வாழ்ந்திடுமோ தமிழ்தான்! – இலக்குவனார் திருவள்ளுவன்

வாழ்ந்திடுமோ தமிழ்தான்!    நற்றமிழில் பேசுவது மில்லை அருந்தமிழில் எழுதுவது மில்லை பைந்தமிழில் பாடுவது மில்லை செந்தமிழில் பெயரிடுவது மில்லை கன்னித்தமிழில் கற்பது மில்லை இன்றமிழில் பூசிப்பது மில்லை மூவாத்தமிழில் முழங்குவதுமில்லை தமிழ்நெறியைப் போற்றுவது மில்லை தமிழனென்று எண்ணுவது மில்லை தமிழ் வாழ்க வெல்க  என்றால் வளர்ந்திடுமோ வாழ்ந்திடுமோ தமிழ்தான்!  இலக்குவனார் திருவள்ளுவன்

கனவு நனவாக! – ஆற்காடு க. குமரன்

கனவு நனவாக என் மொழி ஆட்சி மொழி என்று அரசாணை வெளியிட்டது எங்கு காணினும் என் மொழி பெயர்ப்பலகைகளில்   ழகரம் யகர ஒலிப்பின்றித் தமிழனின் நாக்கில் தவழ்ந்தது தலை நகர் கிளை நகர் அத்தனையிலும் தலைமையானதென் தமிழ் மொழி   வணிக மொழிகளில் கூட வலிமையானது என் தமிழ் மொழி வீதியில் நின்ற விவசாயிகள் வீட்டுக்கு வந்தனர்   நாட்டினர் விருந்தோம்பலுக்கு விதையிட்டனர் நாடாளும் மன்னர் எல்லாம் நல்லவனாயினர்   வழக்கு மன்றங்கள் எல்லாம் வழக்கின்றி வலு விழுந்தன காவல்துறை எல்லாம் ஏவல்…

இனித்தது உன் பெயர்! -ஆற்காடு க. குமரன்

இனித்தது உன் பெயர்!   திரும்பிப் பார்க்க வைத்தது நீ மட்டும் அல்ல உன் பெயரும் திரும்பத் திரும்ப உச்சரித்துப் பார்த்தேன் தேனாய் இனித்தது   எழுதி எழுதிப் பார்த்தேன் என் உயிரோடு ஒட்டிக் கொண்டது   பிரிவின் போது எல்லாம் படித்துப் பார்த்தேன் பரிவாய் உணர்ந்தேன் என் பெயரோடு சேர்த்து எழுதிப் பார்த்தேன் ஏழு பிறவி இனித்தது உன் பெயரைப் பிரித்துப் பார்த்தேன் உறைந்த பிணமாய் உணர்ந்தேன்   உன்னோடு வாழ விட்டாலும் என்னோடு வாழும் உன் பெயரோடு நான் இன்னும் உயிரோடு…

நின்னை நீ மதி! அதுவே நிம்மதி! – ஆற்காடு க. குமரன்

நின்னை நீ மதி! அதுவே நிம்மதி!   உன் நிழல் கூட உனக்குச் சொந்தமில்லை! அது உன்னை ஊடுருவ முடியாத ஒளிக்கதிரின் பிம்பம்   மெய்யும் பொய்யே தான் உயிர் எனும் மெய் உன்னை விட்டு விலகும் போது   உனக்குள் ஊடுருவும் இயற்கையும் இதயமும் மட்டுமே உண்மை   உனக்குள் இருக்கும் காற்றுதான் உன்னைச் சுற்றியும் இருக்கிறது உள்ளும் வெளியும் உலவும் காற்று உனக்குள் இல்லாமல் போனால் இந்தப் பூவுலகும் உனக்கில்லை!   நீ, நீயாக இரு! உன் நிழல் கூடக் கருப்பாகத்…

