இவ்விதழ் அகர முதல னகர இறுவாய் (A to Z) எல்லா வகைச் செய்திகளையும் படைப்புகளையும் தாங்கி வெளிவரும் என்பதால்தான் அகர முதல என்னும் பெயர் தாங்கி வருகின்றது.  தமிழ் அமைப்பினரும் கட்சிகளின் கலை இலக்கிய அமைப்பினரும்  நடக்க இருக்கும்  நிகழ்ச்சிகளையும்  நடந்து முடிந்த நிகழ்ச்சிகளையும் படங்களுடன் அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.

இவ்விதழ் பல சிறப்பிதழ்களாகவும் அவ்வப்பொழுது தொல்காப்பியச் சிறப்பிதழ், சங்க இலக்கியச் சிறப்பிதழ், திருக்குறள் சிறப்பிதழ், காப்பியச் சிறப்பிதழ், பதினெண் கீழ்க் கணக்குச் சிறப்பிதழ், சிற்றிலக்கியச் சிறப்பிதழ், தனிப்பாடல் சிறப்பிதழ், இக்கால இலக்கியச் சிறப்பிதழ், சிறுகதைச் சிறப்பிதழ், புதினச் சிறப்பிதழ், பாவியச் சிறப்பிதழ், அறிவியல் சிறப்பிதழ், சட்டவியல் சிறப்பிதழ், கலைச்சொல்லாக்கச் சிறப்பிதழ், வீரவணக்கச் சிறப்பிதழ் முதலான தலைப்புகளில் வெளிவரும். அவற்றிற்கான படைப்புகளை இப்பொழுதே அனுப்பிவைக்கலாம்.