image-48170

ஆளுமையர் உரை 64,65 & 66  : இணைய அரங்கம்: 17.09.2023

கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி (திருவள்ளுவர், திருக்குறள் 418) தமிழே விழி!                                  தமிழா விழி!                                              தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 64,65 & 66  : இணைய அரங்கம் ஆவணி 31, 2057 ஞாயிறு  17.09.2023 தமிழ்நாட்டு நேரம்  காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட ...
image-48157

  இந்தித்திணிப்பு : அரசு குருடாகவும் செவிடாகவும் இருக்கலாமா?  – இலக்குவனார்திருவள்ளுவன்

இந்தித்திணிப்பு : அரசு குருடாகவும் செவிடாகவும் இருக்கலாமா? நாட்டு மக்கள் குறைகளை அரசு திறந்த கண் கொண்டு பார்க்க வேண்டும்; மூடாச்செவி கொண்டு கேட்க வேண்டும். மூடிய கண்ணினராயும் காதினராயும் இருப்பின் மக்கள் துன்புறுவதை அரசு அறிந்து களைய வாய்ப்பில்லாமல் போய்விடும். அதனால் அந்த அரசு நிலைக்காமல் போய்விடும். எனவேதான், அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை.   ...
image-48113

மத நம்பிக்கைகளில் அரசு குறுக்கிடலாமா? – இலக்குவனார் திருவள்ளுவன்

மத நம்பிக்கைகளில் அரசு குறுக்கிடலாமா? மத நம்பிக்கைகளில் அரசு குறுக்கிடக் கூடாது எனக் கூக்குரல்கள் எழும்புகின்றன. மூட நம்பிக்கைகளை அறுவடை செய்வோர், தங்கள் அறுவடைக்குக் குந்தகம் விளையுமோ என அஞ்சி இவ்வாறு எதிர்க்கின்றனர். உலக நாடுகள் அனைத்திலுமே மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சீர்திருத்தக் கருத்துகள் அந்தந்த நாட்டு அரசுகளின் மூலம்தான் நிறைவேறியுள்ளன. சீர்திருத்தவாதிகள் தங்கள் கருத்துகளைப் பரப்பி மக்களிடையே ...
image-48068

சனாதனம்: உதயநிதிக்கு நன்றி!- இலக்குவனார் திருவள்ளுவன்

சனாதனம்: உதயநிதிக்கு நன்றி! உதயநிதிக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது பா.ச.க.தானே! செல்லாக்காசாகப் போகும் பாசகவைச் செல்லுபடியாக்க வழி வகுத்ததால் பா.ச.க.தானே நன்றி சொல்ல வேண்டும் என்கிறீர்களா? மறுபுறம், இளைஞர் நலன்-விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகத் தமிழ்நாட்டில் இருந்த உதயநிதி தாலின் இன்றைக்கு இந்தியாவில் பேசு பொருளாக ஆகி உள்ளார். அதற்காகப் பா.ச.க.விற்கு உதயநிதிதானே நன்றி சொல்ல வேண்டும் ...
image-48035

புதுமை இலக்கியத்தென்றல், இலக்குவனார் நினைவரங்கம்

புதுமை இலக்கியத் தென்றல் தமிழுரிமைப் போராளி சி.இலக்குவனார் நினைவரங்கம் ஆவணி 18  , 2054 / 04.09.2023 ஞாயிறு மாலை 6.30 அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை தலைமை: அரிமா தா.கு.திவாகரன் வரவேற்புரை: செல்வ.மீனாடசி சுந்தரம் நினைவுரை: பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் நன்றியுரை: இராவணன் மல்லிகா
image-48032

இலக்குவனாரை மக்கள் மறக்கவில்லை, அரசு நினைக்கவில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்

இலக்குவனாரை மக்கள் மறக்கவில்லை, அரசு நினைக்கவில்லை! இன்றைய நாள் (03.09.2023) தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள். இதனை முன்னிட்டு இக்கட்டுரை எழுதப்பெறுகிறது. பொதுவாக இலக்குவனார் என்றால் பன்முக முதன்மை எண்ணங்கள் வரும். பள்ளியில் படிக்கும் பொழுதே தனித்தமிழில் கவிதைகள் எழுதியவர். புலவர் படிப்பு மாணாக்கராக இருக்கும்போது ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’ என்னும் ...
image-48003