காதல் — ஆற்காடு க. குமரன்

காதல் காயப்படுத்தி விட்டுக் களிம்பு பூசுவதும் கட்டப்படுத்திவிட்டுக் கண்ணீர் வடிப்பதும் பாவம் செய்து விட்டு மன்னிப்பு கேட்பதும் துரோகம் செய்து விட்டு துக்கம் கொள்வதும் பாதிக்கப்பட்டவர்க்கு பரிகாரம் அல்ல நொடி நேரத் தவற்றுக்கு நொண்டிச் சாக்கு நொந்த மனம் தந்த தண்டனை பிராயச்சித்தம் பிரியாத என் சித்தம் ஏற்றுக்கொள் குற்றவாளிக் கூண்டில் கூனிக்குறுகி நான்! இவண் ஆற்காடு க. குமரன் 9789814114  

ஐந்தறிவின் அலறல் – ஆற்காடு க.குமரன்

ஐந்தறிவின் அலறல்   நேர்ந்து விட்டால் போதும் நான் எங்காவது வாழ்ந்து விட்டுப் போவேன் பலி கொடுக்கிறேன் என்கிறான் கிலி பிடிக்கிறது எனக்கு   பேரம் இவனுக்கும் கடவுளுக்கும் சோரம் போவது என் உயிர்   நீரைத் தெளித்தால் நிச்சயம் தலையாட்டும் எல்லா உயிரும்   மௌனம் சம்மதம் மனிதனுக்கு மட்டும் தானா? மௌனமாய் இருந்திருக்கலாம்…   மஞ்சள் நீரைத் தெளித்ததால் மண்டையை மண்டையை ஆட்டியது மரணத்திற்கு வழிவகுத்தது   சாதி மத பேதம் பார்ப்பதில்லை சாப்பிடுவதில் மட்டும் அவனிடம் வரம் பெற அறுபடும் …

ஆழிப் பேரலையா? எமனின் கூலிப் படையா? – ப.மு.நடராசன்

ஆழிப் பேரலையா? எமனின் கூலிப் படையா?   நானூற்று அறுபது கோடி அகவை மூதாட்டி பூமித்தாய் பூமியும் கடலும் பெற்ற குழந்தைகள் ஏராளம் ஏராளம் தாய் என்று கும்பிட யாருமில்லையே அவற்றிற்கு மனிதன் பிறந்த பிறகு கிடைத்த மதிப்பு தாய்ப்பட்டம் கடலன்னையின் சீர்வரிசை குடிநீரையே சிக்கனப் படுத்தத் தெரியாத ஊதாரி மனிதனுக்கு எத்தனை முறைதான் தூது விடுவது மேகத்தை? வெள்ளத்தை விழுங்கிப் பூமியைக் காப்பதும் பகைவர் தீண்டாது பாதுகாப்பதும் இப்படியாகக் கடலன்னையின் சீர்வரிசை எத்தனையோ! தத்துப்பிள்ளையின் வெகுமதி கருவைச் சிதைத்து முத்தைக் களவாடுவதும் காலைக்கடன்…

கிறித்துநாள் வாழ்த்து – ஆற்காடு க. குமரன்

கிறித்துநாள் வாழ்த்து   என் பாவங்களைச் சுமப்பது நீரே உண்மையானால் என் பாவங்களால் பாதிக்கப்பட்டவரைச் சுமப்பது யார்?   பாவங்களைச் சுமப்பது மேன்மையா பாதிக்கப்பட்டவனைக் காப்பது மேன்மையா?   குற்றங்கள் மன்னிக்கப்பட்டால் குற்றங்கள் குறைந்திடலாகுமோ குற்றங்களை மன்னிப்பது குற்றங்களுக்குத் துணைபோவது அல்லவா?   இயேசுவின் இரத்தம் செயம் வாசகம் வாசித்தேன் வருத்தம் மேலிட்டது  இரத்தம் சிந்தும்  நீங்கள் பாவம் அல்லவா?   உயிர்களிடத்தில் அன்பு வை உரக்கச் சொன்ன மதம் உயிர்ப்பலி இடுகிறது இரத்தம் செயம் என்ற உங்கள் மதம் உயிர்ப்பலியை மறுக்கிறது.  …

