தமிழீழ விளையாட்டு விழா-2014, முன்சன்

முன்சன்-தமிழர் பண்பாட்டுக் கழகம் நடாத்திய தமிழீழ விளையாட்டு விழா-2014 ஆனி 21, 2045 சூலை 05, 2014 சனிக்கிழமை 11:00 மணியளவில் தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் தொடங்கியது. சிறுவர் சிறுமிகளின் ஓட்டப்போட்டிகள், நீளம் பாய்தல், சாக்கோட்டம், பந்தெறிதல் கயிறடித்தல் பெற்றோர்களுக்கு ஓட்டப்போட்டிகள், இசைநாற்காலி(சங்கீதக்கதிரை) இடம்பெற்றன தமிழீழ விளையாட்டான நாயும் முயலும் விளையாட்டை இளையோர்கள் விரும்பி மகிழ்வுறும் முறையில் விளையாடினார்கள். வெற்றி வீரர்களுக்கு தமிழாலய ஆசிரியைகள், சிறப்புப்பணியாளர்கள் பதக்கங்கள்,கிண்ணங்களை வழங்கிப் பாராடடினர். தமிழீழ விளையாட்டு விழாவில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் திடலில் பணியாற்றியவர்களுக்கும், சிற்றுண்டி உணவைச்…

இலக்குவனார் நடுநிலைப்பள்ளியின் விளையாட்டு விழா

    தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் பிறந்த  ஊர் [இப்போதைய நாகப்பட்டினம் மாவட்டம்,  திருமரைக்காடு(வேதாரண்யம்) வட்டம்,] வாய்மைமேடு என்னும் ஊராகும்.  இங்குள்ள இலக்குவனார் நடுநிலைப்பள்ளியில் பங்குனி 17, 2045 / 31.03.14 அன்று விளையாட்டு விழா நடந்தது. விழா தொடர்பான  ஒளிப்படக்காட்சிகள் :       நன்றி : – வாய்மைமேடு மணிமொழி முகநூல் பக்கம்