புலர்காலைப் பொழுதில் சிராப்பள்ளி வானொலியின் செவிநுகர் கனிகளைக் கேட்டுப் புத்தறிவு பெறும் நேயர்களே! வணக்கம். பதினோராம் நூற்றாண்டில் தமிழில் தோன்றிய ஒப்பற்ற அகநூல் கல்லாடம் சிவபெருமானின் பெருமைகளை, பாண்டிய மன்னனின் சிறப்புகளை இடைஇடையே நுட்பமாகச் செரித்துக் கூறும் இலக்கியம். வருணணை, உவமை, உருவகங்களில் வாழ்வியல் மெய்ம்மைகளைக் கல்லாடம் கூறுகிறது. ‘கல்லாடம் கற்றவரோடு சொல்லாடல் கொள்ளாதே! எனக் கற்றவரையே எச்சரிக்க வேண்டிய கருத்து வளம், உடையது கல்லாடம். கல்லாடம் என்பது ஊர்ப்பெயர், கல்லாடர் ஆசிரியர் பெயர் கல்லாடம் நூலுக்கு ஆகுபெயராக ஆயிற்று. நேயர்களே! நமக்கு உதவி…