கட்டுரை

திருமலை நாயக்கர் ஆட்சியை எதிர்த்த பாண்டியர் ஐவர் – நா.வானமாமலை

தலைப்பு- நாயக்கரை எதிர்த்த ஐவர் :thalaippu_thirumalainayakkarai_ehirtha_pandiyarayvar

திருமலை நாயக்கர் ஆட்சியை எதிர்த்த பாண்டியர் ஐவர்

 

  தமிழ்நாட்டில் விசயநகர அரசர்களின் சார்பாளர்கள்(பிரதிநிதிகள்) 16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரியத் தொடங்கினர். அதற்கு முன் தமிழ் நாட்டை ஆண்ட பாண்டியர்களின் தலைமுறையினர் தென்பாண்டி நாட்டின் பல பகுதிகளில் சிற்றரசர்களாக இருந்தனர். அவர்கள் விசயநகர ஆட்சிக்கு உட்படாமல் பன்முறை மதுரை நாயக்கர்களை எதிர்த்துப் போர் புரிந்தனர். மறவர்களுக்கு இராமநாதபுரம் சேதுபதிகள் தலைமை தாங்கினர்.

  மதுரையில் முதன் முதல் நாயக்கர் ஆட்சியை நிறுவிய விசுவநாத நாயக்கனையும் அவனது தளவாயான அரியநாத முதலியையும் தென்பாண்டி நாட்டில் பாண்டியர்கள் ஐந்து பேர் எதிர்த்துப் போரிட்டனர். இக்கதையை ‘ஐவர் இராசாக்கள் கதை’ என்று நாட்டுக் கதைப் பாடல் விவரமாகக் கூறுகிறது. மறவர்களுடைய எதிர்ப்பு திருமலை நாயக்கன் காலம் வரை ஓயவில்லை. அக்காலத்தில் சேதுபதியின் படைத் தலைவனாக இருந்த சடைக்கத்தேவன் என்பவனை அடக்குவதற்காக விசயநகரத்துத் தலைமைத் தளவாயான இராமப்பய்யன் மதுரை வந்து சேர்ந்தான். இவர்கள் நடத்திய பெரும் போர் ‘இராமப்பய்யன் அம்மானை’ என்ற நாட்டுப்பாடலில் விரிவாக வருணிக்கப்பட்டுள்ளது.

  •  – பேராசிரியர் நா.வானமாமலை :
  • தமிழர் நாட்டுப்பாடல்கள்
  • பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் : peyar_gnanaprakasan_peyar

One thought on “திருமலை நாயக்கர் ஆட்சியை எதிர்த்த பாண்டியர் ஐவர் – நா.வானமாமலை

  • தூத்துக்குடி பரதவர்மபாண்டியரை பற்றி குறிப்பிடவில்லை.அவர்தானே பாண்டிய வம்சம்.சேதுபதிகள் போர்க்குடி தானே.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *