புரட்சி நடிகர் இருபதாம் நூற்றாண்டின் இனிய பாரி – சி.இலக்குவனார்

இருபதாம் நூற்றாண்டின் இனிய பாரி “கலைஞருள் வள்ளல், காசினி போற்றும் வள்ளலுள் கலைஞர்; வருந்தும் எவர்க்கும் ஒல்லும் வகையில் உடனே உதவும் புரட்சி நடிகர், பொல்லாங்கெதனையும் நடிப்பினுங்கொள்ளா நடிகவேள், நானிலம் இனிதே வாழ என்றும் எண்ணி அன்பும் அருளும் அணியாய்ப் பெற்றவர் இவரால் உயர்ந்தார் எண்ணிலர் என்றும் அண்ணா வழியில் அணியுறச் செல்லல் முந்துறும் தளபதி, மூவா இளைஞர் இராமச்சந்திரன் எனும் பெயரால் எனக்கும் அண்ணன் எவர்க்கும் தோழன் ஒப்பிலாப் பண்பினர், உலகம் போற்ற நடிக்கும் வித்தகர், நடிப்போர் சூழமும் ஐம்பெருங் குற்றமும் அணுகா…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 12: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 11:   தொடர்ச்சி) 12   1952 இல் இந்தியப் பாராளுமன்றத்திற்கு பொதுத் தேர்தல் நடை பெற்றது. புதியன செய்யும் பொறியில் வல்லுநர் கோ.து.நாயுடு திராவிடர் கழகச் சார்பில் திருவில்லிப்புத்தூர் பாராளுமன்றத் தொகுதியில் நின்றார். கோ.து.நாயுடு  உழைப்பால் உயர்ந்த அறிஞர்; உலகம் சுற்றியவர்; பலகலைகள் கற்றவர்; பேருந்து வண்டிகள் நடத்தும் பெருஞ் செல்வர்; கோவை நகரைச் சார்ந்தவர். இவரை எதிர்த்து கருமவீரர் காமராசர் போட்டியிட்டார். காமராசர் தமிழ்நாடு காங்கிரசின் தலைவராய் விளங்கியவர். தமிழ்நாட்டு அமைச்சரவையை ஆக்கவும் நீக்கவும் ஆற்றல்…

பன்னிரு மாதங்களும் தமிழ்ப்பெயர்களே! – சி.இலக்குவனார்

  கார் காலம் என்பது ஆவணியும் புரட்டாசியுமாம். ஒரு காலத்தில் ஆண்டுத் தொடக்கம் ஆவணி முதலாகக் கொள்ளப்பட்டது என்பர். இன்றும் மலையாள நாட்டில் ஆண்டுத் தொடக்கம் ஆவணியிருந்தே கொள்ளப்படுகின்றது. இப்பொழுது சித்திரை முதலாக ஆண்டுத் தொடக்கம் கொள்கின்றோம். இம்மாற்றம் என்று உண்டாயிற்று என்பது ஆராய்ந்து காண்டற்குரியது. ஆவணியும் புரட்டாசியும் கார்காலம்; ஐப்பசியும் கார்த்திகையும் கூதிர் காலம்; மார்கழியும் தையும் முன் பனிக்காலம்; மாசியும் பங்குனியும் பின் பனிக் காலம்; சித்திரையும் வைகாசியும் இளவேனிற்காலம்; ஆனியும் ஆடியும் முதுவேனிற்காலம். இவ்வாறு காலங்கள் பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டு வந்தன….

காதல்வாழ்வே இலக்கியத்தோற்றத்தின் விளைநிலம் – சி.இலக்குவனார்

       காதல் என்பது நாகரிகப் பண்பாட்டின் அளவு தெரிவிக்கும் உரைகல் என்றும் உரைக்கலாகும். சாதி மத நிலை வேறுபாடற்ற மக்களின் வாழ்வின் நிலைக்களமும், ஆண் பெண் சமத்துவ உரிமைப் பண்பும் காதலே. அக்காதல் வாழ்வே இலக்கியத் தோற்றத்திற்கு உரிய விளை நிலமாதலின் அது பற்றி இலக்கியத்தில் கூறும் மரபுகளைத் தொகுத்துரைப்பதே அகத்திணையியலாகும். செந்தமிழ்மாமணி முனைவர் சி.இலக்குவனார் : தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 129-130

