கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 16 : அன்றே சொன்னார்கள் 54 – இலக்குவனார் திருவள்ளுவன்
(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 15 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 16 கட்டடச் சிறப்பிற்கு எடுத்துக் காட்டாக அரண்மனையைக் கட்டி எழுப்புவது குறித்து மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் நெடுநல்வாடை என்னும் இலக்கியத்தில் கூறி உள்ளதைப் பார்த்தோம். தொடர்ச்சியை இப்பொழுது காண்போம். வென்றெழு கொடியோடு வேழஞ் சென்றுபுகக்குன்றுகுயின்று அன்ன ஓங்குநிலை வாயில்திருநிலை பெற்ற தீதுதீர் சிறப்பின்தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து (நெடுநல்வாடை : 87—90) வெற்றிக்கொடியை யானைமீது அமர்ந்து பிடித்து உலா வருவது வழக்கம். அக் கொடி தாழவோ சாய்க்கவோ…
கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 6, அன்றே சொன்னார்கள்44, இலக்குவனார் திருவள்ளுவன்
(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -3:தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 6 நகரங்கள் போல் பெரிதாக அமைந்த மாளிகைகளை நகர் என்றே பழந்தமிழர் குறிப்பிட்டள்ளதைக் கண்டோம். புலவர்கள், நகரங்களைப்பற்றிக் குறிப்பிடும் பொழுதே நகரங்களில் உள்ள கட்டடங்களின் சிறப்புகளை வெளிப்படுத்தி உள்ளனர். மாளிகைகள் பற்றிக் குறிப்பிடும் பொழுதே அவற்றின் உயரம், அகலம், காவல், வளமை முதலான சிறப்புகளை உணர்த்த அவர்கள் தவறவில்லை.உயர்ந்த மேல்நிலைகளை உடைய பெரிய மனை நெடுநிலை வியல் நகர் எனச் சொல்லப்பட்டுள்ளது. புலவர் மதுரைச் சுள்ளம்போதனார்,வியல் நகர் (நற்றிணை: 215.4) என அகன்ற மாளிகையைக்குறிப்பிடுகிறார். …
மணிப்பொறிகளை மாண்புடன் அமைத்தனர் – அன்றே சொன்னார்கள் 31: இலக்குவனார் திருவள்ளுவன்
( எழுத்தைக் காப்போம் ! – தொடர்ச்சி) மணிப்பொறிகளை மாண்புடன் அமைத்தனர் கடிகாரத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான கிளாக்கு (clock) மணி என்னும் பொருளைத் தரும் கிளோக்கா என்னும் செல்திக்கு (Celtic Language) சொல்லில் இருந்து உருவானது. மணி என்பது முதலில் ஒலிக்கும் மணியைக் குறித்தது. மணி அடித்து நேரத்தை அறிவித்ததன் அடிப்படையில் இச் சொல் பின்னர் மணியைக் குறிப்பதாக மாறியது. பீட்டர் என்கின் என்னும் பூட்டுத் தொழிலாளி கி.பி.1510இல் நிலைக் கடிகாரம் ஒன்றை உருவாக்கினார். கி.பி.1656இல் இயூயன்சு என்னும் ஆலந்து நாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர் ஊசல்…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 21: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 20 தொடர்ச்சி) 21 குற்றமற்ற அறநெறியாம் மக்களாட்சி நெறி முறையைப் பின்பற்றிக் மிகப்பெரிய இயக்கமாகத் திராவிட முனனேற்ற கழகத்தை அமைத்து மக்களைக் கவர்ந்தார். மக்களின் மிகப்பெரிய ஆதரவுடன் 6.3.1967 ஆம் நாளன்று தமிழகத்தின் முதலமைச்சராய் அரியணையில் அமர்ந்தார். பேச்சுத் திறன் கொண்டு மக்கள் உள்ளம் கவர்ந்து தலைவரானார். இத் தரணியில் இவர் போல் வேறு எவரேனும் உண்டோ? சொல்வீர். இதனை, சொல்லுந்திறன் கொண்டே தோமில் நெறியில் மக்களைக் கவர்ந்த மாபே ரியக்கம் அமைத்து முதல்வராய்…
நாட்டிய நங்கையர் அறிவதற்கெனச் சிறந்து விளங்கிய கலைகளில் சில
வேத்தியல், பொதுவியல் என்றிரு திறத்துக் கூத்தும், பாராட்டும், தூக்கும், துணிவும், பண்ணியழ்க் கரணமும், பாடைப் பாடலும், தண்ணுமைக் கருவியும், தாழ்தீங் குழலும், கந்துக் கருத்தும்,மடைநூற் செய்தியும், சுந்தரச் சுண்ணமும், தூநீ ராடலும் பாயற் பள்ளியும், பருவத்து ஒழுக்கமும், காயக் கரணமும், கண்ணியது உணர்தலும் கட்டுரை வகையும், கரந்துறை கணக்கும், வட்டிகைச் செய்தியும், மலராய்ந்து தொடுத்தலும், கோலம் கோடலும், கோவையின் கோப்பும் காலக் கணிதமும், கலைகளின் துணிவும், நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த ஓவியச் செந்நூல் உரைநூற் கிடக்கையும் கற்றுத் துறைபோகிய பொற்றொடி நங்கை…
மொழித் தொண்டர்கள்: சீத்தலைச் சாத்தனார் – -புலவர்மணி இரா. இளங்குமரன்
இறைவன் அடியார்களுள் வன்தொண்டர் உளர்; மென் தொண்டரும் உளர். வன் தொண்டர் எனப் பெயர் பெற்றார் சுந்தர மூர்த்தி நாயனார். அவர் வன் தொண்டருக்குச் சான்றானார்! மணிவாசகரும் இராமலிங்கரும் மென்தொண்டருக்குச் சான்றாளர்கள். மொழித் தொண்டர்களினும் இவ்வாறு வன் தொண்டரும் உளர்; மென் தொண்டரும் உளர். மொழிப் பிழை செய்தாரைத் தலையில் குட்டிய பிள்ளைப் பாண்டியனும் காதைக் குடைந்து, அறுத்த வில்லியும்வன் தொண்டர்கள். சாத்தனாரோ மென் தொண்டர். மொழிக்குறை செய்தாரின் நிலைக்கு இரங்கி நொந்து தம் தலையில் எழுத்தாணியால் இடித்துக் கொண்டார் அல்லவா! கெய்சர்…
