விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 1-இலக்குவனார் திருவள்ளுவன்

விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 1 விருது பெறுபவரை விருதாளர் என்பர். இவரோ தான் நிறைய விருதுகளைப் பெற வேண்டும் என்பதற்காகத் தன் பெயரையே விருதாளர் என மாற்றிக் கொண்டவர். தான் சூட்டிய பெயருக்கேற்ப சிறுகதைகளுக்காகவும் புதினங்களுக்காகவும் நிறைய விருதுகள் பெற்றுப் பாராட்டு பெறுபவர். அண்மையில் இவர் எழுதிய ‘வேர்களை மறக்கா விழுதுகள்’ என்னும் புதினம் சிறந்த புதினத்திற்காக அனைத்து இந்திய விருதினைப் பெற்றது. இதற்காகப் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் புகழ்பெற்ற ‘வி’ தொலைக்காட்சி நிறுவனத்தினர் இவரைப் பாராட்ட இவர் வீட்டிற்கு…

அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 65-67

(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 62-64-தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 65. அமைச்சர் பதவி தன் உடன் பிறந்தவனுக்கு மந்திரி பதவி கொடுக்கும் படி அரசனை வற்புறுத்திக் கொண்டிருந்தாள் அவன் மனைவி. அரசனும், அரண்மனையில் இருந்தபடியே தன் மைத்துனரை வரச்சொல்லி உரையாடிக்கொண்டிருந்தான். அப்போது வீதியில் ஏதோ வண்டிச் சத்தம் கேட்கவே, அரசன் ஏதோ யோசனை செய்து, உடனே தன் மைத்துனனிடம், ‘அது என்ன வண்டி? விசாரித்துவா’ என்று சொல்லி அனுப்பினான். மைத்துனனும் ஒடிப்போய் விசாரித்து வந்து, அரசனிடம் ‘நெல் வண்டி’ என்று கூறினான். அரசன்…

அறிவுக்கதைகள்நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 62-64

(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 59-61-தொடர்ச்சி) அறிவுக்கதைகள்  நூறு 62. இளவரசனும் அரசனும் அதிக வரி வாங்கி நாட்டு மக்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்தான் அந்நாட்டு அரசன். மக்கள் அனைவரும் ஒன்றுகூடித் தங்கள் மேல் கருணை காட்டுமாறு அரசனை மிகவும் மன்றாடி வேண்டினர். மறுநாள் அரசன் குடிமக்கள் அனைவரையும் அழைத்து, “தாங்கள் கோரிக்கைகளைப் பற்றிச் சிந்தித்தேன். இன்று முதல் நீங்கள் அனைவரும் வந்து, அரண்மனையிலிருந்து ஒரு மூட்டை நெல் எடுத்துக் கொண்டுபோக வேண்டும். ஒரு மூட்டை அரிசியாகத் திருப்பிக் கொண்டுவந்து கொடுத்துவிட வேண்டும். இது…

அறிவுக்கதைகள் நூறு – ரு. அரசு – அரசியல் : கி.ஆ.பெ.விசுவநாதம் : 59-61

(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 56-58-தொடர்ச்சி) அறிவுக்கதைகள்  நூறு ரு. அரசு – அரசியல்59. யார் தவறு? படிப்பறிவில்லாதவர் சட்டசபைத் தேர்தலில் நின்றார். வெற்றி பெற்றார். மந்திரியாகவும் ஆனார். அந்த ஊர்ப் பொதுமக்கள் மிகவும் மகிழ்ந்தனர் தங்கள் பள்ளிக்கூடக் கட்டடத் திறப்பு விழாவிற்கு அவரை அழைத்தார்கள். அவரும் இசைந்துவிட்டார். ஆனால் அங்கே என்ன பேசுவது என்பது தெரியவில்லை. தன் செயலரைக் கூப்பிட்டார்; பேசவேண்டிய பேச்சு – கேட்டுத் தெரிந்துகொண்டார். திறப்பு விழா மண்டபத்தே – “இது ஒரு நல்ல பணி; இது போன்ற…

அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 56-58 – சமூகம்

(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 53-55-தொடர்ச்சி) அறிவுக்கதைகள்  நூறு 56. மூத்த மாப்பிள்ளை ஒரு சமயம் நான் என் நண்பர் ஒருவர் வீட்டிற்குப் போயிருந்தபோது, அவர் தன் அருகில் இருந்தவரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். “இவர்தான் எங்கள் வீட்டு முதல் மாப்பிள்ளை. பெரிய மாப்பிள்ளையும் கூட. இவர் மிகவும் நல்லவர். ஏனெனில் எங்கள் குடும்பத்துக்குப் பெரிய உதவி செய்துள்ளார். இதற்காக எங்கள் குடும்பமே இவருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளது” என்று முகமலர்ச்சியுடன் கூறினார். நான் வியப்படைந்து, அப்படிப்பட்ட உதவி இவர் என்ன செய்தார்?”…

அறிவுக்கதைகள்நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 53-55

(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 50-52-தொடர்ச்சி) அறிவுக்கதைகள்  நூறு 53. மாப்பிள்ளை தேடுதல்! முப்பது வயதான தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடப் புறப்பட்ட ஒர் அந்தணனுக்கு கட்டுச் சோறு கட்டிக்கொடுத்து வழியனுப்பினாள் அவன் மனைவி. நடையாய் நடந்து, அலைந்து அலுத்துப்போய், ஒரு வீட்டுத் திண்ணையிலே அந்தணன் தங்கியபோது, தன் கவலையையெல்லாம் அந்த வீட்டுக்காரனிடம் சொன்னான். அது கேட்ட அவன், “எனக்கு ஒரு மகன் இருக்கிறான். வயது 32 ஆகிறது. வரதட்சணை எல்லாம் வேண்டா. உன் பெண்ணை அவனுக்கு மண முடிக்கலாம்” என்றான். அவனும்…

அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 50-52

(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 47-49-தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 50. வேலை வாங்கும் முதலாளி தன்னிடம் வேலைக்கு வரும் வேலைக்காரர்கள் அனைவனரயும் முட்டாள்கள் என்றே கருதி, எதையும் விபரமாக எடுத்துச் சொல்லி அனுப்புவார் முதலாளி. ஒரு சமயம், அவர் தன் வேலையாள் ஒருவனை அழைத்து, ‘நான் சொல்வதை மட்டும் நீ செய்தால் போதும். மற்றதைச் செய்யாதே’ என்று கண்டிப்பாய்ச் சொல்லி அனுப்பினார். அன்று மாலை குழாயிலிருந்து குடிநீர் கொண்டுவரக் குடத்தை கொடுத்து அனுப்பினார். “குடத்தை நன்றாக விளக்கி, உள்ளேயும் கை போட்டு நன்றாகக்…

அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 47-49

(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 44-46-தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 47. சவாரிக் குதிரை இங்கிலாந்தை ஆண்ட மகாராணி விக்குடோரியாவுக்கு ஒரு நாள் ஒர் ஆசை – தன் பேரனைத் (ஐந்தாம் சியார்சு) தூக்கி மகிழவேண்டும் என்பது. அதைப் பிறர் யாரேனும் பார்க்கப்படாதே என்ற அச்சம் வேறு இருந்தது. என் செய்வார்? சிறு குழந்தையைத் தூக்க ஆசை. மகாராணியாயிற்றே! யாரும் இல்லாத நேரம், ஒரு நாள் தான் பேரனைத் தன் தலைக்கு மேல்தூக்கி வைத்துக் கொஞ்சத் தொடங்கினார். இதனை, அந்த அரண்மனை ஆள் எங்கிருந்தோ…

அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 44-46

(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 41-43-தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 44. செட்டியாரும் காகமும் செட்டியாரின் கடையிலே தெரியாமல் ஒரு வடையை எடுத்துக்கொண்டு போனது காகம். மரத்தில் இருந்துகொண்டே அதைத் தின்னத் தொடங்கியபோது ஒரு நரி பார்த்துவிட்டது. நரி – “காக்கா காக்கா – உன் குரல் எவ்வளவு அழகாக – இனிமையாக இருக்கிறது, ஒரு பாட்டுப் பாடேன்” என்றது. காகம் அதை நம்பி, வாய்திறந்து – கா கா என்றது. உடனே மூக்கிலிருந்த வடை விழவே – அதை நரி எடுத்துக்கொண்டு ஓடிவிட்டது….

அறிவுக்கதைகள்நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 41-43: குடும்பம்

(அறிவுக்கதைகள்நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 39-40-தொடர்ச்சி) அறிவுக்கதைகள்நூறு 3.  குடும்பம்41. திருமண வீடு ஒரு வீட்டிலே திருமணம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தட்டி ஒரமாக நின்ற வேலைக்காரனை அங்கு வந்த அவனது நண்பன் அழைத்தான். ‘இங்கே எப்படி உன் வேலை?’ என்று கேட்டான். அதற்கு வேலைக்காரன், “சாதாரண நாளிலேயே இந்த வீட்டு வேலை இழவு வீட்டு வேலை மாதிரி இருக்கும். இப்ப கலியாண வீட்டு வேலை. பேரிழலாய் இருப்பதற்குக் கேட்பானேன்” – என்றான். “திருமண வீட்டிலே இழவு, பேரிழவு என்று பேசலாமா” என்று நண்பன்…

அறிவுக்கதைகள்நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 39-40

(அறிவுக் கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 36-38-தொடர்ச்சி) அறிவுக் கதைகள் நூறு 39. முதலாளிக்குத் திறமை இல்லை! பெரும் பணக்காரர் ஒருவர். தொழில் அனுபவமுள்ள ஒருவர், ஆக இருவருமாகக் கூட்டுச் சேர்ந்து நகைக்கடையைத் தொடங்கினார்கள். பத்து ஆண்டு ஒப்பந்தம்; ஆளுக்குப் பாதி இலாபம் எனக் கையெழுத்திட்டு கடை நடந்து கொண்டிருக்கிறது. மூன்று ஆண்டுகள் ஆயின, இதற்குள் உழைப்பாளி ஒரு வீடு கட்டிவிட்டான். நிலமும் வாங்கிவிட்டான். முதலாளிக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. “ஏதோ தவறு செய்கிறான்’ என்று சிலர் சொல்லியும் முதலாளி நம்பவில்லை. காரணம் இதுதான்…

அறிவுக்கதைகள்நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 36-38

(அறிவுக் கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 33-35-தொடர்ச்சி) அறிவுக் கதைகள் நூறு 36. கிளியும் ஓநாயும் ஒரு காட்டிலுள்ள ஆலமரத்தின்மேல் அமர்ந்திருந்த கிளியும், கீழே நின்றிருந்த ஓநாயும் இவ்வாறு பேசிக் கொண்டன : கிளி : ஓநாய் அண்ணே! ஏன் விசனமா இருக்கீங்க? ஓநாய் : உனக்குச் சங்கதி தெரியாதா கிளித்தங்கச்சி. நான் வேறே காட்டுக்கல்லவா போகப்போறேன். கிளி : ஏன் வேறு காட்டுக்குப் போறீங்க? ஓநாய் : இந்தக் காட்டிலிருக்கிற புலியும் சிறுத்தையும் என்னைக் கண்டால் கடிக்க வருதுங்க. மானும் முயலும்…

1 2 24