பூங்கொடி 16 – கவிஞர் முடியரசன்: உலுத்தர் தொல்லை
(பூங்கொடி 15 – கவிஞர் முடியரசன்: பூங்கொடி அழுகையை அருண்மொழி மாற்றுதல்- தொடர்ச்சி) பூங்கொடி உலுத்தர் தொல்லை கடைத்தெரு வழியே காரிகை தனியாய் ஏகின் சிற்றினம் எதம் விளைக்கும் ; 50 நாகிளம் பருவ நல்லியல் மாதர் உறுதுணை யின்றி ஊரில் வெளிச்செலின் நரியென வேட்டை நாயெனத் தொடர்ந்தே ஊறுகள் செய்யும் உலுத்தர் பல்கினர் மக்கட் பண்பு மங்குதல் கண்டோம் 55 தெக்கணம் இப்படித் தேய்வது நன்றாே ? அல்லியின் வரலாறு வளநகர் ஈங்குநான் வந்தது கேளாய் களமர் கெழுமிய கண்கவர் பொழில்சூழ் மயில்நகர்…
பூங்கொடி 15 – கவிஞர் முடியரசன்: பூங்கொடி அழுகையை அருண்மொழி மாற்றுதல்
(பூங்கொடி 14 – கவிஞர் முடியரசன்: பூங்கொடி அழுகை – தொடர்ச்சி) பூங்கொடி அழுகையை அருண்மொழி மாற்றுதல் பூங்கொடி கண்ணிர் புத்தகம் நனைத்திட ஆங்கது கண்ட அருண்மொழி வெதும்பிக் கண்ணிர் மாற்றிக் கவலையை ஆற்ற எண்ணினள் குறுகி, ஏனோ கலங்கினை? மக்கள் கலக்கம் மாற்றிடல் ஒன்றே 25 தக்கதென் றெண்ணிச் சார்ந்தனம் ஈண்டு ; நாமே கலங்குதல் நன்றாே ? நம்பணி ஆமோ பூங்கொடி! அவலம் விட்டொழி மலர்வனம் சென்று மாற்றுக் கவலை அலர்பூங் காவுள் ஆறுதல் கிட்டும் ; 30 பூம்பொழில் தந்திடும்…
பூங்கொடி 14 – கவிஞர் முடியரசன்: பூங்கா புக்க காதை : பூங்கொடி அழுகை
(பூங்கொடி 13 – கவிஞர் முடியரசன்: அடிகளார் அறிவுரை – தொடர்ச்சி) 3. பூங்கா புக்க காதை பூங்கொடி அழுகை தேன்மொழிக் கருண்மொழி செப்பிய துயருரை ஆன்றரு பாலெனும் அருட்பா திளைத்திடும் பூங்கொடி செவியிற் புகுந்தது ; புகுதலும் ஓங்கிய பெருவளி உற்றிடு துகிற்கொடி படபடத் தாலெனப் பகைத்தனள் நெஞ்சம்; 5 மடமை யகற்ற மனங்கொளீஇ நிலத்துக் கடமை யாற்றுழிக் கைதவ மாங்கரால் பெற் றோ ரீங்குப் பட்டவெந் துயரால் உள்ளிற் புண்ணாய் உருகிய குருதி வெள்ளப் புனலாய் விழிவழி வழிந்தது; 10 கண்ணீ…
பூங்கொடி 13 – கவிஞர் முடியரசன்: அடிகளார் அறிவுரை
(பூங்கொடி 12 – கவிஞர் முடியரசன்: வடிவேல் படுகொலை- தொடர்ச்சி) பூங்கொடி அடிகளார் அறிவுரை மாதே! பிறப்பும் மாய்வும் இயற்கை 80யாதே முயலினும் தடுத்திடல் அரிதே’ பெறலருங் கொழுநன் பிணியால் மாண்டிலன் பிறரெவ ரும்பெறாப் பெருநிலை பெறவே ஆருயிர் ஈங்கனன் அவனேர் வீரன்; வீரப் பெருமகன் விடுபணி தொடர்ந்து 90 புரிந்தனி ராயின் பொருந்திய துயரம் முறிந்திடும்; அவனுளம் நிறைந்திடும் ஆதலின் முயன்றுறு செல்வம் முத்தமிழ்க் கல்வி உயர்ந்திட உதவுக, உழைப்பும் நல்குக, உழைப்பினை உதவுக கோவிலில் தமிழொலி குடிபுக வேண்டி 95 மேவிய…