இலக்குவனார் மாண்பும் இற்றைப் புலவரும் – பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்

இலக்குவனார் மாண்பும் இற்றைப் புலவரும் வெள்ளம்போல் தமிழர்களின் கூட்டம் அன்று   வீரத்தால் திரண்டெழுந்தபோது நம்மின் தெள்ளமுதத் தமிழ்ப்புலவர் என்ன செய்தார் திறனற்று வாய்மூடி இருந்தார்! ஆனால் கள்ளம்இல் குணம் கொண்டார் தமிழ்ப்ப கையைக் கனன்று எழுந்து தீய்க்கின்ற செந்தீ! அன்பை வள்ளல்போல் அளிக்கின்ற பெரிய ...
image-48011

தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 50ஆம் நினைவாண்டு – கட்டுரைப்போட்டி இறுதி நாள் 10.09.23

தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 50ஆம் நினைவாண்டு – கட்டுரைப்போட்டி இறுதி நாள் 10.09.23 என நீட்டிப்பு தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 50ஆம் நினைவாண்டை முன்னிட்டு யாவரும் பங்கேற்கும் கட்டுரைப்போட்டி குறித்து அறிவித்திருந்தோம். இப்போட்டியில் மொத்தம் 18 பரிசுகள் வழங்கப்பட உள்ளன. சித்தாலயா, (பேரா.மரு.செயப்பிரகாசு நாராயணன்) வழங்கும் முதல்பரிசு உரூ.5,000/- இலக்குவனார் மனநல மருத்துவமனை, (பேரா. மரு.செல்வமணி தினகரன்) வழங்கும் இரண்டாம் பரிசு உரூ.3,000 /, & ...
image-47992

தமிழ்ப்போராளி சி.இலக்குவனார் ஐம்பதாம் நினைவாண்டு உரையரங்கம்

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்.(திருவள்ளுவர், திருக்குறள் 28) தமிழ்க்காப்புக் கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஆவணி 07, 2054 ஞாயிறு 03.09.2023 தமிழ்நாட்டு நேரம் காலை 10.00 அணுக்க இணைய வழிக் கூட்டம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தமிழ்ப்போராளி சி.இலக்குவனார் ஐம்பதாம் நினைவாண்டு ...
image-47874

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 52 : அத்தியாயம் 11. தமிழ் மறுமலர்ச்சி 2/3

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 51 : அத்தியாயம் 11. தமிழ் மறுமலர்ச்சி 1/3 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ அத்தியாயம் 11. தமிழ் மறுமலர்ச்சி 2/3 ஆங்கிலம் இன்று உலகப் பொது  மொழியாகக் கருதப்படும் நிலையை அடைந்துள்ளது. ஆங்கிலேயரை இந் நாட்டினின்றும் விரட்டியவர்கள்கூட ஆங்கிலத்தை விடமாட்டோம் என்று உறுதிபூண்டுள்ளனர். இந்தியர்க்கு ஆங்கிலமே கண்ணும் காதும் என்று கருதுகின்றனர் பலர். உலக மக்களில் பத்தில் ...
image-47947

இந்திச் செயற்பாடு: அமித்து சா விற்குப் பாராட்டு!- இலக்குவனார் திருவள்ளுவன்

இந்திச் செயற்பாடு: அமித்து சா விற்குப் பாராட்டு! பல தேசிய மொழி இன மக்கள் வாழும் இந்தியாவில் பெரும்பான்மை இன மக்களின் தாய்மொழிகளுக்கு எதிராக நாளும் செயற்படுவதே இந்திய அரசின் செயற்பாடு. அண்மையில் சட்டப் பெயர்களை இந்தியில் மாற்றிய கொடுமைகூட அரங்கேறியது. இந்தியைப் பயன்படுத்துவோருக்கு இந்தியில் சட்டப் பெயர்கள் குறிக்கப்பெற்றுப் பயன்படுத்தி வந்துள்ளன. அவ்வாறிருக்க அனைத்து ...
image-47887

