புலவர்கள் 3. – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 31 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 32 16. புலவர்கள் (தொடர்ச்சி) அக்காலத் தமிழ்மக்கள் இயலிசை நாடகங்களிலும், நடனங்களிலும் இன்பங் கண்டனர். அக்கால நடனம் எவ்வாறு நடந்தது என்பதை இயற்கைக் காட்சியில் இன்புறக் காட்டுகின்றார். இங்கு நடனப் பெண்ணாக மயில் தோன்றுகிறது. பார்த்து மகிழும் அவையினராக மந்திகள் அமருகின்றன. குழலிசையை இயற்கையில் துளைபட்ட மூங்கிலில் கோடைக்காற்று சென்று எழுப்புகின்றது. முழவாக அயலில் ஓடும் அருவியின் இன்னிசை இயம்புகின்றது. தூம்பு…
புலவர்கள் 2. – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 30 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 31 16. புலவர்கள் (தொடர்ச்சி) தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள் ஆய மூவரும் தனிச்சிறப்புடையவர்கள். தொல்காப்பியர் காலத்துக்குப் பின்பே தமிழ் வளர்ப்பதற்கெனச் சங்கம் தோன்றியிருக்க வேண்டும். ஆதலின், சங்கக் காலத்துக்கு முற்பட்டவராவார் தொல்காப்பியர். தொல்காப்பியர் காலம் கி.மு. ஏழாம் நூற்றாண்டு எனவும், திருவள்ளுவர் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு எனவும், இளங்கோ அடிகளின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனவும் கொண்டுள்ளோம். சங்கக்காலத்தைக் கி.மு….
புலவர்கள் 1. – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 29 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 30 16. புலவர்கள் புலவர்களே நமது மொழியின், பண்பாட்டின், நாகரிகத்தின் புரவலர்கள் ஆவார்கள். புலவர் எனும் தமிழ்ச் சொல் மிகவும் பொருள் பொதிந்த ஒன்றாகும். வெறும் மொழிப் புலமை மட்டும் உடையோர் புலவர் ஆகார். மொழிப் புலமையுடன் பண்புநலன் சான்று, ஏதேனும் ஒரு துறையில் வல்லுநராகவும், பிறர்க்கென வாழும் பெற்றியராகவும் இருப்போரே புலவர் எனும் பெயர்க்கு உரியவராவார். சங்ககாலப் புலவர்கள் அனைவரும் இவ்…
போர்கள் 2. – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 28 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 29 15. போர்கள் (தொடர்ச்சி) சங்கக்காலத் தமிழரசர்கள் அமைதி நோக்கோடு அருள் நோக்கமும் உடையவராவர். இக்காலத்தில் இரு பகைநாடுகள் போரிலீடுபட்டிருக்கும்போது அவ்விரு நாடுகளையும் சாராது, இரு நாட்டுப் படைகளிலும் துன்புறுவோர்க்குச் ‘செஞ்சிலுவைச் சங்கம்’ எனும் அருள்நெறி அமைப்பு அன்போடு சென்று ஆம் உதவிகளைச் செய்கின்றது. இது போன்றே அக்காலத்தில் உதியன் சேரலாதன் எனும் சேரநாட்டுப் பெருமன்னன், பாரதப் போர் நிகழ்ந்த காலத்து, பாண்டவர்…
பிசிராந்தையார் 2 : ந. சஞ்சீவி
(பிசிராந்தையார் 1 : ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 24 4. பிசிராந்தையார் ஒரு நாட்டிற்கு வாழ்வளிக்கும் தலை சிறந்த செல்வம் அந்நாட்டின் மண்ணும் மலையும் அல்ல; ஆறும் அடவியும் அல்ல. அந்நாட்டின் அழியாப் பெருஞ் செல்வம் அமிழ்தொழுகும் கனிவாய்க் குழந்தைகளே ஆம். வருங்கால உலகைப் படைக்கும் தெய்வங்களல்லரோ அச் செல்வச் சிறார்கள்? இவ்வுண்மையை நாடாளும் தலைவனாகிய பாண்டிய மன்னன் உணர்ந்திருந்தான்; தான் உணர்ந்ததோடன்றித் தான் உணர்ந்த அவ்வுணர்வைத் தமிழிலக்கியம் உள்ள வரை அதைக் கற்பார் உணர்ந்து பயன் பெறுமாறு சொல்லோவியமாகவும்…
போர்கள் – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 27 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 28 15. போர்கள் ‘போர்’ என்பது இன்று எல்லோராலும் வெறுக்கப்படும் ஒன்றாக முழங்கப்பட்டு வருகின்றது. ஆயினும், ஆங்காங்கே போர் ஆயத்தங்களும் போர் முழக்கங்களும் நிகழ்ந்துகொண்டு தானிருக்கின்றன. ” அமைதியை நிலை நாட்டவே போர் ஆயத்தங்களில் ஈடுபட்டுள்ளோம்” என்று பறையறையும் அரசுகளும் உள. கட்சிக் கொள்கை, சமய வேறுபாடு, பொருட்பற்று, பதவி விருப்பம் ஆயவைபற்றி ஆங்காங்கும் போர் இயல் காட்டும் நிகழ்ச்சிகள் தோன்றி…
