ஏணிப் படியாய் உயர்த்திய சான்றோர்! – மறைமலை இலக்குவனார்

இழுக்கு நிறைந்த போலிச் சடங்கும் அழுக்குப் படிந்த மூடத் தனங்களும் அழுத்தி வைத்த அடிமை வாழ்வே ஆண்டவன் கொடையென மயங்கிய நாளில் ஆதவன் உதயமாய் விடியல் அளித்தார்; நாணத் தக்க சாதிப் பீடையால் கூனிக் குறுகிக் கிடந்த தமிழரை ஏணிப் படியாய் உயர்த்திய சான்றோர்; பெரியார் பெருமை உரைக்கவும் இயலுமோ? -மறைமலை இலக்குவனார்

மங்காத் தமிழ் வளர்க்கும் மறைமலை இலக்குவனார்!

மங்காத் தமிழ் வளர்க்கும் மறைமலை இலக்குவனார்! திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதைவணக்கஞ் செய்தல் வேண்டும் என்னும் பாரதியார் நல்லுரைக்கிணங்க அயல்நாட்டாராலும் போற்றத்தகும் புலமையும் பிறர் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகம் வணங்கச் செய்யும் தமிழ் வளமையும் மிக்க அருந்தமிழ்ச் சான்றோர் பேராசிரியர் இலக்குவனார் மறைமலை அவர்கள்.   தமிழ்நாட்டில் சென்னை மாநிலக்கல்லூரியில் 30 ஆண்டுகளும் புறநகர்க்கல்லூரிகளில் 5 ஆண்டுகளும் கல்விப்பணி ஆற்றியதுடன் ஓராண்டுக்காலம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்திலும் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி உள்ளார். அங்குப் பணியாற்றுகையில் அப்பல்கலைக்கழகம் சார்பில் பிற அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும்…

மனத்தில் பதிந்த மறைமலை இலக்குவனார் – ஏர்வாடி இராதாகிருட்டிணன்

மனத்தில் பதிந்தவர்கள் : பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் – ஏர்வாடி இராதாகிருட்டிணன்     பாவேந்தருடன் பழகுதற்கியலாத வாய்ப்பை உடன்பிறப்பு மன்னர்மன்னனுடனும் எழுத்தாளர் தமிழ்வாணனுடன் கிடைக்காத தொடர்பைச் உடன்பிறப்புகள் லேனா, இரவி தமிழ்வாணன் ஆகியோரிடமும், இசைமேதை சீர்காழியுடன் பெறாத தோழமைப் பேற்றினைத் தம்பி மரு.சிவசிதம்பரத்திடமும் பெற்றதைப் போல மூத்த தமிழறிஞர் மறைந்த பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்களுடன் பழகக் கிடைக்காத குறையை இறைவன் எனக்குப் பேராசிரியர் மறைமலையுடனான நட்பில் அருளியிருக்கிறான் என்கிற நிறைவு என் நெஞ்சில் நிரம்பவுண்டு.   பேராசிரியர் மறைமலை அவர்களைப்ப்றறி…

கவிஞர் முடியரசன்- இ.மறைமலை

  கனி தமிழ்க் கவிதைபுனைந்த கரங்கள் கயிறு திரிக்கத் தொடங்கிவிட்ட இன்று, மக்கள் வாழ்வாம் கடலியக்கும் சுவைப்பாட்டாம் கண்ணான செந்தமிழைக் கட்டாயத் திணிப்பால் கடுகிவரும் காட்டுமொழியாம் இந்தி அழித்து வரும் இடுக்கண்ணான வேளையிலே, தமிழ் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தலையாய கவிஞர், தன்னுயிரை நல்குதற்கும் தயங்காது மொழிப்போரில் பங்கு கொண்ட பன்னூற்றுக்கணக்கான இளைஞர்கட்குப் பாவின்பம் நல்கிவரும் பாவலர் முடியரனேயாவார் என முட்டின்றிச் சொல்லவியலும். மறைமலையடிகளாரின் மாண்புடைத் தனித்தமிழ் இயக்கத்தைத் தகர்த்தெறிய முற்பட்ட, தீந்தமிழில் திரைக்கவிகளை எழுதித்திரட்டிவிட்ட சில தான்தோன்றிகளைப் போலன்றித், தமிழாலே உயிர் வளர்த்தும்…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’-ஆய்வுநூல் 8 – மறைமலை இலக்குவனார்