இலக்குவனாரின் ஐம்பதாவது நினைவாண்டில் மாணாக்கருக்கான உலகளாவிய போட்டிகள்

இலக்குவனாரின் ஐம்பதாவது நினைவாண்டில் மாணாக்கருக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகள் இலக்குவனார் நடுநிலைப்பள்ளி, வாய்மைமேடு உலகத்தமிழாராய்ச்சி மன்றம், அமெரிக்கக் கிளை இலக்குவனார் இலக்கிய இணையம் தமிழ்க் காப்புக் கழகம் உலகளாவிய போட்டிகள் இனிய தமிழ் பேசும், எழுதும் குழந்தைகளின் திறமையை வெளிக்காட்ட ஓர் அரிய வாய்ப்பு! மொத்தம் 24 ஆயிரம் உரூபாய்ப் பரிசுத் தொகை. - 4 பிரிவுப் போட்டிகள் பரிசு விவரம்: ஒவ்வொரு பிரிவிற்கும் முதல் பரிசு உரூ.3000/- இரண்டாம் பரிசு ...
image-47866

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 51 : அத்தியாயம் 11 தமிழ் மறுமலர்ச்சி 1/3

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 50 : பழந்தமிழும் தமிழரும் 10  தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 11. தமிழ் மறுமலர்ச்சி   தமிழ் என்று தோன்றியது என்று காலவரையறை செய்ய முடியாது; அது உலக மொழிகளின் தாய் என்று சொல்லக்கூடியது; இந்திய மொழிகளின் தாய் என்று எளிதே  நிலைநாட்டப்படும் பெருமையை உடையது. இனிய இலக்கியங்களையும் பண்பட்ட இலக்கணத்தையும் பெற்றிருப்பதனால் மட்டும் சிறப்புடையது அன்று. ...
image-47816

உலகத் திருக்குறள் மையம், திருக்குறள் ஆய்வரங்கம் 1021

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை உலகத்திருக்குறள் மையம் இணைந்து நடத்தும் வள்ளுவர் கோட்டத் திருக்குறள் ஆய்வரங்கம் 1021 ஆவணி 02, தி.ஆ.2054 / 19.08.2023 சனி காலை 10.00 இடம் : வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை. திருவள்ளுவர் வாழ்த்து வரவேற்புரை ஆய்வாளர்கள் அரங்கம் பொருள்: வள்ளுவர் கோட்டத் திருக்குறள் ஆய்வுகள் 1 திருக்குறள் ஒப்பாய்வுகள் பேரா.இரா.ஆரோக்கிய மேரி, சென்னை 2. திருக்குறள் சமூகவியல் ஆய்வுகள் திருக்குறள் ஆய்வாளர் ...
image-47804

கருத்தரங்கத்தினருக்குக் காலமறிதலும் திட்டமிடலும் தேவை! – இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்தரங்கத்தினருக்குக் காலமறிதலும் திட்டமிடலும் தேவை! யாராக இருந்தாலும் திட்டமிட்டுச் செயலாற்றத் தெரியவேண்டும்; காலமறிந்து பணியாற்றத் தெரிய வேண்டும். இருப்பினும் மாநாடு அல்லது கருத்தரங்கம் நடத்துநருக்கு மிகவும் இன்றியமையாதனவாக இவை உள்ளன. அவற்றில் பங்கேற்குநருக்கு அவையறிதலும் தேவை. முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர். என்கிறார் திருவள்ளுவர்(திருக்குறள் 640) ஆளுமையில் சிறந்து விளங்க விழைவோர் திருவள்ளுவா் கூறும் வினைத்தூய்மை, வினைத்திட்பம், வினைசெயல்வகை, ...
image-47738

தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 50ஆம் நினைவாண்டு – கட்டுரைப்போட்டி

தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 50ஆம் நினைவாண்டை முன்னிட்டு யாவரும் பங்கேற்கும் கட்டுரைப்போட்டி மொத்தம் 18 பரிசுகள்  சித்தாலயா, (பேரா.மரு.செயப்பிரகாசு நாராயணன்) வழங்கும் முதல்பரிசு உரூ.5,000/- இலக்குவனார் மனநல மருத்துவமனை, (பேரா. மரு.செல்வமணி தினகரன்) வழங்கும் இரண்டாம் பரிசு உரூ.3,000 /,  & மூன்றாம்  உரூ.2000/ நான்காம்  பரிசு ஐவருக்கு இலக்குவனார் இதழுரைகள் நூல் (விலை உரூ.600/-) ஐந்தாம் பரிசு ஐவருக்கு இலக்குவனாரின் படைப்பு மணிகள் நூல் ...
image-48221

