தோட்டக்கலையின் தாயகம் தமிழ்நாடே! – ச.கு.கணபதி
தோட்டக்கலையின் தாயகம் தமிழ்நாடே! எந்தநாட்டின் பழைய மொழியினுள்ளும் இத்தகைய அரிய செய்திகளை அறிவிக்கத்தக்க பழஞ்சொற்கள் இல்லை. எந்த மொழியைப் பேசுவோரின் பழங்காலக் கலாச்சாரங்களிலும் தமிழரிடம் இருந்தன போன்ற தோட்டக்கலையின் தொடர்பான பழக்கவழக்கங்கள் இருக்கவில்லை. எனவே, தோட்டக் கலையின் தாயகம் தமிழ்நாடே என்பது உறுதி. அக்கலை, வரலாற்றுக்கு எட்டாத காலத்திலேயே தமிழரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவிவிட்டது. இப்பரவலுக்குக் காரணம் தமிழ் வணிகர் கடல் கடந்து தொலைவு நாடுகளுக்குச் சென்று வந்ததே. ச.கு.கணபதி: குமரிக் கண்டத் தமிழர்: பக்கம்.75
ஆரியர் நெடும்படை வென்றதிந் நாடு! – வாணிதாசன்
என்னுயிர் நாடு என்தமிழ் நாடு என்றவு டன்தோள் உயர்ந்திடும் பாடு! அன்னையும் அன்னையும் அன்னையும் வாழ்ந்த அழகிய நாடு! அறத்தமிழ் நாடு! தன்னிக ரில்லாக் காவிரி நாடு! தமிழ்மறை கண்ட தனித்தமிழ் நாடு! முன்னவர் ஆய்ந்த கலைசெறி நாடு! மூத்து விளியா மறவரின் நாடு! ஆர்கடல் முத்தும் அகிலும் நெல்லும் அலைகடல் தாண்டி வழங்கிய நாடு! வார்குழல் மாதர் கற்பணி பூண்டு வாழைப் பழமொழி பயி்னறதிந் நாடு! ஓர்குழுவாக வேற்றுமை அற்றிங்(கு) ஒன்றிநம் மக்கள் வாழ்ந்ததிந் நாடு! கார்முகில் தவழும் கவின்மிகு நாடு! கடும்புலிப்…
இந்திய வரலாற்றில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது – கே.கே.பிள்ளை
தமிழ்ச் சமுதாயம் மிகவும் பழமையான ஒன்றாகும். பண்டைய எகிப்து, பாபிலோனியா, கிரீசு, உரோம் ஆகிய நாடுகள் நாகரீகத்தில் மிகவும் சிறந்து விளங்கிய பண்டைக்காலத்திலேயே தமக்கென ஒரு நாகரிகத்தையும் சிறந்த பண்பாட்டையும் வளர்த்து வாழ்ந்து வந்தவர்கள் தமிழர்கள். இந்திய நாட்டு வரலாற்றில் இதுவரையில் தமிழகத்துக்குச் சிறப்பிடம் அளிக்கப்படவில்லை. தமிழ்நாடு என்று ஒரு நாடு இருப்பதாகவே வரலாற்று ஆசிரியர்கள் கருதியதில்லை. சென்ற நூற்றாண்டில் ஆர்.(ஞ்)சி.பந்தர்க்கார் என்பார் இந்திய வரலாறு ஒன்று எழுதி வெளியிட்டார். அதில் அவர் தமிழ்நாட்டைப் பற்றியே குறிப்பிடவில்லை. இக்குறைப்பாட்டை வின்செண்டு சுமித்…
தமிழ்நாடு ஒருமையுடன் உழைத்தால் பெருமையடையும்! – இரா.பி.சேதுப்பிள்ளை
விழுமிய வீரம் “தோன்றிற் புகழொடு தோன்றுக” என்றார் திருவள்ளுவர். அவ்வுரையின் வழிநின்று வீரப்புகழ் பெற்றது பழந் தமிழ்நாடு. பாரில் உயர்ந்த பனிவரை மேல் நின்றது பழந்தமிழர் வீரம். கங்கை நாட்டில் கதித்தெழுந்த பகைவரை அறுத்தது தமிழர் வீரம். கடல் கடந்து மாற்றாரைக் கலக்கியது தமிழர் வீரம். இது சென்ற காலத்தின் சிறப்பு. மறவர் நிலை அன்று நாற்றிசையும் போற்ற ஏற்றமுற்று வாழ்ந்த தமிழ்நாடு இன்று ஊக்கம் இழந்து உறங்குகின்றது. மன்னரும் மதிக்க வாழ்ந்த மறக்குலம் இடைக்காலத்தில் அடக்கி ஒடுக்கப்பட்டது. அக்குல வீரரது முறுக்கு மீசை…
