உயிரறிவியலின் முன்னோடி – இலக்குவனார் திருவள்ளுவன்

அன்றே சொன்னார்கள் 4 உயிரறிவியலின் முன்னோடி   1902ஆம் ஆண்டு உலக மக்களை வியப்பில் ஆழ்த்தினார் அறிஞர் சகதீசு சந்திரபோசு. அவர் வெளியிட்ட உயிரினங்கள்-உயிற்றவற்றின் துலங்கல் தன்மை (Response in the Living and Non-Living) என்னும் நூலில் தாவரங்களுக்கு உயிர் உண்டு என்றதால் குழப்பமும்  வியப்பும் ஏற்பட்டு இறுதியில் உலகம் அவரைப் போற்றியது. நம்மிடம் உள்ள அறிவியல் புதையலை அறியாத நாமும் அறியாமையால் இன்று வரையும் அவ்வாறுதான் படித்து வருகிறோம். பாடல் வடிவில் உள்ள தமிழ் இலக்கிய உண்மைகள் யாவும் கற்பனையே என்னும்…

விலங்கறிவியல் – இலக்குவனார் திருவள்ளுவன்

விலங்கு என்பது குறுக்காக நடப்பவற்றைத்தான் குறிப்பிடும். கைகளில் குறுக்காக மாட்டப்படும் சங்கிலிக்காப்பை விலங்கு என்கிறோம் அல்லவா? வளைந்த அமைப்பு உள்ளதுதானே வில். எனவே, குறுக்காக உடலுடைய உயிரினங்கள் விலங்குகள் எனப் பட்டன. எனினும் அறிவியலில் பறவை வகைகளும் விலங்கு வகையில் அடங்கும். ஏன், மனிதனே ஒரு மன்பதை விலங்குதானே! தமிழ்ப் பெருநிலப்பரப்பு, புவி அமைந்த தொடக்கக் காலத்தில் இன்றைய ஆப்பிரிக்கா முதல் ஆசுதிரேலியா வரை இருந்தமையால் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்ந்திருந்தன. அவற்றையெல்லாம் ஆராயும் நோக்கில் மாணாக்கர் அறிவு வளம் பெருக வேண்டும். பொதுவாக இப்புவியில்…

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 9 : பெண்களைப் போற்றிய தொல்காப்பியர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 8 – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 9 பெண்களைப் போற்றிய தொல்காப்பியர்! “செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் பெண்பா லான “  (தொல்காப்பியம், பொருளதிகாரம், பொருளியல், நூற்பா 15) “செறிவு என்பது அடக்கம்; நிறைவு என்பது அமைதி; செம்மை என்பது மனங்கோடாமை; செப்பு என்பது சொல்லுதல்; அறிவு என்பது நன்மை பயப்பனவுந் தீமை பயப்பனவும் துணிதல்; அருமை என்பது உள்ளக் கருத்து அறிதலருமை” என்று இளம்பூரணர் உரை வகுத்துள்ளார். செப்பும் என்பதற்குக் கூறத் தகுவன கூறலும் என்கிறார் பேரா.முனைவர்…

வழிவழியாகச் சிறந்து வாழ்வாயாக…! – சங்கப்புலவர்கள் பொன்னுரை – 4: இலக்குவனார்திருவள்ளுவன்

(சங்கப்புலவர்கள் பொன்னுரை – 3 தொடர்ச்சி) வழிவழியாகச் சிறந்து வாழ்வாயாக…! வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப்பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்துபொலிமின்!(தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுளியல் 422) கடைச்சங்கக் காலத்தைத்தான் நாம் சங்கக்காலம் என்கிறோம். அதற்கு முற்பட்ட சங்கத்தைச் சேர்ந்ததுதான் தொல்காப்பியம். எனவே, தொல்காப்பியப் பொன்னுரைகளையும் சங்க இலக்கியப் பொன்னுரையில் சேர்த்துப் பார்ப்போம். கடவுள் வணக்கம் என்பது தமிழர்க்குரியதுதான். ஆனால், அதில் மூடநம்பிக்கை கலக்கக் கூடாது. தெய்வ முணாவே மாமரம் புட்பறைசெய்தி யாழின் பகுதியொடு தொகைஇஅவ்வகை பிறவுங் கருவென மொழிப.          …

தமிழ்க்காப்புக்கழகம்: சிறப்புக் கூட்டம்: தொல்காப்பியமும் அகத்தியமும்

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.   (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௨௰௩ – 423) தமிழே விழி!                                                                                                  தமிழா விழி!              தமிழ்க்காப்புக்கழகம் சிறப்புக் கூட்டம்: என்றென்றும் வாழும் தொல்காப்பியமும் என்றும் இல்லா அகத்தியமும் இணைய வழி நிகழ்வு நாள் : மாசி 11, 2056 / 23.02.2025 ஞாயிறு காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்        தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் சிறப்புரைஞர்கள் முனைவர் வா.நேரு மாநிலத்…

