தமிழ்நலப் பகுத்தறிவுக் கவிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

      உலக மொழிகளின் தாயான தமிழ் மொழி, தனக்குரிய செம்மை நிலையைப் பன்னூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அடைந்து விட்டது. உலகின் பல பகுதிகளில் மொழியே பிறந்திருக்காத பொழுது, ஏன், மக்களினமே தோன்றியிராத பொழுது இத்தகைய உயர்தனிச் செம்மை நிலையைத் தமிழ் அடைந்து விட்டது. அத்தகைய வளர்ச்சிக்கும் அதன் தொடர்ச்சியான செம்மைக்கும் பல்வேறு புலவர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், கட்டுரையாளர்கள், படைப்பாளர்கள், சொற்பொழிவாளர்கள் எனப் பல நிலையில் உள்ளவர்களும் பாடுபட்டுள்ளனர்; பாடுபட்டு வருகின்றனர்.   இத்தகையோருள் 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர்களில் குறிப்பிடத்தக்க முதன்மையானவர்களில் ஒருவராகத்…

பொறி. தி.ஈழக்கதிர் – இவன் பெற்றோர் என்நோற்றார் என வியக்க வைத்துள்ளவன்!

பொறி. தி.ஈழக்கதிர் நூறு நூறு ஆண்டுகள் வாழ்கவே!    ஆடி 27, 2046 / ஆக12, 2015 அன்று பிறந்தநாள் பெருமங்கலம் காணும் எங்கள் மகன் தி.ஈழக்கதிர் நல்ல மனைவிமக்கள் பெற்று இல்லறத்தை நல்லறமாக்கி, நலம், வளம் நிறைந்து, தமிழ்நலம் பேணி நூறாண்டிற்கும் மேல்வாழ உள்ளன்புடன் வாழ்த்துகிறோம்!   ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் பிள்ளைகள் பற்றிய நினைவு மிகுதியாக இருக்கும். அத்தகைய நினைவுகளில் சிலவற்றை அன்பு மகனின் பிறந்தநாளில் பகிர விரும்புகின்றேன்.   அப்பொழுது சென்னை அண்ணா நகரில் திருவேணி குடியிருப்பில் குடியிருந்தோம். மிக அருகிலுள்ள…

கலைச்சொல் தெளிவோம்! 88. ஆழ்பு வெருளி

 88. ஆழ்பு வெருளி-Bathophobia  ஆழ்(14), ஆழ்க(1), ஆழ்ச்சி(2), ஆழ்ந்த(2), ஆழ்ந்தன்று(1), ஆழ்ந்து(1), ஆழ்பவன்(1), ஆழ(1), ஆழல்(1), ஆழல(1), ஆழி(24), ஆழிமுதல்வ(1), ஆழியான்(1), ஆழும்(1), என ஆழ் அடிப்படையிலான சொற்கள் சங்கப்பாடல்களில் உள்ளன. ஆழ்நிலையில் உள்ளமையால் ஆழி என்பது கடலையும், மண்ணில் ஆழ்ந்து பதிதலால் சக்கரமும் ஆழி என்றும், துன்பத்தில் ஆழ்வதால் ஏற்படும் அழுகையும் ஆழ் என்றும் (ஆழல்-அழாதே) (அழுகை என்பதன் வேர்ச்சொல் நீட்டிப்பு போன்று), பிற பொருளிலும் இச் சொல் அமைந்துள்ளதைக் காணலாம். ஆழ் என்பதன் அடிப்படையில் ஆழ்பு எனக் கொண்டு, ஆழம் பற்றிய…

கலைச்சொல் தெளிவோம்! 72. விண்டு-Stratocumulus

72. விண்டு-Stratocumulus விண்டு   விண்டு சங்க இலக்கியத்தில் 8 இடங்களில் பயன்படுத்தப் பெற்றுள்ளது. எனினும் மலையைத்தான் குறிக்கிறது. ஆனால், விண்டுச் சேர்ந்த வெண்மழை போல (பதிற்றுப்பத்து 55.15) விண்டு முன்னிய புயல்(பதிற்றுப்பத்து (84.22) என்பன போல், பெரும்பாலும் மழை முகிலோடு தொடர்பு படுத்தியே விண்டு குறிக்கப்பெறுகின்றது. பிங்கல நிகண்டு விண்டு என்பதன் ஒரு பொருளாக முகிலையும் குறிக்கின்றது.   விண்டு ஆகிய மலையில் குவியும் முகில் பின்னர் விண்டு என்றே அழைக்கப் பெற்றிருக்க வேண்டும். எனவே, சங்க இலக்கியங்களில் பயன்பெற்ற சொல் என்ற…

கருவிகள் 1600 : 761-800: இலக்குவனார் திருவள்ளுவன்

761. செலுத்தீட்டு விசைமானி transmission dynamometer   762. செவ்விய விரவு கதிரி   perfect diffuse radiator   763. செவ்வியக் கதிரி   perfect radiator   764. செவியக நோக்கி otoscope / auriscope செவியின் உட்பகுதிகளை ஆராய்வு செய்ய உதவும் கருவி. உட்செவி ஆய்வுக்கருவி, செவிப்புல வழியான உடலாய்வுக்கருவி, நாடியறி கருவி. (-செ.) செவிநோக்கி காது நோக்கி, செவியாக நோக்கி (எழுத்துப்பிழையோ?),செவி ஆய்வுக் கருவி, செவிகாட்டி, செவியக நோக்கி எனவும் பலவகையாகக் குறிக்கப் பெறுகின்றது. இவற்றுள் செவியாகநோக்கி என்பது…