கல்வி கேள்வியில் வல்லவர்களை மதித்த பழந்தமிழகம் – முனைவர் ப.கிருட்டிணன்
கல்வி கேள்வியில் வல்லவர்களை மதித்த பழந்தமிழகம் கல்வியாளர்கள் ‘நல்லிசைப் புலவர்’ ( தொல்.பொருள் 313.14) ‘புலன் நன்குணர்ந்த புலமையோர்’ (தொல்.பொருள் 12:3) ‘வாய்மொழிப் புலவர்’ (தொல்.பொருள்.387:2) ‘நூல் நவில் புலவர்’ (தொல்.பொருள்.467:2) ‘உயர்மொழிப் புலவர்’ (தொல்.பொருள்.482:3) ‘தொன்மொழிப் புலவர்’ (தொல்.பொருள்.550:3) ‘நுணங்கு மொழிப் புலவர்’ (தொல்.பொருள்.653:5) என இனம் குலம் சுட்டாமல் பொதுப்படையாகப் பாராட்டப் பெற்றனர். மிக எளிய குலத்தில் பிறந்த பாணர்கள் கூடத் தம் கலைச் சிறப்பால், ‘முதுவாய் இரவலர்’ (சிறுபாண். 40; புறம் 48:7)…
இறையாண்மை என்றால் இதுதான் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்
இறையாண்மை என்னும் சொல்லிற்குக் காலந்தோறும் மாறுபட்ட பொருள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒரு குறிப்பிட்ட புவிப்பரப்பில் செலுத்தும் வகையில் அதிகாரம் முற்றிலும் உறைதல் (தங்குதல்) என்னும் அடிப்படைப் பொருளில் மாற்றம் மிகுதியாக இல்லை. இறையாண்மை என்பது அண்மையில் பெரிதும் பேசப்பட்டு வருவதால் நாம் இதனை அறிந்து கொள்ள வேண்டியது உள்ளது. தமிழர்க்கு இறையாண்மை மிக்க அமைப்பு தேவையா? அவ்வாறு பேசுவது சரியா? தவறா? தமிழக இறையாண்மை என்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானதா? என்பனவெல்லாம் நாம் அறிய வேண்டுவன ஆகும்.புவிப்பரப்பில் சட்டங்களையும் விதிகளையும் ஆக்கவும்…
தமிழ் நாடு – பாவேந்தர் பாரதிதாசன்
சேரன் செங்குட்டு வன்பிறந்த வீரம் செறிந்த நாடிதன்றோ? சேரன் செங்குட்டுவன்… பாரோர் புகழ் தமிழ்ச் சேயே பகை யஞ்சிடும் தீயே நேரில் உன்றன் நிலையை நீயே நினைந்து பார்ப் பாயே. சேரன் செங்குட்டுவன்… பண்டி ருந்த தமிழர் மேன்மை பழுதாக முழு துமே கண்டி ருந்தும் குகையிற் புலிபோல் கண்ணு றக்கம் ஏனோ? சேரன் செங்குட்டுவன் … – பாவேந்தர் பாரதிதாசன்
செஞ்சீனா சென்றுவந்தேன் 22 – பொறி.க.அருணபாரதி
22. மக்கள் சீனத்தின் எதிர்காலம்? இறுதியாக, நான் தாயகம் திரும்ப வேண்டிய நாள் வந்தது. சீனாவின் இன்றைய நிலை குறித்து அசைபோட்டேன். இன்றைய சீனாவின் நிறைகுறைகள் அனைத்தும், நாளை அமையவிருக்கும் தமிழ்த் தேசத்திற்கு படிப்பினைகாக விளங்கக்கூடியவை. எதிர்காலத்தில், பொதுவுடைமைக் கட்சியின் ஒருகட்சி முற்றதிகாரம் நிலவும் சீனாவில், இப்பொழுது நிலவுவதை விட அதற்கெதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கும். அப்பொழுது, சீனாவின் ஒருகட்சி முற்றதிகாரம் வீழ்ந்து நொறுங்கும். உண்மையில், சீனப் பொருளியலை விழுங்கிவிட்ட (கபளீகரம் செய்துவிட்ட) மேற்குலக முதலாளிய நாடுகள், அந்த ஒருகட்சி…
வேங்கடமலை தமிழர்க்குரியதே!