பிசிராந்தையார் 1 : ந. சஞ்சீவி
(சங்கக்காலச் சான்றோர்கள் – 23: ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 24 4. பிசிராந்தையார் உலகின் வளர்ச்சிக்கும் வாழ்விற்கும் அடிப்படையாய் விளங்கும் உயிர் ஊற்று, அன்பு என்னும் நல்லுணர்வேயாகும். ஞாயிற்றின் ஒளியின்றேல் எவ்வாறு ஞாலம் அழிந்து ஒழிந்து நாசமாகிவிடுமோ, அவ்வாறே அன்பு என்ற உணர்வும் உயிர்கள் மாட்டு இல்லையாயின் உலகமும் உலக வாழ்வும் சீர் கெட்டுப் பாழடைந்து போதல் ஒருதலை. அதனலன்றோ வான்மறை தந்தருளிய பெரியார் வள்ளுவரும், ‘அன்பின் வழிய(து) உயிர்நிலை; அஃதிலார்க்(கு)என்புதோல் போர்த்த உடம்பு.’ …
தமிழர் வாணிகம் 2 – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 26 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 27 14. வாணிகம் ( தொடர்ச்சி) காவிரிப்பூம்பட்டினம், காயல்பட்டினம், தொண்டி, முசிரி முதலியன உலகப் புகழ் பெற்ற துறைமுகங்களில் தலைமையானவை. “உலகுகிளர்ந் தென்ன உருகெழு வங்கம் புலவுத்திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ இரவும் எல்லையும் அசைவின் றாகி”1 விரைந்து சென்று கொண்டிருந்தன. ”அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம்”2 திசைகள்தோறும் திரிந்தன. ”நெடுங்கொடி நுடங்கும் நாவாய்கள்” 3 துறைமுகங்கள் தோறும் தோன்றின. …
பெருந்தலைச் சாத்தனார்: 5 : ந. சஞ்சீவி
(பெருந்தலைச் சாத்தனார் 4 : ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 23 3. பெருந்தலைச் சாத்தனார் (தொடர்ச்சி) இவ்வாறு சுற்றமும் நட்பும் சூழ மகிழ்ந்து இனிதிருந்த சாத்தனார் சில காலம் கழித்துச் சங்கம் நிறுவிச் செந்தமிழ் புரக்கும் மாடமலி கூடல்மாநகர் காண விழைந்தார்; அவ்வாறே தொல்லாணை நல்லாசிரியர் கூடியிருந்து தமிழாய்ந்து வந்த அப்பழவிறல் மூதூரை அடைந்தார்; அவண் இருந்த சான்றோர்களுடன் உவப்பத் தலைக்கூடி, பன்னாள் இன்புற்றிருந்தார்; பின்னர்த் தம் ஊர் திரும்பும் வழியில் பாண்டியர் படைத்தலைவனும், கோடை மலைக் கிழவனும், வேளிர்…
தமிழர் வாணிகம் 1 – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 25 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 26 14. வாணிகம் மக்கள் நல்வாழ்வில் சிறப்புப்புற்று ஓங்குவதற்கு அவர்கட்கு வேண்டிய எல்லாப் பொருள்களும் எக்காலத்தும் குறைவின்றிக் கிடைத்தல் வேண்டும். ‘நாடென்ப நாடா வளத்தன’ என்று திருவள்ளுவர், குறிக்கோள் நாட்டைப்பற்றிக் கூறியிருப்பினும், ஒரு நாடு தன் மக்களுக்கு வேண்டிய யாவற்றையும் பெற்றிருத்தல் என்பது அரிதே. நாட்டில் உள்ள நகரங்களும் ஊர்களும் அவ்வாறே மக்கள் வாழ்வுக்கு வேண்டிய யாவற்றையும் பெற்றிருத்தல் இயலாது. ஆதலின், ஒரு…
பெருந்தலைச் சாத்தனார்: 4 : ந. சஞ்சீவி
(பெருந்தலைச் சாத்தனார் 3 : ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 22 3. பெருந்தலைச் சாத்தனார் (தொடர்ச்சி) ‘பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்கழிநல் குரவே தலை.’ (குறள், 657) எனும் மறைமொழி அறியாதவரா நம் புலவர் பெருமானார்? கடல் போலக் குமுறிய புலவர் நெஞ்சில் கருத்து மின்னல் ஒன்று மின்னியது. அம்மின்னல் ஒளி அவர்க்கு ஒரு நல்வழி காட்டியது. எழுச்சி கொண்டார் புலவர். உணர்ச்சிக் கடலாயிருந்த அவர் உள்ளம் உறுதி மலை யாயிற்று. அவர்…
தமிழர் பழக்க வழக்கங்கள் 2. – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 24 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 25 13. பழக்க வழக்கங்கள் (தொடர்ச்சி) பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தன் கணவனை இழந்து தீப்பாயச் சென்றவள் தன்னை அவ்வாறு செய்ய வேண்டாவென்று தடுத்தாரை நோக்கிக் கூறியதாக உள்ள புறநானூற்றுப் பாட்டில், “அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது அடையிடைக் கிடந்த கைபிழி பண்டம் வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய்து அட்ட வேளை வெந்தை வல்சி யாகப் பரற்பெய்…