33.“சனாதனம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியதைத்தான் விவரிப்பதாகக் கிருட்டிணசாமி கூறுகிறாரே!+34.சனாதனத்தை அனைவரும் போற்ற வேண்டும் என்கிறார்களே!-இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 31 – 32-தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 33-34 சூத்திரன் மன்னனாக இருக்கும் நாட்டில் வசிக்கக் கூடாது.. .. ..சண்டாளர்கள் வசிக்கும் நாட்டிலும் வசிக்கக் கூடாது. (மனு 4.61) சூத்திரர் நிறைந்த தேசம் எப்பொழுதும் வறுமை யுடையதாயிருக்கும். (மனு 8. 22) சூத்திரன் வீட்டிலிருந்து கேளாமலும் யோசிக்காமலும் தேவையான பொருளைப் பிராமணன் பலாத்காரத்தினால் கொள்ளையிடலாம். மனு 11. 13) நற்பண்பான(யோக்கியமான) அரசன் இவ்விதம் திருடிய பிராமணனைக் தண்டிக்கக் கூடாது. (மனு 11. 20) சனாதனம் கூறும் இவற்றைத்தான்…
சனாதனத்தில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை-ஆளுநர் இரவி;பெண்களைப் பரத்தையர் என்று திருவமாவளவன் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்-குட்பூ – சரிதானா? – இலக்குவனார் திருவள்ளுவன்
(மனிதர்களிடையே பாகுபாட்டை உண்டாக்குவது சனாதனம் இல்லை என்கிறாரே ஆளுநர் இரவி – தொடர்ச்சி) சூத்திரனுக்குத் தாழ்வான பெயர் சூட்டுக; பிராமணனுக்கு மங்களத்தையும்; சத்திரியனுக்கு வலிமையையும் வைசியனுக்குப் பொருளையும்; சூத்திரனுக்குத் தாழ்வையும் காட்டுகிறதான பெயரை இடவேண்டும். – (மனு 2 . 31, 32) அப்படிப் பெயர் சூட்டுவதற்காக உயர்வு தாழ்வுப் பெயர் முடிவுகளையும் மனு கூறுகிறது. “பிராமணனுக்குச் சருமாவென்பதையும்; சத்திரியனுக்கு வருமம் என்பதையும்; வைசியனுக்குப் பூதி யென்பதையும் சூத்திரனுக்குத் தாசனென்பதையும் தொடர்பேராக இடவேண்டியது.- (மனு 2.32) வருண வேறுபாட்டை வரையறுத்து ஒரு பிரிவினரை மிக…
மனிதர்களிடையே பாகுபாட்டை உண்டாக்குவது சனாதனம் இல்லை என்கிறாரே ஆளுநர் இரவி -இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனத்தில் பெண் அடிமைத்தனத்திற்கும் உயர்வு தாழ்விற்கும் இடமில்லையாமே? –தொடர்ச்சி) உழைப்பிலும் உழைப்பிலிருந்து கிடைக்கும் ஊதியத்திலும் பாகுபாடு கற்பித்து இழிவுபடக் கூறும் சனாதனத்தை ஏற்போர் மனித நேயமற்றவர்களாகத்தான் இருப்பார்கள். பிராமணன் கூலி கொடாமலே சூத்திரனிடம் வேலை வாங்கலாம்; ஏனென்றால் பிராமணனுக்குத் தொண்டு செய்யவே கடவுளால் சூத்திரன் படைக்கப் பட்டிருக்கிறான்” (மனு 8.413) என்கிறது சனாதனம். பிராமணன் உழைக்கமாட்டானாம் . சூத்திரன் என அவனால் சொல்லப்படும் பிரிவினர் உழைக்கும் ஊதியத்தைப் பெற்றுக் கொள்வானாம். “ஒருவேளை, சூத்திரன் எனப்படுவோன் தான் உழைத்துப் பெற்ற ஊதியத்தைப் பிராமணனுக்குத் தராவிட்டால் என்…
சனாதனம் – பொய்யும் மெய்யும்: முன்னுரை- இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனம் – பொய்யும் மெய்யும் முன்னுரை சனாதனம் தமிழர்க்கு மட்டுமல்ல, மனித உலகிற்கே எதிரானது. ஆனால் திட்டமிட்டே சனாதனம் குறித்து உயர்வாகப் பரப்புவதால் மக்கள் உண்மையைப் புரிந்து கொள்ளாமல் “அதுபாட்டுக்கு இருந்துவிட்டுப் போகட்டுமே! நமக்கு என்ன?” என்று எண்ணுகிறார்கள். சனாதனத்தால் மிகுதியாக எப்பிரிவினர் தீங்கிற்கு ஆளாகிறார்களோ அப்பிரிவினரையே அதற்கு ஆதரவாகப் பேச வைப்பதுதான் சனாதனவாதிகளின் வெற்றியாகிறது. சான்றுக்கு ஒன்று பார்க்கலாம். நேரு, பெண்களுக்குச் சொத்துரிமையில் பங்கு உண்டு எனச் சட்டம் கொண்டுவர சட்ட வரைவைக் கொண்டு வரும் பொழுது காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதி…
சனாதனம் – பொய்யும் மெய்யும் – பதிப்புரை
சனாதனம் – பொய்யும் மெய்யும் பதிப்புரை வருணாசிரம் என்பதும் அதனடிப்படையிலான சனாதனம் என்பதும் காலந்தோறும் கண்டனத்திற்கு ஆளாகி வருகிறது. திராவிட இயக்கங்கள் வளரத் தொடங்கியபின் இதன் எதிர்ப்பு மேலும் பரவியது. சனாதனத்திற்கு ஆதரவாகச் சிலர் எழுதவும் பேசவும் செய்தனர். தன்மதிப்பாளர்கள் அதனை எதிர்த்து வந்தனர். சில திங்கள் முன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெற்றது. இதில் பேசிய இளைஞர் நலன் விளையாட்டு அமைச்சர் உதயநிதி, சனாதன எதிர்ப்பு மாநாடு என்று குறிப்பிடாமல் சனாதன ஒழிப்பு…
சனாதனவாதிகளின் இனவெறி, கொலை வெறிப்பேச்சுகள்
சனாதனம் 2 : இலக்குவனார் திருவள்ளுவன் – காணுரை
சனாதனம் 2 பதவி நிலைகளும் வருணாசிரமும் இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனம்: அமைச்சர்கள்மீது நடவடிக்கை: நீதிமன்றக் கண்ணோட்டம் தவறு – இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனம்: அமைச்சர்கள்மீது நடவடிக்கை: நீதிமன்றக் கண்ணோட்டம் தவறு சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி தாலின் பேசியதற்கும் அம்மாநாட்டில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பங்கேற்றதற்கும் கண்டனம் தெரிவித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் பேசியும் எழுதியும் வருகின்றனர். அறியாப் பிள்ளைகள் தெரியாமல் பேசுகின்றனர் என்றும் கட்சிக் கண்ணோட்டத்தில் பழி தூற்றுகிறார்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தோம். நீதிபதிகள் சிலரும் இந்த எண்ணத்தை எதிரொலிக்கலாம் என்றும் ஐயம் வந்தது. அதை உண்மை என்று மெய்ப்பிக்கும் வண்ணம் மாண்பமை நீதிபதி செயச்சந்திரன் கருத்து…
