தாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை! இலக்குவனார் திருவள்ளுவன்

தாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை! நம் நாட்டில் காந்தியடிகள் முதலான தலைவர்கள் பலரும் தாய்மொழிவழிக் கல்வியை வலியுறுத்தியுள்ளனர்; இப்பொழுதும் கல்வியாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர். பயிற்சிமொழிக் காவலர் பேரா. முனைவர் சி.இலக்குவனார், “ உலகில் வேறெந்த உரிமை நாட்டிலும் வேற்று மொழி வாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே இல்லை. நம் நாட்டில் நம் மொழிவாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே இல்லை.  நம் நாட்டில் நம் மொழிவாயிலாகக் கல்வியளிக்கப் படாத காரணத்தினாலேயே பேரறிஞர்களும் புதியது புனையும் அறிவியற் கலைஞர்களும் உலகம் புகழும் வகையில் பேரளவில் தோன்றிலர். தொழில்நுட்ப அளவில்…

தூய்மையான நகரங்கள் பட்டியலில் மூன்றாம் இடம் திருச்சி!

தூய்மையான நகரங்கள் பட்டியலில் மூன்றாம் இடத்துக்குப் பின்தள்ளப்பட்டது திருச்சிராப்பள்ளி!   இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் திருச்சிராப்பள்ளி மாநகரம் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்த திருச்சிராப்பள்ளி தற்பொழுது ஒரு படி இறங்கியுள்ளது. எனினும், கருநாடகத்தின் மைசூர் நகரம் தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துள்ளது.   தூய்மையான நகரங்கள் குறித்து இந்தியத் தர ஆணையம் நடத்திய ஆய்வு முடிவுகளை நடுவண் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கைய(நாயுடு) இன்று வெளியிட்டார்.   அதன்படி, கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வில்…