லி எனப் பலவகையான வாழைகள் பயிரிடப்பட்டு, தமிழகத்திற்குள்ளும் அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இதனால் இப்பகுதி உழவர்கள் பணத்தட்டுப்பாடு இல்லாமல் இருந்தனர்.   கடந்த இரண்டு வருடகாலமாகப் போதிய மழை இல்லாததால் நிலத்தடி நீர், வாய்க்கால் தண்ணீர்…