புதுச்சேரியில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-4

புதுவை-தமிழகம் இணைந்த பகுத்தறிவாளர் கழகம், புலவர் குழந்தை இயற்றிய இராவண காவியம் என்னும் இலக்கியம் பற்றிய தொடர்சொற்பொழிவை முனைவர் க.தமிழமல்லன் அவர்களைக் கொண்டு  ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது.

அதன் நான்காவது சொற்பொழிவில் இராவண காவியத்தின் காட்சிப்படலம், கைகோட்படலம், திருமணப்படலம் ஆகிய படலங்களின் பொருள் பற்றித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் உரையாற்றினார். புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. தலைவர் மு.ந.நடராசன் தலைமை தாங்கினார். புதுவைத் திராவிடர் கழகத்தலைவர் சிவ. வீரமணி தொடர்சொற்பொழிவைத் தொடங்கி வைத்தார்.பகுத்தறிவாளர் கழகச்செயலர்  நெ.நடராசன் வரவேற்றுப் பேசினார்.திக.வின் தோழர்களும் தமிழ் அன்பர்களும் திரளாக அதில் கலந்து கொண்டனர்.

நான்காம் சொற்பொழிவை நிகழ்த்திய முனைவர் க.தமிழமல்லன் அவர்களைப் பாராட்டி  நெ.நடராசன் நன்றிகூறினார்