பா.ம.க.எதிர்ப்பைக் கொள்கையாகக் கொள்ள வேண்டா!:திருமாவுக்கு வேண்டுகோள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
பா.ம.க.எதிர்ப்பைக் கொள்கையாகக் கொள்ள வேண்டா!:திருமாவுக்கு வேண்டுகோள்! விடுதலைச்சிறுத்தைகளின் நல்ல கொள்கைகள் இடையே ஒரு குறிப்பிட்ட வகுப்பாருக்கு எதிராகச் செயற்படுவதையே கொள்கையாகக் கொள்வது பெருந்தவறு என்பதை அதன் தலைவர் தொல்.திருமாவளவன் உணர வேண்டும். அனைத்துக் கட்சிகளும் மாறுபட்ட கொள்கைகளுடன் இருப்பது இயற்கை. என்றாலும் கொள்கை யடிப்படையிலும் அவற்றின் அடிப்படையிலான செயற்பாட்டு அடிப்படையிலும் வேறுபாடுகள் இருந்தாலும் ஒவ்வொரு கட்சியும் பிற கட்சிகளை எதிரிக்கட்சிகளாக் கருதி பகைமை பாராட்டுவது நல்லதல்ல. தமிழ்நாட்டின் இரு பெரும் கட்சிகளான வி.சி.க.வும் பா.ம.க.வும் வெவ்வேறு கொள்கைகளைக் கொண்டிருந்தாலும் ஒத்த கருத்துகளில் உடன்பட்டுச் செயற்படுவதுதான்…
‘அகரமுதல’ கணிப்பு சரியானது. இனியேனும் அரசியல் மேதைகள்(!) ஊடக உளறல்களை நிறுத்தட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
‘அகரமுதல’ கணிப்பு சரியானது. இனியேனும் அரசியல் மேதைகள்(!) ஊடக உளறல்களை நிறுத்தட்டும்! “இடைத்தேர்தல்களில் த.வெ.க.வாகை சூடட்டும்!” எனத் தெரிவித்திருந்தோம். அதன்படியே சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் நடைபெற்ற மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் வாகை சூடியுள்ளது. “த.வெ.க. கூட்டணி புதிய கட்சிகளை இணைத்துள்ளது. இதனால் அமைந்த மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வலுவாக உள்ளது” எனக் குறிப்பிட்டிருந்தோம். தேர்தல்முடிவுகள் இதன் வலுவை மெய்ப்பித்துள்ளது. “த.வெ.க. வெற்றி பெற்றாலும் உண்மையான வெற்றியாகக் குறிப்பிடாமல் அதிகார வலிமையால் பெற்ற வெற்றி என்றுதான் கூறுவர். கூறிவிட்டுப் போகட்டும்.” என்றோம். அதன்படிதான்…
ஆட்சி நிலைக்க இடைத்தேர்தல்களில் த.வெ.க.வாகை சூடட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஆட்சி நிலைக்க இடைத்தேர்தல்களில் த.வெ.க.வாகை சூடட்டும்! வரும் அட்டோபர் 6 அன்று மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகள்அடிப்படையில் கணக்கிட்டு யார் வெற்றி பெறுவார் எனக் கணிப்பது வழக்கம். ஆனால் பொதுத்தேர்தலுக்கும் இடைத்தேர்தலுக்கும் இடையில் கட்சி அணிகள் இடம் மாறியதால் அதற்கேற்பவே கணக்கிட வேண்டும். பொதுத்தேர்தலின்போது இருந்த கூட்டணிக் கட்சிகள் இன்றைக்குத் தி.மு.க. கூட்டணியிலும் அதிமுக கூட்டணியிலும் இல்லை. அதே நேரம் த.வெ.க. கூட்டணி புதிய கட்சிகளை இணைத்துள்ளது. இதனால் அமைந்த மதச்சார்பற்ற…
Deepfake – ஆழேய்ப்பு எனலாம் -இலக்குவனார் திருவள்ளுவன்
அயற்சொல் களைய முதல்வர் ச.சோ.விசய் நடவடிக்கை எடுத்திடுக! Deepfake – ஆழேய்ப்பு எனலாம் இப்போது செய்திகளில் அதிகம் இடம் பெறும் சொல் ‘டீப் பேக்’ என்பது. நல்ல செய்தி என்பதையே ‘குட்நியூசு’ எனக் குறிப்போர் இதனைத் தமிழில் குறிக்க வேண்டும் என எண்ணமாட்டார்கள். எனினும் படிப்பவருக்குப் புரியும் வகையில் தமிழில் சொல்வதே முறை. டீப் பேக் அல்லது டீப்ஃபேக் – Deepfake – என்றால் என்ன? டீப்ஃபேக் (Deepfake) என்பது செயற்கை நுண்ணறிவு (AI) எனப்பெறும் நுண்மாண்புலத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உண்மையில் நடக்காத ஒரு…
திருக்குறள் பாதையில் முதல்வர் ச.சோ.விசய் – இலக்குவனார் திருவள்ளுவன்
– திருக்குறள் பாதையில் முதல்வர் ச.சோ.விசய் தமிழக முதல்வர் தமக்கு அறிமுகமானவர்களையே பொறுப்புகளில் அமர்த்துவதாகக் குறையாகக் கூறி வருகின்றனர். அண்மையில் முதல்வர், திரைப்படக் கல்லூரித் தலைவராக ஒளிப்பதிவாளர் மனோசு பரமஃகம்சா என்பவரை அமர்த்தியுள்ளார். இதற்குத் தம் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்தவரைத் தலைவராக அமர்த்தியுள்ளார்; நண்பரை அமர்த்தியுள்ளார் என்றெல்லாம் குறை கூறுகின்றனர். வேறு எதுவும் பழிச்சொல் கூற வழியில்லை என்பதற்காக இவ்வாறு கூறுகின்றனர் என நன்கு தெரிகிறது. ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும். (திருக்குறள், ௨௱௬௰௪ – 264) என்கிறார் திருவள்ளுவர்….