பூங்கொடி 12 – கவிஞர் முடியரசன்: வடிவேல் படுகொலை
(பூங்கொடி 11 – கவிஞர் முடியரசன்: வள்ளி குறிக்கோள் வாழ்வினள்- தொடர்ச்சி) பூங்கொடி பழியுரை காதை வடிவேல் படுகொலை ஆங்ஙனம் அன்றியும் அரும்பெறற் காதலர், நிலத்தினில் மடமை நிறைந்திடல் கண்டு பகுத்தறி வூட்டும் பகலவன் ஆவர் ; 70 சொல்லின் செல்வர், சோர்விலர், தொண்டர், அல்லும் பகலும் ஆருயிர்த் தமிழே வெல்லும் வகையால் வீரம் விளைத்தவர்; நல்லவர் இவரை நரிக்குணம் விஞ்சிய கொல்லும் பகைக்குணம் கொண்டோர் ஒருசிலர் 75 தூண்டுதல் செய்யத் துணிவுடன் கூடி நீண்ட புளிமரக் கிளைதனில் நேயரை அந்தோ தூக்கி ஆருயிர்…
பூங்கொடி 11 – கவிஞர் முடியரசன்: வள்ளி குறிக்கோள் வாழ்வினள்
(பூங்கொடி 10 – கவிஞர் முடியரசன்: ஊரார் பழிமொழி- தொடர்ச்சி) பூங்கொடி பழியுரை காதை வள்ளி குறிக்கோள் வாழ்வினள் அவர்முதன் மனையாள் அரும்பெறல் வள்ளி, எவர்துயர்ப் படினும் எழுந்துடன் சென்று 50 துன்பம் நீக்கலில் இன்பங் கொள்வாள்; என்பும் பிறர்க்கே எனுங்குறி வாழ்வினள்; பொதுநலத் தொண்டே புந்தியிற் பதிந்தவள்; எதுசரி என மனம் ஏற்குமோ அதனைத் துயர்பல நேரினும் துணிவுடன் ஆற்றும் 55 அயர்விலாக் கணவர் அரும்பணிக் கியைந்தவள்; அடிமை வாழ்வில் அருவருப் புற்று விடுதலை வேட்டு வீறுற் றெழுந்த நல்லவன் ஒருவனை நாய்மகன்…
பூங்கொடி 10 – கவிஞர் முடியரசன்: ஊரார் பழிமொழி
(பூங்கொடி 9 – கவிஞர் முடியரசன்: அருண்மொழியின் இசைப்புலமை- தொடர்ச்சி) பூங்கொடி பழியுரை காதை ஊரார் பழிமொழி இசைத்தொழில் புரியும் இவள் இத் தொழிலை வசைத்தொழில் என்று வெறுத்திடல் என்கொல் ? 35செருக்கினள் கொல்லோ செல்வம் மிகவாய்ப் பெருக்கினள் கொல்லோ ? என்றுரை பேசி ஏளனம் செய்தனர் என்ற கேன்மொழிக்கு அருண்மொழி அலருக்குக் கூசாமை அருண்மொழி நகைத்தனள் அருளினள் சிலசொல்; பொதுப்பணி புரிவோர் புகழ்வும் இகழ்வும் 40 நினைத்திடல் வேண்டும் ஒருநிகர் எனவே; ஆருயிர்த் தோழி! அந்நாள் வடிவேற் பேருடைச் செம்மலைப் பேணிஎன் காதற்…
பூங்கொடி 9 – கவிஞர் முடியரசன்: அருண்மொழியின் இசைப்புலமை
(பூங்கொடி 8 – கவிஞர் முடியரசன்: பழியுரை காதை: வஞ்சியின் கவலை- தொடர்ச்சி) பூங்கொடி பழியுரை காதை அருண்மொழியின் இசைப்புலமை செவ்விய இசைநூல் இவ்வுல குள்ளன அவ்வள வும்பயில் அறிவினள்; பிறமொழி 20 இசைபல முயன்று வசையற வுணர்ந்து நசையுடன் ஆய்ந்து நம்தமிழ் இசைக்கே ஆக்கம் தந்தவள்; அரியதோர் இசைப்புனல் தேக்கிய கலைக்கடல்; தெள்ளிய இசையால் உலகை வென்றவள்; உயர்ந்தவள் குரலால் 25 குழலும் யாழும் கொட்டம் அடங்கின; பாடும் முறையாற் பாவை பாடுவள்; ஆடாள், கோணாள், அங்கக் குறும்புகள் நாடாள், அந்த நல்லிசைச்…