ஊரும் பேரும் 50 : இரா.பி.சேது(ப்பிள்ளை): அகத்தீச்சுரம்

( ஊரும் பேரும் 49 : இரா.பி.சேது(ப்பிள்ளை): ஈச்சுரம் -தொடர்ச்சி) ஊரும் பேரும் அகத்தீச்சுரம்      நாஞ்சில் நாட்டில் கன்னியா குமரிக்கு அண்மையில் அகத்தீச்சுரம் என்னும் ஊர் காணப்படுகின்றது. ஆலயத்தின் பெயரே ஊர்ப் பெயராயிற்றென்பது தேற்றம். அக் கோயிலில் உள்ள கல்வெட்டில் ‘குமரி மங்கலத்துக்குத் திரு அகத்தீசுவரமுடைய மாதேவன் என வரும் தொடரால்குமரிமங்கலம் என்பது ஊரின் பெயராகவும், அகத்தீசுரம் என்பது ...
image-48286

தோழர் தியாகு எழுதுகிறார் 226 : அன்று ஈழத்தில், இன்று மணிப்பூரில் இனவழிப்பு

(தோழர் தியாகு எழுதுகிறார் 225 : வழக்கறிஞர் மகாதேவன் உரை-தொடர்ச்சி) அன்று ஈழத்தில், இன்று மணிப்பூரில் இனவழிப்பு 2008-09 காலத்தில் ஈழம் தந்த கவலையும் அதிர்ச்சியும் போல் இன்றைய மணிப்பூர் செய்திகள் அதிர்ச்சியும் கவலையும் அளிக்கின்றன. இலங்கையில் நடந்தது தமிழினவழிப்பு என்றால் மணிப்பூரில் நடப்பது குக்கி இனவழிப்பு. தமிழினவழிப்புக்கு சிங்களப் பேரினவாத மனநிலை துணை நின்றது போல், குக்கி இனவழிப்புக்கு ...
image-48280

தோழர் தியாகு எழுதுகிறார் 225 : வழக்கறிஞர் மகாதேவன் உரை

(தோழர் தியாகு எழுதுகிறார் 224 : வல்லியத்தின் பாலியல் வன்கொடுமை அரசியல் - தொடர்ச்சி) வழக்கறிஞர் மகாதேவன் உரை இனிய அன்பர்களே! “வல்லிய(பாசிச)ச் சட்டங்கள் – த.எ.த. (ஊபா), என்ஐஏ” என்ற தலைப்பில் 2023 சூலை 6ஆம் நாள் வல்லிய(பாசிச) எதிர்ப்பு மக்கள் முன்னணி நடத்திய கருத்தரங்கத்தில் தோழர் சேல் முருகன் தலைமையில், தோழர் அரி பரந்தாமன், ப.பா. மோகன், ...
image-47971

தமிழ் வளர்த்த நகரங்கள் 8 – அ. க. நவநீத கிருட்டிணன்: இலக்கிய மதுரை 2/2

(தமிழ் வளர்த்த நகரங்கள் 7 – அ. க. நவநீத கிருட்டிணன் : இலக்கிய மதுரை 1/2 தொடர்ச்சி) அத்தியாயம் 4. இலக்கிய மதுரை தொடர்ச்சி புதுப்புனல் விழா நடைபெறும் நன்னாளில் இத் துறைக்கண் குழலும் யாழும் முழவும் ஆகிய பல்வகை இன்னியங்கள் முழங்கும். அரசனால் தலைக்கோல் அரிவையென விருதுபெற்ற ஆடல் மகளிரும் பாடல் பாணரும் அத்துறையைச் சார்ந்த ...
image-48276

இரா.சண்முகநாதன் நூற்றாண்டு விழா, சென்னை

சிவகங்கை வழக்குரைஞர் மானமிகு இரா.சண்முகநாதன் நூற்றாண்டு விழா புரட்டாசி 12, 2054 --- 29.09.2023 வெள்ளி மாலை 6.00 இடம் : நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம், பெரியார் திடல், சென்னை 600 007 தலைமை : ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை: தோழர் இரா.நல்லக்கண்ணு பிறர் : அழைப்பிதழ் காண்க. இவண்: பெரியார் தன்மதிப்புப் பரப்புரை (சுயமரியாதைப் பிரச்சார) மையம்
image-48271