இன்னும் ஆங்கிலேயருக்கான ஆட்சியாகத்தான் தலைமைச்செயலகத்தினர் கருதுகின்றனரா? – இலக்குவனார் திருவள்ளுவன்
இன்னும் ஆங்கிலேயருக்கான ஆட்சியாகத்தான் தலைமைச்செயலகத்தினர் கருதுகின்றனரா? நேற்று தமிழ் வளர்ச்சி-பள்ளிக்கல்வி அமைச்சர் இராசுமோகன், “அரசாங்கம் எப்போதும் தமிழ் மொழிக்கும், தமிழ்த்தாய் வாழ்த்திற்கும் முதல் முதன்மைத்துத்தையே அளிக்கும். இது வெறும் மேடைப் பேச்சோடு நின்றுவிடாமல், அதற்கான சட்டப்பூர்வமான முறைகள் அனைத்தும் சரியாக பின்பற்றப்படும். எங்களை பொறுத்தவரை மாநிலத்தின் நலனே மிக முக்கியமானது.” என்று கருத்து தெரிவித்துள்ளார். இக்கருத்தைத் தெரிவித்தமைக்காக அவரையும் அரசையும் அரசை வழிநடத்திச் செல்லும் முதல்வர் ச.சோ.விசய்யையும் பாராட்டுகிறோம். அதே நேரம் அரசிற்கு எதிராகவே தலைமைச் செயலகத்தினர் செயற்படும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுகிறோம்….
முதல்வர் மக்கள் நட்சத்திரம் ச.சோ.விசய்க்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!- இலக்குவனார் திருவள்ளுவன்
முதல்வர் மக்கள் நட்சத்திரம் ச.சோ.விசய்க்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! தமிழக வெற்றிக்கழகத்தின் வெற்றியைப் பொறுக்க மாட்டாதவர்கள் மக்கள் ஆதரவில் வெற்றி பெற்றதாக் கூறவில்லை; பொய்மையில் பிறந்த வெற்றி என்கின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியை விரும்புபவர்கள் அதற்காகச் சொல்லப்படும் காரணங்களில் ஈடுபாடு காட்டவில்லை. மக்கள் ஆதரவால் மக்கள் நட்சத்திரம் வெற்றி பெற்று மக்கள் முதல்வர் ஆனதாக மகிழ்கின்றனர். த.வெ.க.வின் வெற்றியை விரும்பாதவர்கள், தாங்கள் விரும்பிய கட்சியின் தோல்வியால் அதிர்ச்சியடைந்தவர்கள், தாங்கள் ஆட்சியில் செய்த தவறுகளை உணராதவர்கள் திரைப்படமாயையால்தான் ஆட்சியில் அமர்ந்ததாகக் கூறி வருகிறார்கள். கூறி வருவது…
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நியமன உறுப்பினர் முறை தேவை – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நியமன உறுப்பினர் முறை தேவை! தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே. எனவே, இது முழுமையான மக்கள் மன்றமாக உள்ளது. தற்போது, இந்திய மக்களவையில் (Lok Sabha) நியமன உறுப்பினர்கள் யாரும் இல்லை. 104-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 2019-இன் மூலம், ஆங்கிலோ-இந்தியன் சமூகத்தினரைக் குடியரசுத் தலைவர் நியமிக்கும் முறை 2020 சனவரி முதல் நிறுத்தப்பட்டுள்ளது. மக்களவையில் நியமன உறுப்பினர்கள் இல்லாவிட்டாலும், மாநிலங்களவையில் (Rajya Sabha) கலை, இலக்கியம், அறிவியல், குமுகத் தொண்டு போன்ற துறைகளில் சிறந்த…