பூங்கொடி 8 – கவிஞர் முடியரசன்: பழியுரை காதை: வஞ்சியின் கவலை
(பூங்கொடி 7 – கவிஞர் முடியரசன்: ஒற்றுமை பரப்புக- தொடர்ச்சி) 2. பழியுரை காதை வஞ்சியின் கவலை முத்தமிழ் காக்கும் முதற்பணி பூண்ட நத்தும் வடிவேல் நன்மணம் புணர்ந்த பத்தினித் தெய்வம் பாங்குயர் அருண்மொழி இத்தரை உய்ய ஈன்றருள் மகளாம் 5 தத்தை பூங்கொடி தாயொடு மங்கலத் தைத்திரு நாளில் தமிழிசை வழங்க வாராத் துயரால் மயங்கிய வஞ்சி சோரா நின்றனள் ; தன்மகட் டோழி தேன்மொழி யைக்கூஉய்த் திருநகர் கூறும் 10 தீமொழி அருண்மொழிக் குரையெனச் செப்பினள், தேன்மொழி செல்லல் அவ்வுயிர்த் தோழியும் அருண்மொழி…
பூங்கொடி 7 – கவிஞர் முடியரசன்: ஒற்றுமை பரப்புக
(பூங்கொடி 6 – கவிஞர் முடியரசன்: விழாவயர்காதை தொடர்ச்சி) ஒற்றுமை பரப்புக எத்திசை நோக்கினும் எழுப்புக மேடை தத்தங் கொள்கை தவிர்த்து நாடும் மொழியும் வளம்பெற முன்னுவ தொன்றே வழியெனக் கருதி வழங்குக பேருரை முத்தமிழ் ஒலியே முழங்குக யாண்டும் சிறுசிறு பகையைச் சிங்தைவிட் டகற்றுக ஓரினம் காமென உன்னுக பெரிகே. வாழிய வாழிய காரினம் மழையைக் கரவா தருள்க பசிப்பிணி வறுமை பகைமை நீங்கி வசைக்கிலக் கிலதாய் வளர்க அரசியல் செல்வங் கல்வி சிறந்துமிக் கோங்குக வாழிய பொங்கல் வாழிய திருநாள்’ என்னுமிவ்…
பூங்கொடி 6 – கவிஞர் முடியரசன்: விழாவயர் காதை
(பூங்கொடி 5 – கவிஞர் முடியரசன்: தமிழ்த் தெய்வ வணக்கம் தொடர்ச்சி) 1. விழாவயர் காதை தமிழகச் சிறப்பு அலையெழு நெடுங்கடல் ஆடை உடீஇய நிலமகள் தனக்கு நிறைமதி முகமெனும் நாவலந் தீவின் நாடியாய் விளங்கும் பாவலர் புகழ் தரு பண்டைத் தமிழகம் மேவலர் அணுகா வீரங் கெழுமிய காவலர் மூவர் கயல்புலி வில்லெனும் கொடிமூன் றுயர்த்திக் கோலோச் சியது ; சங்கம் நிறீஇத் தமிழ்மொழி ஓம்பிப் பொங்கும் புகழ்வரப் பொலிந்த நன்னாடு; ‘யாதும் ஊரே யாவருங் கேளிர்’ என் றோதி ஓதி உயர்ந்ததோ…
பூங்கொடி 5 – கவிஞர் முடியரசன்: தமிழ்த் தெய்வ வணக்கம்
(பூங்கொடி 4 – கவிஞர் முடியரசன்: கதைச் சுருக்கம் தொடர்ச்சி) தமிழ்த் தெய்வ வணக்கம் தாயே உயிரே தமிழே நினை வணங்கும் சேயேன் பெறற்கரிய செல்வமே – நீயே தலை நி ன்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீயிங் கிலை யென்றால் இன்பமெனக் கேது. பாவால் தொழுதேத்திப் பாரில் நினையுயர்த்தும் ஓவாப் பணிசெய்ய உன்னுகின்றேன் – நாவாழும் மூவா முதலே முழுமைபெறும் செம்பொருளே சாவா வரமெனக்குத் தா. தென்பால் உகந்தாளும் தெய்வத் திருமகளே என்பால் அரும்பி எழுமுணர்வை – அன்பால் தொடுத்தே அணிதிகழச் சூட்டினேன் பாவாய்…