தோழர் தியாகு எழுதுகிறார் 224 : வல்லியத்தின் பாலியல் வன்கொடுமை அரசியல்

(தோழர் தியாகு எழுதுகிறார் 223 : கல்வியுரிமை மாநாட்டுத் தீர்மானங்கள் - தொடர்ச்சி) வல்லியத்தின்(பாசிசத்தின்) பாலியல் வன்கொடுமை அரசியல் இனிய அன்பர்களே! மணிப்பூர் மாநிலத்தில் சென்ற மே 4ஆம் நாள் நடந்த கொடுமை இந்திய நாடு முழுவதையும், எல்லைகளுக்கு அப்பாலும் கூட, அதிர்ச்சி கொள்ள வைத்துள்ளது. குக்கி இனப் பெண்கள் இருவரை மைதேயி சமூக ஆண்கள் குழு ஒன்று அம்மணமாக்கி ...
image-48235

தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார், 2. மாணவரும் தமிழும்

(தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார் , 1. தமிழ்க்கலை - தொடர்ச்சி) 2. மாணவரும் தமிழும் (15-10-51 அன்று பச்சையப்பன் கல்லூரித் தமிழ் மன்றத்தில் ஆற்றிய சொற்பொழிவு) தமிழ்த் தோழர்களே! இன்று இங்கே தமிழ் மன்றத்துவக்க விழாவுக்குத் தலைமை வகிக்கும்படி நீங்கள் கட்டளை இட்டிருக்கிறீர்கள். என்னுடைய உடல் எந்த நிலையிலே இருக்கின்றது என்பது உங்களுக்கு நன்கு தெரியும். முனைவர். ...
image-48254

தோழர் தியாகு எழுதுகிறார் 223 : கல்வியுரிமை மாநாட்டுத் தீர்மானங்கள்

(தோழர் தியாகு எழுதுகிறார் 222 : காமராசர் பிறந்த நாள்-தொடர்ச்சி) கல்வியுரிமை மாநாட்டுத் தீர்மானங்கள் இனிய அன்பர்களே! இளைஞர் அரண் கல்வியுரிமைப் பேரணி - மாநாடு, குடந்தை – 20232023 சூலை 16மாநாட்டுத் தீர்மானங்கள் (வரைவு) 1) 2004 சூலை 16ஆம் நாள் குடந்தை நகரில் கிருட்டிணா பள்ளியில் பற்றிய கொடுந்தீயில் 94 குழந்தைகள் உயிரோடும் கல்விக் கனவுகளோடும் மாண்டு போன ...
image-48140

பூங்கொடி 16 – கவிஞர் முடியரசன்: உலுத்தர் தொல்லை

(பூங்கொடி 15 – கவிஞர் முடியரசன்: பூங்கொடி அழுகையை அருண்மொழி மாற்றுதல்- தொடர்ச்சி) பூங்கொடி உலுத்தர் தொல்லை கடைத்தெரு வழியே காரிகை தனியாய் ஏகின் சிற்றினம் எதம் விளைக்கும் ;    50 நாகிளம் பருவ நல்லியல் மாதர் உறுதுணை யின்றி ஊரில் வெளிச்செலின் நரியென வேட்டை நாயெனத் தொடர்ந்தே ஊறுகள் செய்யும் உலுத்தர் பல்கினர் மக்கட் பண்பு மங்குதல் கண்டோம்           55 தெக்கணம் இப்படித் தேய்வது நன்றாே ? அல்லியின் வரலாறு வளநகர் ...
image-48050

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம்  851-864

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 831-850– தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 851-864 (சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் ...
image-48251

தோழர் தியாகு எழுதுகிறார் 222 : காமராசர் பிறந்த நாள்

(தோழர் தியாகு எழுதுகிறார் 221 : அவலமான கல்விச் சூழல் 2/2-தொடர்ச்சி) காமராசர் பிறந்த நாள் இனிய அன்பர்களே! இன்று (சூலை 15ஆம் நாள்) இளைஞர் அரண் – கல்வி உரிமை மாநாட்டுக்காகக் குடந்தையில் இருக்கிறேன். ஐயா சுப்பிரமணியம் அவர்களின் வீட்டில் தனியாக உட்கார்ந்து கணினியைத் தட்டிக் கொண்டிருந்தேன். ஐயாவின் மூத்த மகன் பாபு ஒருவரை அழைத்துக் கொண்டு வந்து ...
1 2 751