தமிழரின் கார்த்திகை ஒளி விழாவே ஆரியத் தீபாவளியாக மாற்றப்பட்டது! – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழரின் கார்த்திகை ஒளி விழாவே ஆரியத் தீபாவளியாக மாற்றப்பட்டது! “திரும்பி வந்த கார்த்திகை நாளே தீபாவளி!” (தினச்செய்தி 27.10.2019) என்றும் “தமிழ்நாட்டில் தீபாவளி உருவான வரலாறு!”(அறம் இணைய இதழ் 30.10.2024) என்றும் முன்னரே எழுதியுள்ளேன். தீபாவளி குறித்த பெரியாரின் கட்டுரை, பிற இதழில் வந்தவை குறித்தும் அகரமுதல இதழில் வெளியிட்டுள்ளேன். இருப்பினும் தீபாவளி குறித்து உயர்வாகவே எழுதுவோர் பெருகி வருவதால் மீண்டும் எழுத வேண்டியுள்ளது.கடவுளுக்கு உருவம் இல்லை என்பதே தொன்மையான கருத்து. அருவமான கடவுளை வழிபடுவதற்காக ஒளி வழிபாட்டைப் பின்பற்றியிருக்கிறார்கள். மரபு வழியிலான ஒளி…
நோன்பு என்பது கட்டடமா? படமா? கண்காட்சியா? திறப்பு விழாவிற்குரிய வேறு எதுவுமா? – இலக்குவனார் திருவள்ளுவன்
நோன்பு என்பது கட்டடமா? படமா? கண்காட்சியா? திறப்பு விழாவிற்குரிய வேறு எதுவுமா? தலைப்பைப் பார்த்ததும் இசுலாமியருக்கு எதிராக அலலது நோன்பைப் பழிக்கும் வகையில் சொல்வதாகக் கருதக் கூடாது. தூய நோன்பு குறித்த சொல்லாட்சி தவறு என்பதைச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம். முதலில் இரமலான் நோன்பு குறித்துத் தெரிந்து கொள்வோம். (அல்லாவைத் தவிர வேறு இறைவன் இல்லை என்னும்) உறுதி யேற்பு(கலிமா), தொழுகை, நோன்பு, தானம், மெக்கா நகரில் உள்ள கஅபாவிற்குப்) புனிதப் பயணம்(Hajj) ஆகியன இசுலாத்தின் ஐந்து தூண்களாகும். கஅபா(Ka aba) என்றால்…
ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் புகழ் வணக்க நாள்
ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் புகழ் வணக்க நாள் “தமிழினத்தின் தேசிய அடையாளத்தை நிலை நிறுத்தி முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் வரையும் உறுதி குலையாது, படைநடத்தி, தான் வரித்துக் கொண்ட உயரிய லட்சியத்தையும் தனது வழிநடத்தலையும் உளமார ஏற்று உயிர்களை விதையாக்கிய மாவீரர்களின் தியாகங்களையும் இலட்சியக் கனவுகளையும் நெஞ்சிருத்தி, எதிரிப்படையோ இறுதிக் கணம் வரை துணிவோடு களமாடி பிரபாகரன், 2009-ம் ஆண்டு மே மாதம் 18-ஆம் நாள், வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் என்பதை தமிழீழ மாவீரர் பணிமனை அறியத் தருகிறது. பிரபாகரன், வீரச்சாவினை உறுதிப்படுத்தி நெஞ்சைப்…
தமிழர் திருநாள் கொண்டாட நமக்குத் தகுதி உள்ளதா? – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழர் திருநாள் கொண்டாட நமக்குத் தகுதி உள்ளதா? நலம், வளம், தளர்வின்மை, விடாமுயற்சி, நம்பிக்கை, ஆற்றல், வெற்றி, பெருமை, செல்வம், இன்பம், மகிழ்ச்சி, புகழ், உயர்வு, சிறப்பு, வாணாள், துணிவு, எல்லாமும் பெற்றுத் தமிழுடன் நூறாண்டு வாழ இத்தமிழர் திருநாளில் வாழ்த்துகிறேன். அதே நேரம் தமிழர் திருநாள் கொண்டாட நமக்குத் தகுதி உள்ளதா என்ற சிந்தனையும் எழுகிறது. தமிழர் திருநாளைத் தமிழர் திருநாள் என்றுகூடச் சொல்ல மனமின்றித் தமிழரே திராவிடர் திருநாள் என்கின்றனரே! தமிழ் நாடாக இருந்தாலும் பிற நாடாக இருந்தாலும் தமிழர் கொண்டாடும்…