தமிழ்ப்பண்பாடே உலக நாகரிக ஊற்று – சி. இலக்குவனார்

       தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர் என்றும், ஆரியர்களால் நாகரிகர் ஆக்கப்பட்டவர் என்றும், திராவிடம் என்ற சொல்லிலிருந்தே ‘ தமிழ் என்ற சொல் தோன்றியது என்றும் உண்மை நிலைக்கு மாறாகக் கூறியவர்களும் உளர். ஆரியர்கள் கலப்பு ஏற்படுவதற்கு முன்னர் இருந்த தமிழகப் பண்பாட்டையும், நாகரிகத்தையும் தொல்காப்பியத்தினால் நன்கு அறியலாகும். அப் பண்பாடும் நாகரிகமும் இக் காலத்திலும் போற்றிக்கொள்ளக் கூடியனவாய் உள்ளன. அங்ஙனமிருந்தும் உலகப் பண்பாடு, உலக நாகரிகம், உலக வரலாறு என்று கூறப்படும் நூல்களில் தமிழகத்தைப் பற்றிய எவ்விதக் குறிப்பும் காண இயலாது. கிரேக்கநாட்டுப் பெரியவர்களைப்…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 12 – பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 11 தொடர்ச்சி)   இருப்பின் துயரம்; இறந்தால் யாதோ?” என்றே யரற்றி ஏங்கிப் புலம்ப “பிறந்தோர் இறப்பது பெரிது மறிவாய் இறந்தோர் பொருட்டு ஏங்கிப் புலம்பி உடலும் உளமும் ஒருங்கே வாடி மாளும் வரையில் மகிழ்வு மற்று இறந்தோர் பலரும் எய்திய தென்னோ? இன்னும் சிலநாள் இருந்து மறைவோன் இன்னே மறைந்தனன் இதுவும் வியப்போ உலகிற் பிறந்த ஒவ்வொரு வருமே, ஒவ்வொரு தொண்டு செவ்விதி னாற்றக் கடப்பா டுடையர்; இடர்ப்பட நேரினும் அண்மையி லிறப்போர், அவர்க்குள தொண்டை *…

தொல்காப்பியர் தலைசிறந்த மொழிநூல் புலவர் – சி. இலக்குவனார்

   சொற்களுள் சில பொருளுணர்த்தும் மரபினையும் புதிய சொற்கள் அவ்வப்போது படைத்துக்கொள்ளப்படலாமெனவும், வழங்கும் சொற்களையே உருக்குறைத்து வழங்குதல் உண்டெனவும், சொல்லுக்குரிய பொருளென்ற குறிப்பால் வேறு பொருள் பெறப்படுதல் உண்டெனவும் ஒரு பொருள் தரும் இரு சொற்களைச் சேர்த்துக் கூறல் இயல்பெனவும் வழக்காற்றில் சொல் பயனுறும் முறையைத் தெள்ளிதின் விளக்குவதனால் ஆசிரியர் மொழி நூற்புலவராகவும் விளங்குகின்றார்.    மொழி என்பது மக்களுக்கு இன்றியமையாது வேண்டப்படும் கருவி; அக்கருவி வழக்காற்றினுள்ளும் செய்யுளுள்ளும் எவ்வாறு பயன்பட்டு வருகின்றது என்பதனைப் பதினெட்டு இயல்களால் ஆராய்ந்து கூறியுள்ள சிறப்பு வேறு எம்மொழிக்கும்…

வரலாறு எழுதுவோர் தெல்காப்பியம் கற்க வேண்டும் – சி. இலக்குவனார்

       வரலாற்று நூலாசிரியர்களில் பெரும்பான்மைபினர் தொல்காப்பியத்தைக் கற்றறியும் பேறு பெற்றிலர். ஆகவே தமிழர்களைப் பற்றித் தவறான செய்திகளை எழுதி விட்டனர். தமிழக வரலாறு எழுதுவோர் தொல்காப்பியத்தைக் கற்று அறிதல் வேண்டும். அப்பொழுதுதான் தமிழர்களைப் பற்றிய உண்மையான வரலாற்றினை எழுதுதல் கூடும். செம்மொழிச் செம்மல் முனைவர் சி. இலக்குவனார்  : தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 127