தொல்காப்பியர் புகழரங்கம் நிறுவுக! – தொல்காப்பிய மாநாட்டில் இலக்குவனார் திருவள்ளுவன் தலைமையுரை

தொல்காப்பியர் புகழரங்கம் நிறுவுக! முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டில் இலக்குவனார் திருவள்ளுவன் இணைய வழியில் ஆற்றிய தலைமையுரை (புரட்டாசி 04, 05 & 06, 2055 / 20, 21 & 22.09.2024– முதல் நாள்) எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டில் நேரிடையாகவும் இணைய வழியாகவும் பங்கேற்றுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பேராளர்களே! தமிழன்பர்களே, தொல்காப்பியப் பற்றாளர்களே, அனைவருக்கும் வணக்கம்.  மாநாட்டினைச் சிறப்பாக நடத்தியும் பொறுப்பாளர்களுக்கு வழிகாட்டியும் வரும் தொல்காப்பிய மன்றத் தலைவர்…

ஐந்திரம் தமிழ் நூலே! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஐந்திரம் தமிழ் நூலே! தொல்காப்பியப் பாயிரத்தில் “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்னும் அடியில் குறிப்பிட்டுள்ள ‘ஐந்திரம்’ என்பது தமிழ் நூலே. இது குறித்த கருத்துகள் அடிப்படையில் இக்கட்டுரையைக் காண்போம். இலக்கணம் அறியார் இலக்கண நூலை எங்ஙனம் எழுதியிருப்பர்? ஐந்திரம் என்பதைச் சமற்கிருத நூலாகச் சிலர் திரித்துக் கூறுகின்றனர். அதை நம்பும் சிலரும் அவ்வாறே கூறுகின்றனர். தொல்காப்பியர் காலத்திலோ அதற்கு முன்னோ சமற்கிருதத்தில் இலக்கண நூல் உருவாகவே வாய்ப்பில்லை. “ஆரியர்கள் தமிழர்களோடு உறவாடித்தான் தமிழ் இலக்கிய இலக்கணங்களை அறிந்தார்கள். ஆரியர்களுக்கு முதன்முதலில் இலக்கியம், இலக்கணம் என்றால்…

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார் : 04. உள்ளுறை உவமம்

(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 03. என் தமிழ்ப்பணி- தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி அத்தியாயம் 2. உள்ளுறை உவமம் உவமை இரண்டு வகைப்படும்: அறியாத ஒரு பொருளை விளக்க அறிந்த ஒரு பொருளை எடுத்துக்காட்டி இதுபோல் இருக்கும் அது எனக் கூறுவது ஒன்று. இது உலக வழக்கு, செய்யுள் வழக்கு இரண்டிலும் வரும். இது ஏனை உவமம் என்றும் அழைக்கப்படும். எவ்வித அடையும் இல்லாமல் வறிதே உவமம் என்றும் அழைக்கப்படும். மற்றொன்று செய்யுளில் மட்டுமே வருவது; அதுவே உள்ளுறை உவமம்; உவமப்போலி என்றும்…

கனடாவில் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு, 9/2024

கனடா – தொல்காப்பிய மன்றம் இலக்குவனார் இலக்கிய இணையம் இணைந்து நடத்தும் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு தொரண்டோ நகர், கனடா புரட்டாசி 04, 05 & 06, 2055 / 20, 21 & 22.09.2024 கட்டுரையாளர்கள் நேரடியாகவோ இணைய வழியாகவோ பங்கேற்கலாம் ஆய்வுத் தலைப்புகள் இணைப்பிதழில் உள்ளன. கட்டுரை ஒருங்குகுறி எழுத்துருவில் 12 உரு அளவில் 1.5 இடைவெளியில் இருக்க வேண்டும். இரு பக்க ஆய்வுச் சுருக்கம் வந்து சேர வேண்டிய நாள்: 01.05.2024 இற்கு முன் கட்டுரை ஏற்பு…

தொல்காப்பிய மன்றம், கனடா, ஆண்டு விழா

புரட்டாசி 06, 2054 சனி 23.09.2023 மாலை 6.00 கனடா, தொல்காப்பிய மன்றத்தின் 8 ஆம் ஆண்டு நிறைவு விழா தமிழிசைக் கலைமன்றம், இசுகார்பரோ அழைப்பிதழ் காண்க. முனைவர் செல்வநாயகி சிரீதாசு

1 2 12