ஆரியர் வருகைக்கு முன்னர் பரத கண்டத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்

ஆரியர் வருகைக்கு முன்னர் பரத கண்டத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்   தமிழக வரலாற்றையும் பண்பாட்டையும்பற்றித் தமிழர்களே கற்றவர் என உலகோரால் போற்றப்படும் தமிழரே நன்கு அறியாதவராய் உள்ளனர். ஆரியர் வருகைக்கு முன்னர் பரத கண்டத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள். இமயம் முதல் குமரி வரை இனிதே வாழ்ந்த தமிழர்கள் ஆரியர்களிடமிருந்தே நாகரிகத்தையும் பண்பாட்டையும் கற்றனர் என்று கூறுவது உண்மை நிலையறியாத வரலாற்று ஆசிரியர்க்கு ஒரு மரபாகிவிட்டது. மேனாட்டு வரலாற்று ஆசிரியர்களில் சிலர் நடுநிலை நின்று ஆராய்ந்து ஆரியர்களோடு தொடர்பு கொள்வதற்கு முன்னரே தமிழர்கள் நாகரிகத்திலும் பண்பாட்டிலும்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 05: ம. இராமச்சந்திரன்

(அகரமுதல 102 ஐப்பசி 08, 2046 / அக். 25.10.2015 தொடர்ச்சி) 05   இலக்குவனார் அரசர் கல்லூரியில் பயின்ற போதுதான், நூலகத்தில் இருந்த மொழியாராய்ச்சி பற்றிய ஆங்கில நூல்களைப் படித்து, மொழி ஆராய்ச்சி பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டார். கால்டுவெல் எழுதிய ஒப்பற்ற “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண” நூலையும் இங்குதான் கற்றார். தமிழ் மொழியின் தொன்மை, தூய்மை, வளமை, இனிமை முதலியன பற்றி நன்கு அறிந்தார்.   தமிழ்நாட்டில் பேராயக்கட்சி (காங்கிரசு) பிராமணர்களின் செல்வாக்குக்கு உட்பட்டுப் பிராமணர்களின் தலைமையில் இயங்கி வந்தது. நீதிக்…

தமிழில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மிகச் சிலவே – சி.இலக்குவனார்

தமிழில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மிகச் சிலவே! மொழி மரம் போன்றது. இதன் சொற்கள் இலைகள் போன்றன. ஆண்டுகள் செல்லச் செல்ல பழைய இலைகள் வீழும். புதிய இலைகள் தளிர்க்கும். மரம் அவ்வாறே நிற்கும். இதே போன்று தமிழ் மொழி தொல்காப்பியர் காலத்திலிருந்து இன்று வரை நிலைத்திருக்கின்றது. இவை என்றும் தொடர்ந்து நிலைத்திருக்கும். ஆனால் ஒரு மரத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களை இதில் தடுக்க இயலாது. பிற மொழிகளுடன் ஒப்பிடும் போது தமிழில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மிகச் சிலவே என்பது குறிப்பிடுதற்குரியது. –  பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

தொல்காப்பியம் ஒரு வரலாற்று நூலே! – சி.இலக்குவனார்

தொல்காப்பியம் ஒரு வரலாற்று நூலே!   தொல்காப்பியர் தம்முடைய சமசுகிருதப் புலமை தமிழின் அழகையும், தனித் தன்மையையும், சிதைப்பதற்கு இடம் தரவில்லை. வடவேங்கடம் தென்குமரி இடையே உள்ள கிடைத்த தமிழ் நூல்களின் அடிப்படையிலேயே தொல்காப்பியர் தம்முடைய சிறந்த நூலை யாத்துள்ளார் எனப் பனம்பாரனார் மிகச் சரியாகக் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியர் “என்மனார்’ “என்ப’ “என்மனார் புலவர்’ எனத் தம் முன்னவர்களைப் பற்றி 287 இடங்களில் குறிப்பிடுகின்றார். இத்தகைய மேற்கோள்களால் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு நிலவிய தமிழ்மொழி தமிழ் இலக்கிய நிலைமை குறித்து அறிதற்கு இயலுகிறது. எனவே…

தொல்காப்பியமே கிறித்து காலத்திற்கு முற்பட்ட வரலாற்று வாயில் – சி.இலக்குவனார்

  கிறித்து காலத்திற்கு முற்பட்ட தமிழ்நாட்டின் நிலையையும், தமிழ் மொழி இலக்கிய நிலையையும் அறிவதற்குத் தொல்காப்பியமே வாயிலாய் அமைகின்றது. எல்லா வகையிலும் தமிழ்நாட்டின் வரலாற்றில் தொல்காப்பியமே ஒரு எல்லைக் கல்லாக விளங்குகிறது. தொல்காப்பியர் இலக்கண ஆசிரியராக மட்டுமல்லாமல் புலவராக, மொழியியலாளராக, மெய்யியலாளராக, வரலாற்றறிஞராக மன்பதையியல் அறிஞராகத் திகழ்கிறார். தொல்காப்பியர் தமிழிலும், சமசுகிருதத்திலும் சிறந்த புலமையாளராக விளங்குகிறார். தொல்காப்பியம் அவரது அறிவுக்குச் சான்றாய்த் திகழ்கின்றது. – பேராசிரியர் சி.இலக்குவனார், தொல்காப்பிய ஆங்கிலமொழிபெயர்ப்பும் திறனாய்வும்: (Tholkāppiyam in English with critical studies) பக்கம் 20  