தொல்காப்பியம் வரலாற்றுக் கருவூலமாகும் – சி.இலக்குவனார்

எகிப்தியரும், கிரேக்கரும், சீனரும், தொன்மை வாய்ந்த நாகரிகமும் பண்பாடும் உடையவர் என்று வரலாறுகள் கூறுகின்றன. தமிழரும் மிகமிகத் தொன்மை வாய்ந்த நாகரிகமும், பண்பாடும் உடையவர் என்பதைத் தொல்காப்பியத்தால் அறியலாகும். ஆனால் இத் தொல்காப்பியத்தை உலகம் இன்னும் நன்கு அறிந்திலது. தமிழர்களே அறிந்திலர். தொல்காப்பியப் பொருட்படலம் இலக்கிய விளக்கம் தரும் இன்ப நூலாக மட்டுமின்றி வரலாற்றுக் கருவூலமாகவும் அமைந்துள்ளது. செம்மொழிச் செம்மல் முனைவர் சி. இலக்குவனார்  : தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 126

” வாழ்வு இன்பத்திற்குரியது” என்று தமிழ்ப் பெரியார்கள் நிலைநாட்டினர்.- சி. இலக்குவனார்

  வாழ்வின் குறிக்கோள் என்ன? இன்பமாக வாழ்தல். வாழ்வே இன்பத்திற்குரியது. வாழ்வில் ஒரொருகால் துன்ப நிகழ்ச்சிகள் தோன்றினும் அவையும் இன்பத்திற்கு அடிப்படையாகும்; ஆதலின் இன்பமென்றே கருதத் தக்கன. எல்லாம் இன்பமயம். இன்ப வாழ்வுக்கே இன்ப வாழ்வால் மக்கள் தோன்றியுள்ளனர். உலகில் தோன்றிய பிற நாட்டுப் பொரியார்கள், ” உலகம் துன்ப மயம் ; துன்ப வழ்விலிருந்து விடுதலை பெறுவதே வாழ்வின் குறிக்கோள்” என்றனர். தமிழ்ப் பெரியார்கள் அவ்வாறு கருதாது, “வாழ்வு இன்பத்திற்குரியது; இன்பமாகவாழ்தலே வாழ்வின் குறிக்கோள்” என்று நிலைநாட்டினர். அவ்வின்ப வாழ்வுக்கு அடிப்படை இல்லற…

வேற்றுமொழிப் பெயர்ச் சொல்லைத் தமிழோசைவூட்டியே கொள்ளல் வேண்டும் – சி.இலக்குவனார்

           வேற்று மொழிப் பெயர்ச் சொல்லைக் கொள்ள வேண்டிய இன்றியமையாத நிலை ஏற்படின் கொள்ளலாம் என்றும், கொள்ளுங்கால் தமிழோசையூட்டியே கொள்ளல் வேண்டுமென்றும் ஆசிரியர் கூறியிருப்பதை அறியாது வரையறையின்றி வேற்று மொழிச் சொற்களை அம்மொழிகளில் உள்ளவாறே தமிழில் எடுத்தாளத் தொடங்குவது தமிழுக்கு அழிவு தேடித் தருவதாகும்; தொல்காப்பியர் கொள்கைக்கு மாறு பட்டதாகும்; மொழி நூலுக்கும் முரண்பட்டதாகும். செம்மொழிச் செம்மல் முனைவர் சி. இலக்குவனார்  : தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 117

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 11: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 10: தொடர்ச்சி) 11   தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க கால வரலாறு சரியாக எழுதப் பெறவில்லை. புலவர்கள் பிறந்த இடம், பிறந்த நாள், வளர்ந்த சூழ்நிலை ஆகியவை முறையாக எழுதி வைக்கப் பெறவில்லை. சிறப்பான செய்யுட்கள் பலவற்றை எழுதிய புலவர்கள் தம்மைப் பற்றி எழுதுவதைத் தற்புகழ்ச்சி என எண்ணி விட்டார்கள் போலும். அதனால் சங்கச் செய்யுட்களைக் கால வரிசைப் படி தொகுக்க முடியவில்லை.   பதிற்றுப் பத்து என்ற செய்யுள் தொகுப்பு மட்டும் இதற்கு சிறிது…