(சனாதனம் பொய்யும் மெய்யும் 41 – தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 42-44 பல நகரங்களிலும் ஊர்களிலும் கோவில் நுழைவுப் போராட்டம் நடந்துள்ளன என்பதை வரலாறு சொல்கிறது. ஆரியத்தின் பாய்ச்சல் – வருணாசிரமத்தின் இரும்புக் கை – சனாதனத்தின் கொடுங்கை நீதித்துறை வரை பாய்ந்துள்ளதற்குப் பல நிகழ்வுகளைச் சொல்லலாம். ஒன்று பார்ப்போம். 1874இல் மூக்க நாடார் என்பவர் மதுரையில் கோயில் ஒன்றில் கிளி மண்டபம்வரை சென்றுவிட்டார். அவர் பிராமணர் அல்லர் என்பதை அறிந்த கோயிற் பணியாளர்கள் அவரைப் பிடித்துக் கொன்றுவிட்டனர். இதனால், நாடார்கள் பணியாட்கள் மீது வழக்கு தொடுத்தனர்….