கலைச்சொல் தெளிவோம் 28 : குறுமி – dwarf

 28. குறுமி- dwarf    ஞாயிற்றைவிடப் பெரியவிண்மீன்களை gaint என்றும் மிகவும் சிறிய விண்மீன்களை dwarf என்றும் தமிழிலேயே ஒலிபெயர்ப்பாகக் குறிக்கின்றனர். அல்லது அரக்கன் என்றும் குள்ளன் என்றும் மாந்தர்களைக் குறிப்பதுபோல் நேர்மொழிபெயர்ப்பாகக் குறிப்பிடுகின்றனர். dwarf – குட்டை, குள்ளமான என வேளாணியலிலும் குள்ளர் எனச் சூழறிவியலிலும் குட்டையான, குள்ளன் என மனையறிவியலிலும் குறிக்கப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில், குள்ளமாக உள்ள மனிதர்களைக் குறிக்கும் சொல்லால் விண்பொருளையும் குள்ளன் என்று குறிப்பது பொருத்தமில்லை. குறு(56), குறுக்கை(2), குறுக(6), குறுகல்(7), குறுகல்வேண்டி(3), குறுகல்மின்(1), குறுகா(2), குறுகாது(3), குறுகார்(1),…

“தமிழ் மாநாடுகளில் தமிழ்ப் பகைவர்க்கே முதன்மை” : வருந்திய இலக்குவனார்

“தமிழ் மாநாடுகளில் தமிழ்ப் பகைவர்க்கே முதன்மை” : வருந்திய இலக்குவனார்   பேராசிரியரின் உழைப்பால் மக்களிடையே ஏற்பட்ட தமிழுணர்வை அறுவடை செய்து ஆட்சிக்கட்டிலில் ஏறிய தி.மு.க. ஆட்சியிலும் இதே அவலம்தான் தொடர்ந்தது. 1968இல் சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழர் மாநாட்டிலும் “தமிழ்மொழிப்பற்றும் தாங்கிய புலமையும் இல்லோரெல்லாம் இனிதிடம் பெற்றனர். எம் போன்றோரை எள்ளியே தள்ளினர்” எனப் பேராசிரியர் வருந்தும் அளவிற்குத் தமிழ்ப்பகைவர்க்கு முதன்மை அளிக்கப்பட்டது. பகைவரையும் நட்பாக்க வேண்டும் என உணர்ந்தவர்கள் அன்பர்களின் சிறப்பைப் புறக்கணிக்கும் போக்கு இருந்தது. இருப்பினும் கட்டணம் செலுத்திப் பேராளராகப் பங்கேற்றுத்…

சாதி, சமயமற்ற நாட்டை விரும்பிய பேராசிரியர் இலக்குவனார்!

சாதி, சமயமற்ற நாட்டை விரும்பிய பேராசிரியர் இலக்குவனார்! சமய விடுமுறைகளும் பிராமணியச் செல்வாக்கின் அடையாளமே எனக்கூறி, ஒரேசமயம், ஒரேமொழி, ஒரே இனம்முதலான ஒற்றையாட்சிக்கு எதிர்ப்பை மக்களிடையே உருவாக்கினார். “பரதகண்ட முழுவதும் ஒரேஆட்சி, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம் எனக் கொள்ள வைத்துப் பல மொழிகளையும், இனங்களையும், இந்து ஆட்சி எனப் பாகிசுதானுக்குப் போட்டியாக ஒன்றை உருவாக்க எண்ணுகின்றனரோ என ஐயுற வேண்டியுள்ளது. இந்துமதம் என்பது பிராமணீயம் என்பதும் அதனைக் காக்க எந்த நிலையில் உள்ள பிராமணரும் பின்வாங்கார் என்பதும் என்றும் நினைவில்கொள்ள…

மாமூலனார் பாடல்கள் 29: சி.இலக்குவனார்

(ஆடி 11, 2045 / சூலை 27, 2014 இதழின் தொடர்ச்சி)   உகூ. “நாட்டனர் வாழி!”  -சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தோழி : அம்ம! நின் காதலர் நின்னை விட்டுப் பிரியவே மாட்டார் என்றாய்! பிரிந்தாலும் விரைவில் வந்துவிடுவார் என்றாய், சென்றவரை இன்னும் காணமுடியவில்லையே. தலைவி: வராது என்ன செய்வார்? வருவார். தோழி: எப்போழுது? உன் அழகு எல்லாம் மறைந்து உன் உடல் இளைத்து உருமாறிய பின்பா? தலைவி: அப்படிக் கருதேல் அவர் அன்பின் திறம் நீ அறியாய்?…