காலம் அழைக்குதடா! மானம் எனுமொரு பானையில் வாழ்வெனும் தீனி சமைத்தவனே! – தமிழ் போனதடா சிறை போனதடா! அட பொங்கி எழுந்திடடா! காட்டு தமிழ்மறம்! ஓட்டு வரும்பகை! பூட்டு நொறுக்கிடுவாய்! – நிலை நாட்டு குலப்புகழ்! தீட்டு புதுக்கவி! ஏற்று தமிழ்க் கொடியே! முந்து தமிழ்மொழி நொந்து வதைபட இந்தி வலம் வரவோ? – இது நிந்தை! உடனுயிர் தந்து புகழ்பெறு! வந்து களம் புகுவாய்! நாறு பிணக்களம் நூறு படித்தநம் வீறு மிகுந்த குலம் – பெறும் ஊறு துடைத்திடு மாறு புறப்படு!…