வேங்கடம்: தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாட்டின் வடக்குஎல்லையாக இருந்தமலை. மாமூலனார் காலத்தும் இதுதான் வடக்கு எல்லையாகஇருந்தது. இது இப்போதுதிருப்பதி என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது. தெலுங்கர் நாடாகக்கருதப்படுகின்றது. ஆயினும் தமிழர், தங்கட்குரியது என்பதை நிலைநாட்டித் தமது வடவெல்லை மலையாக மீண்டும் கொள்ளுதல் வேண்டும். – செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார்: சங்க இலக்கியம்: பக்கம்.31
தமிழ் அரசாவது தோன்றுவதற்குத் தமிழர்கள் உழைத்தல் வேண்டும்.
அன்று இமயம் வரையில் ஆட்சி செலுத்திய தமிழர் மரபில் தோன்றியநாம் இன்று எந்நிலையில் உள்ளோம் என்பதை நினைக்கும் தோறும் உள்ளம் குமுறுகின்றதல்லவா? அந்தநாள் இனி வருமா? இமயம் வரையில் படையெடுத்துச்செல்லாவிடினும், தமிழ்நாட்டிலேனும் பிறநாட்டார்க்கு அடிமையாய் இராமல்வாழும் தமிழ் அரசாவதுதோன்றுவதற்குத் தமிழர்கள் உழைத்தல் வேண்டும். – செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார்: சங்க இலக்கியம்:பக்கம் 140
‘தமிழ்நாடு’ எனத் தனிநாடுஅமையவேண்டியதே!
சங்கக் காலத்தில் தமிழ் நாட்டின்பரப்பு, வடக்கே திருப்பதியிலிருந்தும் தெற்கே பூமையக்கோடு வரைக்கும் பொருந்தி கிழக்கிலும் மேற்கிலும் கடல்களே எல்லைகளாக இருந்தன. ஒருகாலத்து வடவிமயம் வரை, தமிழ்நாடாக இருந்தது. பின்னர் விந்தியமலைவரை சுருங்கியது. … பழைய தமிழ்நாட்டின் பரப்பைப் பெறமுடியாது போனாலும், எஞ்சியுள்ள தமிழ்வழங்கும் பகுதிகளை ஒன்றுபடுத்தித் தமிழ்நாட்டின் எல்லையை வரையறுத்தல் வேண்டும். இந்தியமாப் பெருங்கடலைக் குமரிக்கடல் என்றே அழைக்கச்செய்யவேண்டும். உலகப்பொது அரசு ஏற்படும் காலத்து நாம் உலக மக்களுள் ஒரு பகுதியினரே. மற்றைய கண்டங்களிலுள்ள மக்களோடு ஒப்பிடும்போது நாம் ஆசியக் கண்டத்தினரே….
தனித்தமிழ்நாடு இயலும் – சிவா அய்யாதுரை நேரலை உரை
சிவா அய்யாதுரை – தமிழ்நாடு தனி நாட்டிற்கான முதல் இணையத்தள நேரலை உரை – தமிழாக்கம் இந்திய நேரப்படி 05-சூன்-2014 இரவு 9.30 மணிக்கு அவரது நேரலைஉரை தொடங்கியது. இந்த நேரலையின் தொடக்கம் முதல் இறுதி வரை அவர் முழுதும் ஆங்கிலத்திலேயே அவரது உரையை தொடர்ந்தார். அதனால் எல்லா தமிழர்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக நாம் இதை மொழியாக்கம் செய்து இங்கு பதிவிட்டுள்ளோம். அவரது இந்த நேரலை நிகழ்ச்சியானது இரு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பாதி அவரது தமிழ்நாடு தனிநாடு என்பதற்கான தேவையையும்…