(அகரமுதல 94, ஆவணி 13, 2046 / ஆக.30, 2015 தொடர்ச்சி)   ‘தமிழ்மொழி, முண்டா, திராவிடம், ஆரியம் எனும் மூன்றினாலும் உருவாயது’ என்று வையாபுரி(ப்பிள்ளை) கூறுகிறார் (History of Tamil language and literature, p. 5).  தமிழ்மொழியைத் திராவிடத்திற்கு அயலான ஒன்றாக வையாபுரியார் கருதுவது வியப்பையளிக்கிறது என்கிறார் பேராசிரியர் இலக்குவனார்.  ‘தமிழையும் தமிழைச் சார்ந்த மொழிகளையும் திராவிடம் என்று அழைத்தலை அவர் மறந்துவிட்டார் போலும்’ (மே.ப. ப.177) என வியக்கும் பேராசிரியர், ‘ஒரயான் (Oraon) என்ற மொழி திராவிடக் குழுமொழிகளுள் திருத்தம்…

இலக்குவனாரின் “பழந்தமிழ்”-ஆய்வுநூல்: 6 – மறைமலை இலக்குவனார்

 “திராவிடமொழியின் தொன்மையை நிலைநாட்டப் பேரளவில் பெறலாகும் துணையினைச் செந்தமிழே அளிக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்” என்னும் அறிஞர் கால்டுவெல் (திரா. ஒப். – ப. 106) கூற்றினையும் தம் கருத்துக்கு அரண்சேர்க்கும் வகையில் மேற்கோள் காட்டுகிறார். திராவிடமொழிகள் பன்னிரண்டையும் ஒப்பிட்டு ஆராய்ந்து இவையனைத்தும் ஒரு குழுவைச்சார்ந்தனவே எனத் திட்டவட்டமாக ஆய்ந்து நிறுவிய அறிஞர் கால்டுவெல் “பழந்தமிழ்தான் இவையனைத்துக்கும் தாயாகும் உரிமையும் சிறப்பும் உடையது என்பதை வெளிப்படையாகக் கூறினாரிலர்” (பழந்தமிழ் – ப. 67) என வருந்தும் பேராசிரியர், “அவர் அவ்வாறு கூறாது போயினும், அவருடைய ஆராய்ச்சி…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்”-ஆய்வுநூல் 2 – மறைமலை இலக்குவனார்

(அகரமுதல 19.07.15 தொடர்ச்சி) 2   தொல்காப்பியர்காலத்தமிழுக்கும் திருவள்ளுவர்காலத்தமிழுக்கும் இடையே நிலவிய சில வேற்றுமைகளைப் பட்டியலிடுகிறார் (மே.ப. ப.139-140).  ‘அடிப்படையில் எவ்வித மாற்றமும் ஏற்பட்டிலது.  விகுதிகள், உருபுகள், இடைநிலைகள், சொற்கள் புதியனவாகத் தோன்றியுள்ளன.  பழையன புதிய பொருள்கள் பெற்றுள்ளன’ என்று இவற்றைச் சுருக்கமாகத் தொகுத்துரைத்து, இவ்விருவர் கால இடைவேளை ஆறு நூற்றாண்டுகள் என்பதையும் சுட்டி ‘ஆறு நூற்றாண்டுகட்குள் மேலைநாட்டு மொழிகளில் பல அடைந்துள்ள மாற்றங்களோடு தமிழ்மொழி அடைந்துள்ள மாற்றங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழ்மொழி மாற்றமே அடையவில்லை என்று கூறிவிடலாம்’ (மே.ப. ப.139-140) என அறுதியிட்டுரைக்கிறார்….

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்”-ஆய்வுநூல் 1 – மறைமலை இலக்குவனார்

செந்தமிழின் செம்மொழிச்சீர்மையை விளக்கும் இலக்குவனாரின் ‘பழந்தமிழ்”-ஆய்வுநூல்   செம்மொழியாக ஒரு மொழியைத் தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோற்றம் ஏனைய மொழிகளின் சார்பின்றியிருத்தலும் வேண்டும்.  என்கிறார் அமெரிக்கத் தமிழறிஞர் சார்சு கார்ட்டு (George Hart). ஒரு மொழியின் இலக்கியப்பழமையே அதனைச் செம்மொழியாகப் போற்றுதற்கு முதன்மைக் காரணம் எனக் கூறுவதுடன் சங்க இலக்கியங்களின் செழுமையையும் அவர் விரிவாக விளக்கித் தமிழுக்குச் செம்மொழித் தகுதிப்பேறு வழங்குவது குறித்த ஆய்வு தேவையற்றது என்கிறார்.   தமிழுக்குச் செம்மொழித் தகுதிப்பேறு வழங்கவேண்டும் என்று…