-வழக்குரைஞர் வே.சௌந்தரராசன்- இந்தியப் பாராளுமன்றின் அலுவல்களில் புதிய சில நெருக்கடி நிலைகள் தோன்றியுள்ளன. அரசியல் மேகமோ இருள் சூழ்ந்ததாக இன்று மாறி வருகின்றது. புயலடிக்கத் தொடங்கியுள்ளது போன்ற அச்ச உணர்ச்சி ஆங்காங்கே பரவலாகத் தென்படுகின்றது. இதுகாறும் பல்வேறு நல்ல முடிவுகளைக் கண்ட இப்பேரவை இன்று ஏனோ ஆட்சிமொழிச் சிக்கலுக்கு உரியதோர் தீர்வு காணவியலாது நிற்கின்றது. நல்லோர் உள்ளங்களில் அதுபற்றி அமைதி குலைந்து காணப்படுகின்றது. ஆளவந்தார் இதனை எளிதெனக் கருதி அதிகாரத்தையே நம்பி நிற்கின்றனர். மக்களாட்சி முறைக்கு ஒரு வினாக்குறி எழுந்துள்ளது என்றே சொல்லவேண்டும். ஆட்சிமொழி…