கடிகாரக் கடவுள் – ஆற்காடு க. குமரன்

கடிகாரக் கடவுள் ஒரே நாளில் அம்பானி ஆக முடியும் என்று எவனாவது சொன்னால் நம்பாதீர்கள்! ஒரே நாளில் அடிமையாகக் கூட ஆக முடியாது   வினை என்னவோ ஒரு நொடிதான் விளைவுக்கு மட்டும் காலம் தேவைப்படும் கடவுள் இருக்கிறானோ இல்லையோ ஆனால் காலம் இருக்கிறது காலம் இருப்பதால்தான் நீயும் அதைக் கடந்து கொண்டிருக்கிறாய் காலம் உன்னை முந்தி கடந்து கொண்டிருக்கிறது   கடவுள் தண்டிக்கிறானோ இல்லையோ காலம் தண்டிக்கிறது நாளும் புரிகிறது ஞாலம் சுழல்கிறது   காலம் தன் கடமையைச் சரிவர செய்வதால்தான் பிறப்பும்…

சொல்லாத என் கனவு – ஆற்காடு க. குமரன்

சொல்லாத என் கனவு சொல்லாத என் கனவு பசி இல்லாத பாமரன் யாசகம் கேட்கா யாக்கை விற்கப்படாத கல்வி   சொல்லாத என் கனவு கூட்டணி இல்லாத அரசு ஊழல் செய்யாத அதிகாரிகள் சாதி இல்லாத சமுதாயம்   பதிலுக்குச் சிரிக்காத காந்தி பதவிக்கு ஏங்காத அரசியல்வாதி பரிகாரம் சொல்லாத ஆன்மீகவாதி பலியாடு ஆகாத பக்தன்   சிபாரிசு இல்லாத வெற்றி சித்திரவதை படாத மரணம் சிலந்தி பின்னாத வலை சிந்தனை சிறந்த உள்ளம்   உயிர்ப் பயம் இல்லா உடல் உறவு நலிவு…

கானல் கனா – ஆற்காடு க. குமரன்

கானல் கனா சொல்லாத கனவு செல்லாமல் போனது ஆணாகிய என் வயிற்றில் அம்மா மகவாய்   இதயத்தில் சுமப்பவனையே இடையிலும் சுமக்கும் பெண்கள் இருப்பதாய்க் கண்ட கனவு…   கண்ணைத் திறந்து கடவுள் கண்டதாய்க் கண்ட கனவு கட்டமும் நட்டமும் இல்லாமல் இருப்பதாகக் கண்ட கனவு   கண்ணை மூடியதும் காணும் அவளென் கண் முன்னே நிற்பதாய்க் கண்ட கனவு சாதிக்கு இறுதிச்சடங்கு செய்து சமாதியானதாகக் கண்ட கனவு   பொழுதுபோக்கு பொழுதுபோக்கு என்று ஆயுள் பொழுதைப் போக்காமல் பொறுப்போடு இந்தச் சமுதாயம் நடந்து…

இந்தியும் சமக்கிருதமும் எங்கும் வேண்டா! – ஆற்காடு க. குமரன்

    இந்தியும் சமக்கிருதமும் எங்கும் வேண்டா!   நடுவண் அரசின் நையாண்டித்தனம் மாநில அரசின் மெத்தனம் மக்கள் என்ன மத்தளமா ஆட்சி என்ன அடிமைக் கொத்தளமா?   தாய்மொழி  தாய்மையின் மொழி வாய்மொழி வாய்மையின் மொழி மற்ற மொழிகள் மத்தியின் சதி   வக்கற்று வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு . . . திணிப்பவரை வந்த திசையில் விரட்டும் உன் தாய் தந்தையரைத் தான் முதியோர் இல்லத்தில் விட்டு விட்டாய் உன் தாய்மொழியை யாவது உன்னோடு வைத்துக் கொள் ஊர் மேல் விடாதே…

1 2 107