செல்வம் திரட்டச் செல்வோம்! – அன்றே சொன்னார்கள் : இலக்குவனார் திருவள்ளுவன்
(நெறியுரைப் பொருளியலை வகுத்தவர் நாமே!-தொடர்ச்சி) செல்வம் திரட்டச் செல்வோம்! நெறியுரைப் பொருளியல் என்பது பொருள் அல்லது செல்வத்தின் நோக்கம் ஒழுக்கம் சார்ந்ததாக, முறை சார்ந்ததாக, மதிப்பு சார்ந்ததாக இருக்க வேண்டும் எனப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பொருளியல் அறிஞர்கள் வரையறுத்துள்ளனர். ஆனால், தமிழர்களின் தொடக்கக்கால நெறியே செல்வத்தின் பயன் என்பது மதிப்பார்ந்த நெறியாகவே உள்ளது. செல்வத்தின் பயன் பிறருக்குக் கொடுத்தல் என மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் செல்வத்தின் பயனே ஈதல் (புறநானூறு 189: 7 ) என்னும் வரி மூலம் விளக்கி இக்கோட்பாட்டை உணர்த்துகிறார். அன்பும் அல்லன…
