(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 29 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ – 30   தமிழில் தொல்காப்பியர் காலம்வரை  இன்ன இடைநிலைகள் இன்ன காலத்தை உணர்த்தும் என்ற வரையறை ஏற்படாமல் இருந்திருக்கலாம். பழந்தமிழில் சொற்களெல்லாம் ஓரசை, ஈரசை உடையனவாகவே இருந்தன. அவற்றுடன் துணை வினை சேர்ந்து காலம் அறிவித்தன. த் இறந்த காலத்தையும், உம் நிகழ் காலத்தையும் எதிர்காலத்தையும், வ், ப் எதிர்காலத்தையும், இன் அல்லது இ இறந்தகாலத்தையும், பகுதி இரட்டித்தலால் இறந்த காலத்தையும் வெளிப்படுத்தியுள்ளமை பழந்தமிழ் இலக்கியங் களாலும் தொல்காப்பியத்தாலும் அறியலாம். நிகழ்காலத்தை அறிவிக்கின்ற கிறு,…