1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு

அன்புள்ள நண்பர்களே, தமிழர் திருநாள், பொங்கல் திருநாள், காணும் பொங்கல் ஆகியவற்றை முன்னிட்டுக் கிண்டில் செயலி மூலம் அமேசான் பதிப்பான ‘ வெருளி அறிவியல் ‘ நூலை இந்திய நேரப்படி: தை 01, 2051 / சனவரி 15, 2020 அன்று நண்பகல் 1:30 மணி முதல் தை 03, 2051 / சனவரி 17, 2020 அன்று நண்பகல் 1.29 வரை இலவயமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அறிவியல் தமிழில் ஆர்வம் உள்ளவர்களும் சொல்லாக்கங்களில் ஈடுபாடு கொண்டவர்களும்பொதுஅறிவுச் செய்திகளில் நாட்டம் கொண்டவர்களும்இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்…

பொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்!

தமிழர் திருநாளை உலகெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடுவோம்! தமிழரல்லாத திராவிடர்கள் திராவிடர் திருநாளைக் கொண்டாடட்டும்!   அனைவருக்கும் தமிழர்திருநாளாம் பொங்கல் திருநாள் திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்!   தமிழர்கள் வாழுமிடமெங்கும் தன்னுரிமையுடன் வாழவும் தமிழ் அங்கெல்லாம் தலைமையாய்த் திகழவும்  அனைவரும் முயன்று வெல்வோம்!   பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர்.   (திருவள்ளுவர், திருக்குறள், ௲௩௰௪ – 1034)   அகரமுதல மின்னிதழ் தமிழ்க்காப்புக்கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பில் அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் ,

திருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்

தை 02, 2051 / வியாழக்கிழமை 16.01.2020காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம் திருக்குறள் உலக நூல் மாநாட்டு ஆய்வரங்கம் -2திருக்குறள் நூலைப் படி அரசு வேலையைப் பிடிநூல் முதலான 6 நூல்கள் வெளியீட்டு விழாமுனைவர் கு.மோகன்ராசு அவர்களின் நூல்கள்பற்றியதிறனாய்வு அரங்கத் தொடக்க விழாவிருதுகள் வழங்கும் விழா

அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம், சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 14

தை 10, 2051 வெள்ளி 24.01.2020 மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை தெற்கு துகார் கட்டடம், கிரீம்சு சாலை, சென்னை 6 அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம் கலசலிங்கம்-ஆனந்தம் சேவா சங்கம் இணைந்து நடத்தும் சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 14 சிலப்பதிகார உரை: சிலம்புச் செம்மல் தமிழமுதன் கல்வி வள்ளல் கலசலிங்கம் விருதாளர்: கோவை திரு எம்.சுலைமான் பாரட்டு பெறும் தமிழறிஞர்: கவிஞர் நீரை அத்திப்பூ  

இலக்கிய அமுதம், திங்கள் கூட்டம், சனவரி 2020

மார்கழி 20, 2050 / சனி / 05.01.2020மாலை 5.00 மணி குவிகம் இல்லம், 6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம்,,24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை இலக்கிய அமுதம் பண்டித மா.கோபாலகிருட்டிணன்சிறப்புரை: திருமதி உசா மகாதேவன் இதழாளர் முத்துக்குமாரசாமிசிறப்புரை: ஓவியர் பத்மா வாசன்

இலக்கியச் சிந்தனை 593 & குவிகம் இலக்கிய வாசல் 57

மார்கழி 12, 2050 / சனி / 28.12.2019 மாலை 6.00 சீனிவாச காந்தி நிலையம். அம்புசம்மாள் தெரு,   ஆழ்வார்பேட்டை, சென்னை 600018   எழுத்தும் வாழ்க்கையும் : பதிப்பாளர் எழுத்தாளர் அகிலன் கண்ணன் குமுதமும் நானும்:  எழுத்தாளர் பாமா கோபாலன்

வெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு!

வெருளி அறிவியல் – உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு! அன்புசால் தமிழார்வலர்களே! வணக்கம். ‘வெருளி அறிவியல்’ என்னும் என் நூலை நான்  ஊக்குவிப்பு வெளியீட்டகமான கிண்டில் வெளியீட்டகத்தில் பதிந்துள்ளேன். உலக மொழிகளில் தாய்மொழியிலான முதல் வெருளி நோய்க் கலைச்சொல் விளக்க அகராதியாகவும் விக்கிப்பீடியாவில் கூட இல்லாத அளவுக்கு மிகுதியான வெருளிக் கலைச்சொற்களைக் கொண்ட பெருந்தொகுப்பாகவும் இந்நூல் உருவெடுத்துள்ளது. மருத்துவத் துறையினருக்கும் மருத்துவம் சார் துறையினருக்கும் அறிவியல் ஆர்வலர், கலைச்சொல் ஆர்வலர், தமிழ் ஆர்வலர் ஆகியோருக்கும் பொது அறிவு நூல்களை விரும்புவோருக்கும் ஏற்ற நூலாக…

கிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி?- இ.பு.ஞானப்பிரகாசன்

கிண்டில் தளத்தில்  ‘வெருளி அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி? நீங்கள் கிண்டில் வரையிலி(unlimited) திட்டத்தில் உறுப்பினராக இருந்தால் நூலை இலவயமாகவே படிக்கலாம். உங்கள் கிண்டில் குறுஞ்செயலியைத் (Kindle app) திறந்து அதில் இலக்குவனார் திருவள்ளுவன் என்றோவெருளி அறிவியல் ( Science of Phobia) என்றோ தேடல் பெட்டியில் எழுதினால் நூலின் பக்கம் வரும். அந்தப் பக்கத்தில் உள்ள இலவயமாகப் படித்திட   /  Read for Free பொத்தானை அழுத்தி நீங்கள் இலவயமாகவே நூலைப் படிக்க முடியும். கிண்டில் வரையிலி(unlimited)  திட்டத்தில் நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் நூலைப் பணம் கொடுத்து வாங்கிக் கிண்டில்…

இரு நூல்கள் வெளியீடு

மார்கழி 09, 2050 / 25.12.2019 புதன் மாலை 5.00 – 7.30 தேவநேயப் பாவாணர் மத்திய நூலக அரங்கம், சென்னை தருப்பணச் சுந்தரி (கண்ணாடி ஏந்தி நிற்கும் அழகி) (சிறுகதைத் தொகுப்பு)   உதிர்ந்தும் உதிராத…..(கட்டுரைத் தொகுப்பு) நூல்கள் வெளியீடு எசு வி வேணுகோபாலன், 94452 59691

புற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்

புற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர் இலண்டனில் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக முதுகுளத்தூர் இளைஞர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர் அல்லா என்.எசு.ஏ. நிசாமுதீன் ஆவார். இவரது மகன் சுபைர் அகமது. இவர் துபாயில் பள்ளி, கல்லூரிப் படிப்பை நிறைவு செய்தார். தற்போது இங்கிலாந்து நாட்டின் நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இந்த ஆராய்ச்சியின் மூலம் புற்றுநோய் வருவதை முன்னரே அறிந்து கொண்டு தேவையான மருத்துவத்தை மேற்கொள்ள உதவியாக இருக்கும். பல்கலைக்கழகத்தில் கடந்த 11-அன்று நடந்த பட்டமளிப்பு…