மாவீரர்களை வணங்குவது நம் நலத்திற்காகவே! ஈழமலர்ச்சிக்காகவே!  – இலக்குவனார் திருவள்ளுவன்

  மாவீரர்களை வணங்குவது நம் நலத்திற்காகவே! ஈழமலர்ச்சிக்காகவே!    தமிழீழத்தை மனக்கண்களில் கண்டவர்கள்! தங்கள்  நெஞ்சில் சுமந்தவர்கள்! மனக்கண்களில் கண்ட தமிழீழம் உருவாகும்; அங்கே ஈழத்தமிழ் மக்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் தன்னுரிமையுடனும் தன்மதிப்புடனும் வாழ்வார்கள்; அடிமைத்தளையறுந்து, பட்ட துயரங்கள் மறைந்து, இன்னல்கள் நீங்கி, இன்பவாழ்வு வாழ்வர்; தமிழும் தனக்குரிய இடத்தை நாட்டிலும் உலகத்திலும் பெறும்; என்னும் நம்பிக்கையில், தங்கள் இன்னுயிரை நீத்தவர்கள் மாவீரர்கள்! இவர்களை வணங்குவது நமக்காகத்தான்! ஆம்! நமக்காக மறைந்தவர்களை – புகழால் வாழ்பவர்களை – நாம் வணங்குவது அவர்கள் கனவுகளை நாம்…

மொழிப்போர் வீரவணக்கநாள், வள்ளலார்நகர்

இந்த ஆண்டு மொழிப்போர் ஈகியர் நாள் நிகழ்வுகள் பல ஊர்களில் எழுச்சியுடன் நடைபெற உள்ளது . சிறப்பு: தை 11, 2047 / 25 01 2016 திங்கள் காலை 9 மணிக்கு மூலக் கொத்தலத்தில் உள்ள மொழிப்போர் முதல் ஈகியர் நடராசன் தாலமுத்து நினைவிடம் நோக்கிப் பேரணி! ஈகியர் நடராசன் தாலமுத்து நினைவிடத்தில் மொழிப்போர் வரலாற்று நினைவிடம் அமைத்திடு! தமிழ்நாடு உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்கிடு!- தமிழ் உரிமைக் கூட்டமைப்பு அனைவரையும் அன்புடன் அழைக்கிறது அனைவரும் வாரீர் வாரீர் .

மே 17 நினைவேந்தல், சென்னை

    தமிழீழத்தில் ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட நமது உறவுகள் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு ஆறாண்டுகள் ஆகின்றது. இந்த இனப்படுகொலைக்கான ஒரே காரணம் அவர்கள் தங்களின் நியாயமான உரிமையான தம் தாயக விடுதலையைக் கோரியது ஒன்றே. சிங்களப் பேரினவாத இலங்கையோடு சேர்ந்துகொண்டு இந்த இனப்படுகொலையை நடத்தியவர்கள் இந்தியாவும்  மேற்கத்திய நாடுகளுமே என்பதற்கான பல்வேறு ஆதாரங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தமது வணிக நலன்களுக்காகவும்  மண்டல மேலாதிக்கத்திற்காகவும் நமது இனத்தைக் கொத்து கொத்தாகக் கொன்று குவித்துள்ளனர். இவர்கள் தான் தற்போது பாதிக்கப்பட்ட தமிழர்களின் போராட்டங்களின் நெருக்குதலால்…